தமிழ் எண் மைல்கல்

தமிழ் எண் மைல்கல் என்பது ஊர்களின் தொலவுகளை தமிழ் எண்களால் பொறிக்கப்பட்ட மைல் கற்கள் ஆகும். பண்டைய தமிழர்கள் இந்த மைல்கற்களை சாலை ஓரங்களில் நட்டு போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இத்தைகைய தமிழ் எண் மைல்கற்கள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பெருமளவு காணப்படுகின்றன. அந்த வகையில் தமிழ் மைல் கற்கள் புதுக்கோட்டையில் கண்டறியப்பட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.[1]

தமிழ் எண் மைல்கல் தொகு

சோழர் காலம் தொகு

இராசராசன் பெருவழிகளில் தமிழ் எண் பொறிக்கப்பட்ட மைல்கல் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஆங்கிலேயர் ஆட்சியில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு மைல்கற்கள் நடப்பட்டன.[2][3]

புதுக்கோட்டை மாவட்ட தமிழ் எண் மைல் கற்கள் தொகு

கூழியான்விடுதி, அன்னவாசல் ,ஆதனக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் ஆய்வுக்கழகத்தினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. http://m.tamil.thehindu.com/opinion/reporter-page/ஒரே-காலகட்டத்தில்-பயன்படுத்தப்பட்ட-தமிழ்-அரபு-ரோமன்-எண்-மைல்-கற்கள்/article6286215.ece[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://timesofindia.indiatimes.com/city/trichy/18th-C-milestone-found-near-Pudukkottai/articleshow/53122905.cms?from=mdr
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-07-10. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_எண்_மைல்கல்&oldid=3732342" இலிருந்து மீள்விக்கப்பட்டது