தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் (நூல்)

தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் என்பது தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் எப்படி வந்தது? அது எப்படி பயன்படுத்தப்பட்டது? என்பது குறித்த ஆய்வு நூலாக 288 பக்கங்களுடன் வெளிவந்த நூல். முனைவர் தமிழப்பன் இதனை எழுதியுள்ளார்.

தமிழ் இலக்கியத்தில்
எண்ணும் எழுத்தும்
நூல் பெயர்:தமிழ் இலக்கியத்தில்
எண்ணும் எழுத்தும்
ஆசிரியர்(கள்):முனைவர்.தமிழப்பன்
வகை:ஆய்வு
துறை:ஆய்வுக் கட்டுரை
இடம்:உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை ,
21/11, இராமசாமி தெரு,
தியாகராயர் நகர்
சென்னை -600 017.
மொழி:தமிழ்
பக்கங்கள்:288
பதிப்பகர்:உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை
பதிப்பு:2004
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

நூலாசிரியர்தொகு

முனைவர் தமிழப்பன் தமிழில் இளம் இலக்கியம், முதுகலைப் பட்டம், இளம் கல்வியியல் பட்டம், தமிழில் முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் இவர் உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை எனும் அமைப்பை நிறுவி அதன் மூலம் தமிழின் வளர்ச்சிக்குப் பல வழிகளில் உதவி வருகிறார். பல தமிழ் மொழி சார்ந்த அமைப்புகளின் பொறுப்புகளில் இருந்து வரும் இவர் இதுவரை 25 தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

பொருளடக்கம்தொகு

இந்த நூலில்

  1. முன்னுரை
  2. எண்ணும் எழுத்தும் - தோற்றமும் வளர்ச்சியும்
  3. தமிழ் எண், எழுத்து வடிவங்கள்
  4. குறியீட்டுப் பணியில் தமிழ் எழுத்துக்கள்
  5. இலக்கிய இலக்கணங்களில் எண்ணும் எழுத்தும்
  6. எண்களின் பெயரும் முறையும் தொகை விளக்கமும்
  7. தமிழெழுத்துச் சீரமைப்பு
  8. எண் விளையாட்டும் நம்பிக்கைகளும்
  9. நிறைவுரை

எனும் தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரையின் முழுப் பகுதியும் இடம் பெற்றுள்ளது. இது தவிர இந்த ஆய்வு நூலிற்கு ஆதாரமாக விளங்கியவை குறித்த அட்டவணை, பின்னிணைப்பு, குறிப்புக்கள் ஆகியவையும் தரப்பட்டிருக்கின்றன.

இந்த நூலில் தமிழ் எண்கள் மற்றும் எழுத்துக்கள் குறித்த பல தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. பழம் தமிழ் எழுத்துக்களையும் எண்களையும் விளக்கும் படங்களும் தேவையான இடங்களில் இடம் பெற்றிருக்கின்றன.