தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014
தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014
இந்தியக் குடியரசின் பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஏப்ரல் 24, 2014 அன்று நடந்தது.
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
39 இடங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பச்சை = அதிமுக மற்றும் ஆரஞ்சு = தேசிய ஜனநாயகக் கூட்டணி |
தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் முன்னெடுப்புகள் தொகு
- வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை பொதுமக்களிடையே பரப்பும்முகமாக அரசு சார்பற்ற அமைப்புகள் இரண்டுடன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், ஒப்பந்தம் செய்தது.[1]
- தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக தேர்தலுக்கு முந்தைய நாளில் மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.[2] தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள 144 தடையுத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தியது.[3]
தேர்தல் அட்டவணை தொகு
- தேர்தலின் முக்கிய நாட்கள் காலக்கோடு[4]
தேதி | நிகழ்வு |
---|---|
மார்ச் 29 | மனுத்தாக்கல் ஆரம்பம் |
ஏப்ரல் 5 | மனுத்தாக்கல் முடிவு |
ஏப்ரல் 7 | வேட்புமனு ஆய்வு ஆரம்பம் |
ஏப்ரல் 9 | வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் |
ஏப்ரல் 24 | வாக்குப்பதிவு |
மே 16 | வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு |
தேர்தல் கூட்டணிகள் தொகு
அதிமுக தொகு
- தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதென தமிழக வாழ்வுரிமை கட்சியும், சமத்துவ மக்கள் கட்சியும் முடிவு செய்தன.[5]
- கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக, 4 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றினை அதிமுக அமைத்தது.[6]
- தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அதிமுகவுடனான கூட்டணி முறிந்ததாக இடதுசாரிகள் தெரிவித்தனர்.[7][8] இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது என முடிவு செய்துள்ளதாக இவ்விரு கட்சிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.[9]
- ஒரு தருணத்தில், தமிழ்நாட்டில் அதிமுகவும் இந்திய பொதுவுடமைக் கட்சியும் இணைந்து போட்டியிடுவார்கள் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார்.[10][11][12] தமிழ்நாட்டில் அதிமுக - இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெறுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.[13]
- மத்தியில் 10 வருடங்களுக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சியில் நரேந்திர மோடி அடுத்த இந்திய பிரதமராக கொண்டாடபட்டபோது. பாஜகவின் வலதுசாரி சித்தாந்ததிற்க்கு எதிராக தமிழகத்தில் ஜெயலலிதா அவர்கள் தனது அதிமுகவுடன் மதசார்பற்ற இடதுசாரி சித்தாந்த கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ), இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி (சி.பி.எம்) போன்ற கட்சிகள் தனது கூட்டணியில் இணையுமாறு அழைப்புவிடுத்தார்.
- ஆனால் தொகுதி உடன்பாட்டால் இம்முறை இரண்டு கம்னியூஸ்ட் கட்சிகளும் இணையாததால். அதிமுக எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டியிட்டு தமிழகத்தில் 37 தொகுதிகளில் ஜெயலலிதாவின் அதிமுக கட்சி வென்று மத்தியில் நாடாளுமன்றத்தில் மதவாத கட்சிக்கு இடையே தனிப்பெரும் மாநில கட்சியாக உருவெடுத்தது. இந்த வெற்றியின் ரகசியத்தை செல்வி ஜெயலலிதாவிடம் கேட்டபோது இந்த வெற்றி எனக்கு கிடைத்த வெற்றி என்பதை விட இது பெரியாரின் சித்தாந்ததிற்க்கு, கிடைத்த வெற்றி அண்ணாவின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, புரட்சி தலைவர் புகழிற்க்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.
- அதே போல் மத்தியில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க அறுதிபெரும்பாண்மை இல்லாமல் தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் எங்கள் அதிமுகழக அரசு சார்பில் வெற்றி பெற்ற அனைத்து மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் பாஜக அல்லாத அரசு ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சி பொதுச்செயலரும், தமிழக முதலவருமான ஜெயலலிதா அவர்கள் கூறினார்.
பாஜக கூட்டணி தொகு
- தமிழ்நாட்டில் தொகுதிப் பங்கீடு குறித்து பாரதிய ஜனதா கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.[14]
- தமிழ்நாட்டில் தொகுதிப் பங்கீடு குறித்து பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்கியது.[15]
- தேமுதிக தமிழக தலைமை கட்சியாக ஏற்று கொண்டு பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததால். பிற தமிழக உள்நாட்டு கட்சிகளும் கூட்டணியில் இணைந்தது.[16]
- பின்பு தேமுதிக-பாஜக தலைமையிலான தேஜகூவில் மதிமுக, பாமக, கொதேக, இஜக, புநீக ஆகிய தமிழக உள்நாட்டு கட்சிகள் இக்கூட்டணியில் இடம்பெற்றன.
திமுக கூட்டணி தொகு
- முந்தைய 2009 நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்தபோது தனது மத்திய காங்கிரஸ் கட்சி தலைமையில் நடந்தேறிய இலங்கைத் தமிழர் இனப்படுகொலையை காரணம் காட்டி சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ்-திமுகவில் இருந்து தற்காலிகமாக வெளியேறியது. அதனால் திமுக - தேமுதிக தங்களது கூட்டணியில் இணையவேண்டும் என்று அழைப்பு விடுத்தது. ஆனால் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் அடுத்து வரவிருக்கும் 2016 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தார். ஆனால் திமுகவின் முன்னாள் துணை-முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தான் அடைய வேண்டிய தந்தையின் முதல்வர் பதவியை குறி வைப்பது போல் இருந்ததால் தேமுதிக கூட்டணி பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது.
- திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரு இடங்கள் ஒதுக்கப்பட்டன. மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரமும், திருவள்ளூரும் ஒதுக்கப்பட்டது.[17][18]
- மனித நேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதியும், புதிய தமிழகத்துக்கு தென்காசி தொகுதியும் ஒதுக்கப்பட்டது.[19]
- முஸ்லிம் லீக்கிற்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது[20]
பொதுவுடமைக் கட்சிகள் கூட்டணி தொகு
- பொதுவுடமைக் கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது இல்லையென்றான பின் அவை எக்கூட்டணியிலும் இணையாமல் தனித்து போட்டியிட்டன.[21]
- இரு பொதுவுடமைக் கட்சிகளும் தலா ஒன்பது இடங்களில் போட்டியிட்டன.[22] இந்திய பொதுவுடமைக் கட்சி தென்காசி, நாகப்பட்டினம், திருப்பூர், சிவகங்கை, புதுவை, கடலூர், திருவள்ளூர், தருமபுரி மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளிலும் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) கோயம்புத்தூர், மதுரை, வட சென்னை, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளிலும் போட்டியிட்டது.
காங்கிரசு தொகு
- எக்கட்சிகளும் காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை.
- புதுச்சேரியில் இதன் வேட்பாளராக நடுவண் அரசின் அமைச்சர் நாராயணசாமியை அறிவித்தது.[23]
பிற கட்சிகள் தொகு
- கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர் சுப. உதயகுமார் தன் ஆதரவாளர்கள் 500 பேருடன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்[24] தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி எளிய மக்கள் கட்சி என்று அழைக்கப்படும் என்று கூறினார்.[25]
- ஆம் ஆத்மி கட்சியின் ஏழாவது வேட்பாளர் பட்டியலில் 8 பேர் தமிழகத்திலிருந்து போட்டியிடுவர் என்றும் சுப. உதயகுமார் கன்னியாகுமரியிலிருந்து போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது[26]
- ஆம் ஆத்மி கட்சியின் பன்னிரெண்டாவது வேட்பாளர் பட்டியலில் 9 பேர் தமிழகத்திலிருந்து போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டது [27]
கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் தொகு
- அதிமுக, புதுச்சேரியையும் சேர்த்த 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது[28]. கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவான பின் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என்று ஜெயலலிதா கூறினார்.[29]
- திமுக புதுச்சேரிக்கும் சேர்த்து 35 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ஆ. ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.[30][31][32].
- தேமுதிக வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.[33]
- பாசக கூட்டணி தொகுதி ஓதுக்கீடு பட்டியலை பாசக தலைவர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார், இதில் தேமுதிக 14 இடங்களிலும், பாமக 8 இடங்களிலும் பாசக 8 இடங்களிலும் மதிமுக 7 இடங்களிலும் கொங்கு மக்கள் தேசிய கட்சியும் இந்திய ஜனநாயக கட்சியும் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகின்றனர்.[34]
- மதிமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வைகோ அறிவித்தார்[35]
- காங்கிரசில் 30 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்[36]
- இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள்[37]:
தொகுதி வேட்பாளர் வடசென்னை உ. வாசுகி கோயம்புத்தூர் பி.ஆர். நடராஜன் கன்னியாகுமரி ஏ.வி. பெல்லார்மின் மதுரை பா. விக்ரமன் திருச்சி எஸ். ஸ்ரீதர் விருதுநகர் கே. சாமுவேல்ராஜ் திண்டுக்கல் என். பாண்டி விழுப்புரம் (தனி) ஜி. ஆனந்தன் தஞ்சாவூர் எஸ். தமிழ்ச்செல்வி
- அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் இரண்டு பேர் பெண்கள்; இருவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இதில் விருதுநகர் பொது தொகுதியில் தலித் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.
கட்சிகளின் தேர்தல் பரப்புரை தொகு
- நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது முதற்கட்ட பரப்புரையை, அதிமுக பொதுச் செயலராகிய ஜெயலலிதா மார்ச் 3 முதல் ஏப்ரல் 5 வரை ஈடுபடுவாரென தெரிவிக்கப்பட்டது. விரிவான பயண விவரமும் வெளியிடப்பட்டது.[38]
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் தொகு
தேர்தல் கருத்துக் கணிப்புகள் தொகு
- பெப்ரவரி 13, 2014 அன்று டைம்ஸ் நொவ் தொலைக்காட்சி - CVoter நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பின் விவரம், வெளியிடப்பட்டது[42]:
கட்சி கணிக்கப்பட்ட இடங்கள் அதிமுக 27 திமுக 5 தேமுதிக 2 காங்கிரஸ் 1 மதிமுக 1 சிபிஐ 1 சிபிஎம் 1 விடுதலை சிறுத்தைகள் கட்சி 1
நிறுவனம் | கருத்துகணிப்பு வெளியான தேதி | அதிமுக கூட்டணி | திமுக கூட்டணி | காங்கிரசு கூட்டணி | பாசக கூட்டணி | மற்றவர்கள் |
---|---|---|---|---|---|---|
டைம்ஸ் நவ்[42] | பெப்ரவரி 13,2014 | 27 | 6 | 1 | 3 | 2 |
ஐபிஎன்லைவ்[43] | சனவரி 25,2014 | 15-23 | 7-13 | க.எ | க.எ | க.எ |
ஐபிஎன்லைவ்[44] | மார்ச்சு 7, 2014 | 14-20 | 10-16 | க.எ | க.எ | க.எ |
ஏபிசி-நீல்சன்[45] | பெப்ரவரி 22, 2014 | 19 | 13 | க.எ | க.எ | க.எ |
என்டிடிவி[46] | மார்ச்சு 13 | 27 | 10 | க.எ | 2 | க.எ |
ஐபிஎன்லைவ்[47] | ஏப்ரல் 1 | 15-21 | 10-16 | 0 | 6-10 | 0 |
என்டிடிவி [48] | ஏப்பிரல் 3 | 25 | 11 | 0 | 3 | 0 |
- க.எ = கருத்துகணிப்பு எடுக்கவில்லை அல்லது தமிழகத்துக்கு என்றில்லாமல் அகில இந்திய கணிப்புடன் இணைத்து சொல்லப்பட்டது
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள் தொகு
- வேட்புமனுவினை தாக்கல் செய்தல் ஏப்ரல் 5 அன்று முடிவடைந்த நிலையில், மொத்தம் 1318 பேர் வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தனர்[49][50].
ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் 1198 118 2 1318
- தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்:
ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் 842 63 1 906
- வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்:
ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் 53 8 0 61
- களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்:
ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் 789 55 (6.5%) 1 845
வேட்பாளர் இறுதிப் பட்டியல் (முக்கிய கட்சிகள், தொகுதிவாரியாக)[51] தொகு
தொகுதியின் பெயர் | அதிமுக | திமுக கூட்டணி | பிஜேபி கூட்டணி | காங்கிரசு | பொதுவுடமைக் கட்சிகள் கூட்டணி |
---|---|---|---|---|---|
திருவள்ளூர் | பி.வேணுகோபால் | ரவிக்குமார் (வி.சி) | வி. யுவராஜ் (தேமுதிக) | எம். ஜெயக்குமார் | ஏ. எஸ். கண்ணன் (சிபிஐ) |
வட சென்னை | டி. ஜி. வெங்கடேஷ்பாபு | ஆர். கிரிராஜன் | சௌந்தரபாண்டியன்(தேமுதிக) | பிஜு சாக்கோ | உ. வாசுகி (பெ)(சிபிஎம்) |
தென் சென்னை | ஜெ. ஜெயவர்தன் | டி. கே. எஸ். இளங்கோவன் | இல. கணேசன் | எஸ். வி. ரமணி | |
மத்திய சென்னை | எஸ். ஆர். விஜயகுமார் | தயாநிதி மாறன் | ஜே. கே. ரவீந்திரன் (தேமுதிக) | சி. டி. மெய்யப்பன் | |
ஸ்ரீபெரும்புதூர் | கே. என். ராமச்சந்திரன் | ஜெகத்ரட்சகன் | மாசிலாமணி (மதிமுக) | அருள் அன்பரசு | |
காஞ்சிபுரம் (தனி) | மரகதம் குமாரவேல் (பெ) | ஜி. செல்வம் | மல்லை சத்யா (மதிமுக) | டி. விஸ்வநாதன் | |
அரக்கோணம் | கே. அரி | என். ஆர். இளங்கோ | ஆர். வேலு (பாமக) | ராஜேஷ் | எஸ். ராஜேஷ் |
வேலூர் | பி. செங்குட்டுவன் | எம்.ரகுமான் (இயூமுலீ) | ஏ. சி. சண்முகம் | விஜய் இளஞ்செழியன் | இம்தாத் சரிப் |
கிருஷ்ணகிரி | கே. அசோக்குமார் | பி. சின்னபில்லப்பா | ஜி. கே. மணி (பாமக) | ஏ. செல்லக்குமார் | |
தருமபுரி | பி. எஸ். மோகன் | ஆர். தாமரைச் செல்வன் | அன்புமணி ராமதாஸ் (பாமக) | ராம. சுகந்தன் | |
திருவண்ணாமலை | ஆர். வனரோஜா (பெ) | சி. என். அண்ணாத்துரை | எதிரொலி மணியன் (பாமக) | ஏ.சுப்ரமணியம் | |
ஆரணி | வி. ஏழுமலை | ஆர். சிவானந்தம் | ஏ. கே. மூர்த்தி (பாமக) | கே. விஷ்ணு பிரசாத் | |
விழுப்புரம் (தனி) | எஸ். ராஜேந்திரன் | கே. முத்தையன் | உமா சங்கர் (தேமுதிக) | கே. ராணி (பெ) | ஜி. ஆனந்தன் (சிபிஎம்) |
கள்ளக்குறிச்சி | கே. காமராஜ் | மணிமாறன் | வி. பி. ஈஸ்வரன் (தேமுதிக) | ஆர். தேவதாஸ் | |
சேலம் | வி. பன்னீர்செல்வம் | உமா ராணி (பெ) | எல். கே. சுதீஷ் (தேமுதிக) | மோகன் குமாரமங்கலம் | |
நாமக்கல் | பி. ஆர். சுந்தரம் | எஸ். காந்திசெல்வன் | எஸ். கே. வேல் (தேமுதிக) | ஜி. சுப்பிரமணியம் | |
ஈரோடு | எஸ். செல்வக்குமார சின்னையன் | பவித்ரவள்ளி (பெ) | ஏ. கணேசமூர்த்தி (மதிமுக) | சி. கோபி | கே. கே. குமாரசாமி |
திருப்பூர் | வி. சத்தியபாமா (பெ) | செந்தில்நாதன் | என். தினேஷ் குமார் (தேமுதிக) | இ. வி. கே. எஸ். இளங்கோவன் | சுப்பாராயன் (சிபிஐ) |
நீலகிரி (தனி) | கோபால் | ஆ.ராசா | பி.காந்தி | ||
கோயம்புத்தூர் | நாகராஜன் | பழனிக்குமார், | ஆர்.பிரபு | பி.ஆர். நடராஜன் (சிபிஎம்) | |
பொள்ளாச்சி | மகேந்திரன் | பொங்கலூர் பழனிச்சாமி | ஈஸ்வரன் கொமதேக | கே.செல்வராஜு | |
திண்டுக்கல் | உதயகுமார் | காந்திராமன் | என்.எஸ்.வி. சித்தன் | என். பாண்டி(சிபிஎம்) | |
கரூர் | தம்பித்துரை | ம. சின்னசாமி | என்.எஸ். கிருஷ்ணன் தேமுதிக | எஸ்.ஜோதிமணி (பெ) | |
திருச்சிராப்பள்ளி | பா.குமார் | அன்பழகன், | எஸ்.எம்.டி. சாருபாலா தொண்டமான் (பெ) | எஸ். ஸ்ரீதர் (சிபிஎம்) | |
பெரம்பலூர் | மருதராஜன் | சீமானூர் பிரபு | பாரிவேந்தர் பச்சமுத்து | எம்.ராஜசேகரன் | |
கடலூர் | ஆ.அருண்மொழிதேவன் | நந்தகோபாலகிருஷ்ணன் | ஜெயசங்கர்(தே.மு.தி.க) | கே.எஸ்.அழகிரி | கு.பாலசுப்ரமணியன் |
சிதம்பரம் (தனி) | சந்திரகாசி | தொல்.திருமாவளவன்(வி.சி) | சுதாமணிரத்னம்(பா.ம.க) | பி.வள்ளல்பெருமாள் | |
மயிலாடுதுறை | பாரதிமோகன் | செ. ஹைதர் அலி ம ம க | க. அகோரம் பாமக | மணிசங்கர் அய்யர் | |
நாகப்பட்டினம் (தனி) | கோபால் | ஏ.கே.எஸ். விஜயன் | வடிவேல் ராவணன் | டி.ஏ.பி. செந்தில் பாண்டியன் | கோ. பழனிச்சாமி |
தஞ்சாவூர் | பரசுராமன் | டி.ஆர்.பாலு | கருப்பு முருகானந்தம் பாஜக | கிருஷ்ணசாமி வாண்டையார் | எஸ். தமிழ்ச்செல்வி (பெ) (சிபிஎம்) |
சிவகங்கை | செந்தில்நாதன் | துரைராஜ் | ஹெச். ராஜா பாஜக | கார்த்தி சிதம்பரம் | எஸ்.கிருஷ்ணன் |
மதுரை | கோபாலகிருஷ்ணன் | வேலுச்சாமி | டி.சிவமுத்துகுமா தேமுதிக | பி.என்.பரத் நாச்சியப்பன் | பா. விக்ரமன் (சிபிஎம்) |
தேனி | பார்த்திபன் | பொன். முத்துராமலிங்கம் | க. அழகுசுந்தரம் ம்திமுக | ஜே.எம். ஆருண் | |
விருதுநகர் | ராதாகிருஷ்ணன் | ரத்னவேலு | வைகோ ம்திமுக | மாணிக் தாகூர் | கே. சாமுவேல்ராஜ் (சிபிஎம்) |
இராமநாதபுரம் | அன்வர்ராஜா | முகமது ஜலீல் | குப்புராமு | சு. திருநாவுக்கரசர் | உமா மகேஸ்வரி (பெ) |
தூத்துக்குடி | ஜெயசீலி தியாகராஜ் | ஜெகன் | எ.பி.சி.வி. சண்முகம் | ||
தென்காசி (தனி) | வசந்தி முருகேசன் (பெ) | கிருஷ்ணசாமி (புதிய தமிழகம் | சதன் திருமலைக்குமார் (மதிமுக | கே.ஜெயகுமார் | பொ.லிங்கம் |
திருநெல்வேலி | பிரபாகர் | தேவராஸ் சுந்தரம் | எஸ்.எஸ். ராமசுப்பு | ||
கன்னியாகுமரி | ஜான்தங்கம் | எப்.எம்.ராஜரத்தினம் | பொன்.ராதா கிருஷ்ணன் | வசந்தகுமார் | ஏ.வி. பெல்லார்மின் (சிபிஎம்) |
வாக்குப்பதிவு தொகு
விரிவான தரவுகளுக்கு -
மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சராசரி 73.67% என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது[52]
தொகுதிவாரியாக சுருக்கமான விவரம்
தொகுதியின் எண் | தொகுதியின் பெயர் | வாக்குப்பதிவு சதவீதம்[53] |
1. | திருவள்ளூர் | 73.73 |
2. | வட சென்னை | 63.95 |
3. | தென் சென்னை | 60.37 |
4. | மத்திய சென்னை | 61.49 |
5. | ஸ்ரீபெரும்புதூர் | 66.21 |
6. | காஞ்சிபுரம் (தனி) | 75.91 |
7. | அரக்கோணம் | 77.80 |
8. | வேலூர் | 74.58 |
9. | கிருஷ்ணகிரி | 77.68 |
10. | தருமபுரி | 81.14 |
11. | திருவண்ணாமலை | 78.80 |
12. | ஆரணி | 80.00 |
13. | விழுப்புரம் (தனி) | 76.84 |
14. | கள்ளக்குறிச்சி | 78.26 |
15. | சேலம் | 76.73 |
16. | நாமக்கல் | 79.64 |
17. | ஈரோடு | 76.06 |
18. | திருப்பூர் | 76.22 |
19. | நீலகிரி (தனி) | 73.43 |
20. | கோயம்புத்தூர் | 68.17 |
21. | பொள்ளாச்சி | 73.11 |
22. | திண்டுக்கல் | 77.36 |
23. | கரூர் | 80.47 |
24. | திருச்சிராப்பள்ளி | 71.11 |
25. | பெரம்பலூர் | 80.02 |
26. | கடலூர் | 78.69 |
27. | சிதம்பரம் (தனி) | 79.61 |
28. | மயிலாடுதுறை | 75.87 |
29. | நாகப்பட்டினம் (தனி) | 77.64 |
30. | தஞ்சாவூர் | 75.49 |
31. | சிவகங்கை | 72.83 |
32. | மதுரை | 67.88 |
33. | தேனி | 75.02 |
34. | விருதுநகர் | 74.96 |
35. | இராமநாதபுரம் | 68.67 |
36. | தூத்துக்குடி | 69.92 |
37. | தென்காசி (தனி) | 73.60 |
38. | திருநெல்வேலி | 67.68 |
39. | கன்னியாகுமரி | 67.69 |
இடைத்தேர்தல் தொகு
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து நடத்தப்பட்டது.
தேர்தல் முடிவுகள் தொகு
விரிவான தரவுகளுக்கு -
கூட்டணி வாரியாக தொகு
அதிமுக | இடங்கள் | திமுக+ | இடங்கள் | பாஜக+ | இடங்கள் | காங்கிரஸ் | இடங்கள் | இடதுசாரிகள் | இடங்கள் |
---|---|---|---|---|---|---|---|---|---|
அதிமுக | 37 | திமுக | 0 | பாஜக | 1 | காங்கிரசு | 0 | சிபிஐ | 0 |
விடுதலை சிறுத்தைகள் கட்சி | 0 | மதிமுக | 0 | சிபிஎம் | 0 | ||||
மனிதநேய மக்கள் கட்சி | 0 | பாமக | 1 | ||||||
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் | 0 | தேமுதிக | 0 | ||||||
புதிய தமிழகம் | 0 | ||||||||
மொத்தம் | 37 | மொத்தம் | 0 | மொத்தம் | 2 | மொத்தம் | 0 | மொத்தம் | 0 |
பச்சை நிறம் = அதிமுக வென்ற தொகுதிகள், ஆரஞ்சு நிறம் = பாஜக வென்ற தொகுதி, இளம்பச்சை நிறம் = பாமக வென்ற தொகுதி
தொகுதிவாரியாக சுருக்கமான விவரம் தொகு
வரிசை எண் | தொகுதி | வெற்றியாளர் | கட்சி | இரண்டாம் இடம் வந்தவர் | கட்சி | வாக்குகள் வித்தியாசம் | முழுமையான விவரத்திற்கு அம்புக்குறியின் மீது சொடுக்கவும் |
---|---|---|---|---|---|---|---|
1 | திருவள்ளூர் (தனி) | பொ. வேணுகோபால் | அதிமுக | டி. ரவிக்குமார் | விடுதலை சிறுத்தை | 3,23,430 | → |
2 | வட சென்னை | வெங்கடேஷ் பாபு | அதிமுக | கிரி ராஜன் | திமுக | 99,704 | → |
3 | தென் சென்னை | ஜே. ஜெயவர்த்தன் | அ.தி.மு.க | இளங்கோவன் | தி.மு.க | 36625 | → |
4 | மத்திய சென்னை | எஸ். ஆர். விஜயகுமார் | அ.தி.மு.க | தயாநிதி மாறன் | தி.மு.க | 45841 | → |
5 | சிறீபெரும்புதூர் (தனி) | கே. என். ராமச்சந்திரன் | அ.தி.மு.க | ஜெகத்ரட்சகன் | தி.மு.க | 1,02,646 | → |
6 | காஞ்சீபுரம் (தனி) | கே. மரகதம் | அ.தி.மு.க | ஜி.செல்வம் | தி.மு.க | 1,46,866 | → |
7 | அரக்கோணம் | ஜி. ஹரி | அ.தி.மு.க | என்.ஆர்.இளங்கோ | தி.மு.க | 3,25,430 | → |
8 | வேலூர் | பி. செங்குட்டுவன் | அ.தி.மு.க | ஏ.சி.சண்முகம் | புதிய நீதிக்கட்சி | 59,393 | → |
9 | கிருஷ்ணகிரி | கே. அசோக் குமார் | அ.தி.மு.க. | பி. சின்ன பில்லப்பா | தி.மு.க. | 2,06,591 | → |
10 | தர்மபுரி | அன்புமணி ராமதாஸ் | பாமக | மோகன் | அ.தி.மு.க. | 77,146 | → |
11 | திருவண்ணாமலை | இர. வனரோசா | அதிமுக | அண்ணாதுரை | திமுக | 1,68,606 | → |
12 | ஆரணி | வி. ஏழுமலை | அதிமுக | ஆர். சிவானந்தம் | திமுக | 2,43,847 | → |
13 | விழுப்புரம் (தனி) | எஸ். இராஜேந்திரன் | அதிமுக | கே. முத்தையன் | திமுக | 1,93,367 | → |
14 | கள்ளக்குறிச்சி | க. காமராஜ் | அதிமுக | இரா.மணிமாறன் | திமுக | 2,23,507 | → |
15 | சேலம் | வி. பன்னீர்செல்வம் | அதிமுக | செ.உமாராணி | திமுக | 2,67,610 | → |
16 | நாமக்கல் | பி. ஆர். சுந்தரம் | அதிமுக | செ. காந்திச்செல்வன் | திமுக | 2,94,374 | → |
17 | ஈரோடு | எஸ். செல்வகுமார சின்னையன் | அதிமுக | அ. கணேசமூர்த்தி | மதிமுக | 2,11,563 | → |
18 | திருப்பூர் | வா. சத்தியபாமா | அதிமுக | என். தினேஷ்குமார் | தே.மு.தி.க | 1,79,315 | → |
19 | நீலகிரி (தனி) | சி. கோபாலகிருஷ்ணன் | அதிமுக | ஏ. இராஜா | திமுக | 1,04,940 | → |
20 | கோயம்புத்தூர் | பி. நாகராஜன் | அதிமுக | சி. பி. ராதாகிருஷ்ணன் | பாஜக | 42,016 | → |
21 | பொள்ளாச்சி | சி. மகேந்திரன் | அதிமுக | ஈ. ஆர். ஈசுவரன் | கொங்கு மக்கள் தேசிய கட்சி | 1,40,974 | → |
22 | திண்டுக்கல் | எம். உதயகுமார் | அதிமுக | காந்திராமன் | திமுக | 1,27,845 | → |
24 | கரூர் | மு. தம்பிதுரை | அதிமுக | சின்னசாமி | திமுக | 1,95,247 | → |
25 | திருச்சிராப்பள்ளி | ப. குமார் | அதிமுக | அன்பழகன் | திமுக | 1,50,476 | → |
26 | பெரம்பலூர் | ஆர். பி. மருதராஜா | அதிமுக | சீமானூர் பிரபு | திமுக | 2,13,048 | → |
27 | கடலூர் | அ. அருண்மொழித்தேவன் | அதிமுக | கொ.நந்தகோபாலகிருஷ்ணன் | திமுக | 2,02,659 | → |
28 | சிதம்பரம் (தனி) | எம். சந்திரகாசி | அதிமுக | திருமாவளவன் | விடுதலை சிறுத்தைகள் | 1,28,507 | → |
29 | மயிலாடுதுறை | ஆர். கே. பாரதி மோகன் | அதிமுக | செ. ஹைதர் அலி | மமக | 2,76,943 | → |
30 | நாகப்பட்டினம் (தனி) | டாக்டர். கே. கோபால் | அதிமுக | ஏ. கே. எஸ். விஜயன் | திமுக | 1,06,079 | → |
31 | தஞ்சாவூர் | கு. பரசுராமன் | அதிமுக | டி.ஆர்.பாலு | திமுக | 1,44,119 | → |
32 | சிவகங்கை | பி. ஆர். செந்தில்நாதன் | அதிமுக | துரை ராச சுபா | திமுக | 2,29,385 | → |
33 | மதுரை | ஆர். கோபாலகிருஷ்ணன் | அதிமுக | வேலுச்சாமி | திமுக | 1,99,424 | → |
23 | தேனி | ஆர். பார்த்தீபன் | அதிமுக | பொன். முத்துராமலிங்கம் | திமுக | 3,14,532 | → |
34 | விருதுநகர் | டி. இராதாகிருஷ்ணன் | அதிமுக | வைகோ | மதிமுக | 1,45,915 | → |
35 | இராமநாதபுரம் | அன்வர் ராஜா | அதிமுக | எசு. முகமது சலீல் | திமுக | 1,19,324 | → |
36 | தூத்துக்குடி | ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி | அதிமுக | பி. செகன் | திமுக | 1,24,002 | → |
37 | தென்காசி (தனி) | வசந்தி முருகேசன் | அதிமுக | கிருஷ்ணசாமி, | புதிய தமிழகம் | 1,47,333 | → |
38 | திருநெல்வேலி | கே. ஆர். பி. பிரபாகரன் | அதிமுக | தேவதாச சுந்தரம் | திமுக | 1,26,099 | → |
39 | கன்னியாகுமரி | பொன். இராதாகிருஷ்ணன் | பா ஜ க | வசந்தகுமார் | காங் | 1,28,662 | → |
இதையும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "Election dept. focuses on maximum voter participation". The Hindu. http://www.thehindu.com/news/cities/chennai/election-dept-focuses-on-maximum-voter-participation/article5615152.ece. பார்த்த நாள்: 2014-01-25.
- ↑ "144 தடை உத்தரவு ஜனநாயக விரோதமானது தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு சிபிஎம் கடும் எதிர்ப்பு". தீக்கதிர். 23 ஏப்ரல் 2014. http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=61767. பார்த்த நாள்: 23 ஏப்ரல் 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை திரும்ப பெற சிபிஎம் வலியுறுத்தல்". 22 ஏப்ரல் 2014. http://tncpim.org/letter-to-election-commission. பார்த்த நாள்: 23 ஏப்ரல் 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "தமிழகம்: மார்ச் 29-இல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்: மே 16-இல் வாக்கு எண்ணிக்கை". தினமணி. http://www.dinamani.com/tamilnadu/2014/03/06/தமிழகம்-மார்ச்-29-இல்-வேட்பு-ம/article2093550.ece. பார்த்த நாள்: 6 மார்ச் 2014.
- ↑ "மக்களவைத் தேர்தல்: அதிமுகவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு". தினமணி. http://www.dinamani.com/tamilnadu/2014/02/22/மக்களவைத்-தேர்தல்-அதிமுகவு/article2070525.ece. பார்த்த நாள்: 22 பெப்ரவரி 2014.
- ↑ "AIADMK forms panel on seat-sharing". The Hindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/aiadmk-forms-panel-on-seatsharing/article5655977.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 5 பெப்ரவரி 2014.
- ↑ "Left parties call off alliance with AIADMK". rediff. http://www.rediff.com/news/report/left-parties-call-off-alliance-with-aiadmk/20140306.htm. பார்த்த நாள்: 6 மார்ச் 2014.
- ↑ "AIADMK-Left alliance collapses". thehindu. http://www.thehindu.com/news/national/aiadmkleft-alliance-collapses/article5754340.ece. பார்த்த நாள்: 6 மார்ச் 2014.
- ↑ "அதிமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகல்". தி இந்து (தமிழ்). http://tamil.thehindu.com/tamilnadu/அதிமுக-கூட்டணியில்-இருந்து-கம்யூனிஸ்ட்-கட்சிகள்-விலகல்/article5757328.ece?homepage=true. பார்த்த நாள்: 6 மார்ச் 2014.
- ↑ "AIADMK, CPI announce alliance for Lok Sabha elections". NDTV. http://www.ndtv.com/article/election-2014/aiadmk-cpi-announce-alliance-for-lok-sabha-elections-478411?pfrom=home-south. பார்த்த நாள்: 2 பெப்ரவரி 2014.
- ↑ "AIADMK-CPI announce alliance for upcoming Lok Sabha elections". IBNLive. http://ibnlive.in.com/news/aiadmkcpi-announce-alliance-for-upcoming-lok-sabha-elections/449461-37-64.html. பார்த்த நாள்: 2 பெப்ரவரி 2014.
- ↑ "மக்களவைத் தேர்தலில் அதிமுக - இந்திய கம்யூ. கூட்டணி: ஜெயலலிதா அறிவிப்பு". தமிழ் இந்து. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article5645349.ece. பார்த்த நாள்: 2 பெப்ரவரி 2014.
- ↑ "Talks on for alternative front, says Prakash Karat". The Hindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/talks-on-for-alternative-front-says-prakash-karat/article5648867.ece?homepage=true. பார்த்த நாள்: 4 பெப்ரவரி 2014.
- ↑ "BJP, MDMK begin seat-sharing talks". The Hindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/bjp-mdmk-begin-seatsharing-talks/article5609279.ece. பார்த்த நாள்: 2014-01-24.
- ↑ "BJP-PMK formal talks begin". The Hindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/bjppmk-formal-talks-begin/article5760671.ece. பார்த்த நாள்: 8-3-2014.
- ↑ "Done deal. BJP scores alliance with Vijaykanth in Tamil Nadu". ndtv. http://www.ndtv.com/elections/article/election-2014/done-deal-bjp-scores-alliance-with-vijaykanth-in-tamil-nadu-492664. பார்த்த நாள்: 7 மார்ச் 2014.
- ↑ "சிதம்பரம் தொகுதி: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு". தின பூமி. http://www.thinaboomi.com/2014/03/07/31550.html. பார்த்த நாள்: 7 மார்ச் 2014.
- ↑ "DMK allots one more seat to VCK". The Hindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/dmk-allots-one-more-seat-to-vck/article5764092.ece?homepage=true. பார்த்த நாள்: 8 மார்ச் 2014.
- ↑ "DMK gives MMK, PT one seat each". thehindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/dmk-gives-mmk-pt-one-seat-each/article5750832.ece. பார்த்த நாள்: 6 மார்ச் 2014.
- ↑ "Puthiya Tamizhagam founder Krishnasamy to contest from Tenkasi". The Hindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/puthiya-tamizhagam-founder-krishnasamy-to-contest-from-tenkasi/article5756876.ece?homepage=true. பார்த்த நாள்: 6-3-2014.
- ↑ "CPM Closes Door on DMK Alliance". NewIndianexpress. http://www.newindianexpress.com/states/tamil_nadu/CPM-Closes-Door-on-DMK-Alliance/2014/03/10/article2100477.ece#.Ux26ZIVM4UE. பார்த்த நாள்: 10 மார்ச் 2014.
- ↑ "தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் 18 தொகுதிகளில் போட்டி". மாலைமலர். http://www.maalaimalar.com/2014/03/14165819/tamilnadu-communist-party-18-c.html. பார்த்த நாள்: 14 மார்ச் 2014.
- ↑ "Lok Sabha polls: Congress names Pawan Kumar Bansal from Chandigarh, Raj Babbar to contest from Ghaziabad". timesofindia. http://timesofindia.indiatimes.com/home/specials/lok-sabha-elections-2014/news/Lok-Sabha-polls-Congress-names-Pawan-Kumar-Bansal-from-Chandigarh-Raj-Babbar-to-contest-from-Ghaziabad/articleshow/31957020.cms?. பார்த்த நாள்: 13 மார்ச் 2014.
- ↑ "Anti-nuclear activist Udayakumar joins AAP with 500 supporters". indianexpress. http://indianexpress.com/article/india/politics/anti-nuclear-activist-udayakumar-joins-aap-with-500-supporters/. பார்த்த நாள்: 28 பெப்ரவரி 2014.
- ↑ "ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் சுப.உதயகுமார்". தமிழ் இந்து. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article5736814.ece?homepage=true. பார்த்த நாள்: 28 பெப்ரவரி 2014.
- ↑ "LS polls: AAP releases 7th list, fields activist Uday Kumar from Kanyakumari". zeenews. http://zeenews.india.com/news/nation/ls-polls-aap-releases-7th-list-fields-activist-uday-kumar-from-kanyakumari_918619.html. பார்த்த நாள்: 18 மார்ச் 2014.
- ↑ "AAP releases 12th list of candidates for Lok Sabha elections". IBN LIVE. http://ibnlive.in.com/news/aap-releases-12th-list-of-candidates-for-lok-sabha-elections/460849-37-64.html. பார்த்த நாள்: 3 ஏப்ரல் 2014.
- ↑ "பாராளுமன்றதேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு". தினத்தந்தி. http://www.dailythanthi.com/2014-02-24-ADMK-CANTITATE-2014-ELECTION-40. பார்த்த நாள்: 24 பெப்ரவரி 2014.
- ↑ "அதிமுக வேட்பாளர்கள் 40 பேர் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா". தமிழ் இந்து. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-40-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/article5721973.ece?homepage=true. பார்த்த நாள்: 24 பெப்ரவரி 2014.
- ↑ "List of DMK candidates for Lok Sabha polls". The Hindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/list-of-dmk-candidates-for-lok-sabha-polls/article5770439.ece. பார்த்த நாள்: 10 மார்ச் 2014.
- ↑ "DMK renominates Raja, Maran; denies ticket to Alagiri". thehindubusinessline. http://www.thehindubusinessline.com/news/politics/dmk-releases-first-list-of-35-candidates-renominates-raja-dayanidhi/article5769867.ece. பார்த்த நாள்: 10 மார்ச் 2014.
- ↑ "திமுக வேட்பாளர்கள் 35 பேர் பட்டியல்: கருணாநிதி அறிவிப்பு". தி இந்து (தமிழ்). http://tamil.thehindu.com/tamilnadu/திமுக-வேட்பாளர்கள்-35-பேர்-பட்டியல்-கருணாநிதி-அறிவிப்பு/article5769781.ece?homepage=true. பார்த்த நாள்: 10 மார்ச் 2014.
- ↑ "Read: DMDK list of 14 candidates for Tamil Nadu". IBNLIVE. http://ibnlive.in.com/news/read-dmdk-list-of-14-candidates-for-tamil-nadu/459720-62-128.html. பார்த்த நாள்: 7 ஏப்ரல் 2014.
- ↑ "தமிழக பா.ஜ.க கூட்டணி தொகுதி ஓதுக்கீடு பட்டியல்: ராஜ்நாத் சிங் வெளியிட்டார்". மாலைமலர். http://www.maalaimalar.com/2014/03/20164336/tn-bjp-alliance-constituency-l.html. பார்த்த நாள்: 20 மார்ச் 2014.
- ↑ "தமிழகத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு". மாலைமலர். http://www.maalaimalar.com/2014/03/20173657/tn-mdmk-candidate-list-release.html. பார்த்த நாள்: 20 மார்ச் 2014.
- ↑ "தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் 30 பேர் அறிவிப்பு". தமிழ் இந்து. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-30-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article5811208.ece?homepage=true. பார்த்த நாள்: 20 மார்ச் 2014.
- ↑ "16வது மக்களவைத் தேர்தல் – சிபிஐ (எம்) வேட்பாளர்கள்". 18 மார்ச் 2014. http://election.tncpim.org/?p=81. பார்த்த நாள்: 16 ஏப்ரல் 2014.
- ↑ "மார்ச் 3 முதல் ஏப்.5 வரை ஜெயலலிதா முதற்கட்ட பிரச்சாரம்". தமிழ் இந்து. http://tamil.thehindu.com/tamilnadu/மார்ச்-3-முதல்-ஏப்5-வரை-ஜெயலலிதா-முதற்கட்ட-பிரச்சாரம்/article5722247.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 25-2-2014.
- ↑ "அதிமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்". தமிழ் இந்து. http://tamil.thehindu.com/. பார்த்த நாள்: 25-2-2014.
- ↑ "100 தலைப்புகளில் திமுக தேர்தல் அறிக்கை: ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண உறுதி". தமிழ் இந்து. http://tamil.thehindu.com/tamilnadu/100-தலைப்புகளில்-திமுக-தேர்தல்-அறிக்கை-ஈழத்-தமிழர்-பிரச்சினைக்கு-தீர்வு-காண-உறுதி/article5772935.ece?homepage=true. பார்த்த நாள்: 11-3-2014.
- ↑ "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 16வது மக்களவைத் தேர்தல், 2014 தேர்தல் அறிக்கை". http://election.tncpim.org/?p=115. பார்த்த நாள்: 23 ஏப்ரல் 2014.
- ↑ 42.0 42.1 "National Lok Sabha election 2014 survey". The Times of India. http://timesofindia.indiatimes.com/tmes-now-cvoter-national-lok-sabha-election-survey/liveblog/30348665.cms. பார்த்த நாள்: 14 பெப்ரவரி 2014.
- ↑ "National projection: NDA likely to get 211-231, UPA distant second with 107-127". IBNLIVE. http://ibnlive.in.com/news/poll-tracker-nda-to-get-211231-upa-distant-second-with-107127/447602-37-64.html. பார்த்த நாள்: 29 ஜனவரி 2014.
- ↑ "Poll Tracker: NDA close to halfway mark with 212-232, needs more allies". IBNLIVE. http://ibnlive.in.com/news/poll-tracker-nda-close-to-halfway-mark-with-212232-needs-more-allies/456309-37-64.html. பார்த்த நாள்: 8 மார்ச் 2014.
- ↑ "Modi-led NDA way ahead than UPA, to win 236 seats in LS polls 2014: ABP News-Nielsen Opinion Poll". ABP News-Nielsen. http://www.abplive.in/india/2014/02/22/article267206.ece/Modi-led-NDA-way-ahead-than-UPA-to-win-236-seats-in-LS-polls-2014-ABP-News-Nielsen-Opinion-Poll#.Uxue3IVM4UF. பார்த்த நாள்: 8014.
- ↑ "Tamilnadu forcast jayalalitha rules". NDTV. http://www.ndtv.com/elections/live-blog/show/ndtv-opinion-poll-495290?q_id=2. பார்த்த நாள்: 13 மார்ச்சு 2014.
- ↑ "Tamil Nadu tracker: AIADMK 15-21 seats, DMK 10-16, BJP alliance 6-10". IBN-Live. http://ibnlive.in.com/news/tamil-nadu-tracker-aiadmk-1521-seats-dmk-1016-bjp-alliance-610/461864-37-64.html. பார்த்த நாள்: 3 ஏப்ரல் 2014.
- ↑ "NDTV Opinion Poll: Jayalalithaa to be big player in Tamil Nadu". NDTV. http://www.ndtv.com/elections/article/election-2014/ndtv-opinion-poll-jayalalithaa-to-be-big-player-in-tamil-nadu-504162. பார்த்த நாள்: 3 ஏப்ரல் 2014.
- ↑ "List of Candidates who have filed their Nomination – Summary Statistics". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 5 ஏப்ரல் 2014. http://elections.tn.gov.in/GETNLS2014/summary.pdf. பார்த்த நாள்: 5 ஏப்ரல் 2014.
- ↑ "List of Candidates who have filed their Nomination – Date wise Details". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 5 ஏப்ரல் 2014. http://elections.tn.gov.in/GETNLS2014/nomination_date.htm. பார்த்த நாள்: 5 ஏப்ரல் 2014.
- ↑ "Form 7A - List of Contesting Candidates". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 ஏப்ரல் 2014. http://www.elections.tn.gov.in/GETNLS2014/Form%207-A-%20List%20of%20Contesting%20Candidates-%20English.pdf. பார்த்த நாள்: 10 ஏப்ரல் 2014.
- ↑ "EC revises TN turnout to 73.67%". The Hindu. http://www.thehindu.com/elections/loksabha2014/ec-revises-tn-turnout-to-7367/article5951254.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 26 ஏப்ரல் 2014.
- ↑ "PC_wise_percentage_polling". தமிழ்நாடு தேர்தல் ஆணையம். http://www.elections.tn.gov.in/GETNLS2014/PC_wise_percentage_polling.pdf. பார்த்த நாள்: 27 ஏப்ரல் 2014.
உசாத்துணை தொகு
- இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்புப் பக்கம் பரணிடப்பட்டது 2016-11-24 at the வந்தவழி இயந்திரம்
வெளியிணைப்புகள் தொகு
- தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்
- தினமணி நாளிதழின் தேர்தலுக்கான சிறப்புப் பக்கம்
- தி இந்து தமிழ் நாளிதழின் தேர்தலுக்கான சிறப்புப் பக்கம் பரணிடப்பட்டது 2014-05-17 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ் நாடு தேர்தல் முடிவுகள் பரணிடப்பட்டது 2014-05-20 at the வந்தவழி இயந்திரம்
- Tamil Nadu remains a Dravidian stronghold
- Huge margins in AIADMK’s win point to popular upsurge
- Four TN women go to Lok Sabha after long years