தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2016-21

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் 2016தொகு

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். எம். சீனிவேல் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆனால் பதவி ஏற்கும் முன்பு மே 25 ஆம் தேதி மரணம் அடைந்தார் இதை அடுத்து திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் 2016 நவம்பர் 19 அன்று நடந்தது. ஆளும்கட்சியான அதிமுக வேட்பாளர் ஏ. கே. போஸ் வெற்றி பெற்றார்.[1]

டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், 2017தொகு

இத்தொகுதியின் உறுப்பினரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா 2016 திசம்பர் 5 அன்று காலமானதையடுத்து இத்தொகுதிக்கு தேர்தல் 2017 ஏப்ரல் 12 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது, ஆனாலும், வாக்காளர்களுக்கு பணம், மற்றும் பொருட்கள் கொடுக்கப்பட்டதாக வந்த முறைப்பாடுகளை அடுத்து தேர்தலை நிறுத்துவதாக ஏப்ரல் 9 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

2017ஆம் ஆண்டு திசம்பர் 21 ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், பாரதிய ஜனதா சார்பில் கரு.நாகராஜன் மற்றும் சுயேட்சையாக டி. டி. வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட 59 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் 77.5 விழுக்காடு வாக்காளர்கள் தங்கள் வாக்கினைப் பதிவு செய்தனர். டிசம்பர் 24 ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 19 சுற்றுகளாக நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், சுயேச்சை வேட்பாளர் டி. டி. வி. தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,581 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றார்.[2]

திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், 2019தொகு

திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் சனவரி 28, 2019 இல் நடைபெற்று, வாக்கு எண்ணிக்கையானது சனவரி 31 அன்று நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.[3] பின் கஜா புயல் நிவாராணம் வழங்க வேண்டி இந்தத் தேர்தலை ரத்து செய்வதாக சனவரி 7 , 2019 இல் தேர்தல் ஆணையம் அறிவித்தது.[4]

பின்னணிதொகு

திருவாரூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி ஆகத்து 7 இல் மரணமடைந்தார். [5] எனவே அந்தத் தொகுதிக்கு சனவரி 31 இல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் அட்டவணைதொகு

தேதி நிகழ்வு
சனவரி 3, 2019 மனுத்தாக்கல் ஆரம்பம்
சனவரி 10, 2019 மனுத்தாக்கல் முடிவு
சனவரி 7 தேர்தல் ரத்து

முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள்தொகு

வேட்பாளர் கட்சி
பூண்டி கலைவாணன் திராவிட முன்னேற்றக் கழகம்[6]
எஸ். காமராஜ் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
சாகுல் அமீது நாம் தமிழர் கட்சி[7]

ரத்துதொகு

பின் கஜா புயல் நிவாராணம் வழங்க வேண்டி இந்தத் தேர்தலை ரத்து செய்வதாக சனவரி 7 , 2019 இல் தேர்தல் ஆணையம் அறிவித்தது.[8]

மேற்கோள்கள்தொகு

  1. "அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வெற்றிமுகம்". செய்தி. மாலை மலர் (2016 நவம்பர் 22). பார்த்த நாள் 26 நவம்பர் 2016.
  2. "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டிடிவி தினகரன் வெற்றி; திமுக டெபாசிட் இழந்தது". தி இந்து (24 திசம்பர் 2017). பார்த்த நாள் 25 திசம்பர் 2017.
  3. "திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் -நாமினேஷன்".
  4. "திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து". ஜீ நியூஸ்.
  5. "கருணாநிதி- மரணம்". டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  6. "திருவாரூர் இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர் அறிவிப்பு". நக்கீரன். 4 சனவரி 2019. https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thiruvarur-7/. பார்த்த நாள்: 4 சனவரி 2019. 
  7. "நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாகுல் அமீது".
  8. "திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து". ஜீ நியூஸ்.