தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி

தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி (Tamil Nadu National Law School), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள நாவலூர் கொட்டப்பட்டு ஊரகப் பகுதியில் அமைந்துள்ளது. இச்சட்டப்பள்ளி தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி சட்டம், 2012இன் படி நிறுவப்பட்டுள்ளது.[1]. இச்சட்டப்பள்ளி பல்கலைக் கழகத் தகுதி பெற்றது.

தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்2013
அமைவிடம்திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்நாவலூர் கொட்டப்பட்டு
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையத்தளம்http://www.tnnls.in/
தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி is located in தமிழ் நாடு
தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி
தமிழ்நாட்டில் அமைவிடம்
தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியின் கட்டிடம்

ஐம்பது ஏக்கர் நிலப்பரப்பில், நூறு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இச்சட்டப்பள்ளி 2012-2013 கல்வி ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாண்டு இளநிலைச் சட்டப் படிப்புகளும், இரண்டாண்டு முதுநிலை பட்டப் படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகிறது.[2][3]. இச்சட்டப்பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு பொது சட்ட நுழைவுத் தேர்வில் (Common Law Admission Test-CLAT) தேறியிருக்க வேண்டும் [4].

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு