தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

இலங்கையின் அரசியல் கட்சி

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (Tamil People's National Alliance) என்பது இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இலங்கையின் ஓர் அரசியல் கூட்டணிக் கட்சியாகும். இக்கட்சி 2020 பெப்ரவரியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற சில தமிழ்த் தேசியக் கட்சிகளால் உருவாக்கப்பட்டது. இக்கூட்டணி இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவால் மீன் சின்னத்தைக் கொண்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.[1]

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
Tamil People's National Alliance
சுருக்கக்குறித.ம.தே.கூ (TPNA)
தலைவர்க. வி. விக்னேஸ்வரன்
தலைவர்சுரேஷ் பிரேமச்சந்திரன்
பொதுச் செயலாளர்சிவசக்தி ஆனந்தன்
தொடக்கம்9 பெப்ரவரி 2020 (4 ஆண்டுகள் முன்னர்) (2020-02-09)
பிரிவுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
நாடாளுமன்றம்
1 / 225
தேர்தல் சின்னம்
மீன்
இலங்கை அரசியல்

வரலாறு தொகு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (த.தே.கூ) இருந்து வெளியேறிய நான்கு வெவ்வேறு கட்சி உறுப்பினர்கள் சிலர் 2020 பெப்ரவரி 9 இல் யாழ்ப்பாணத்தில் கூடி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். இதன்படி, 2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற பெயரில் கட்சி ஒன்றை ஆரம்பித்தனர்.[2][3] இவ்வொப்பந்தத்தில் பின்வரும் நான்கு கட்சிகள் கையெழுத்திட்டன:[2][4][5]

2001 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கில் இருந்து வரும் வடக்குக் கிழக்கு தமிழ் மக்களுக்கான ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்குவதே தமது முக்கிய நோக்கம் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி அறிவித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கைகளில் இருந்து விலகி விட்டதாகவும், வட-கிழக்குத் தமிழரின் தேவைகளை அது கவனிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.[2][3]

சி. வி. விக்னேசுவரன் கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் உள்ளார். ஆனால் சுரேஷ் பிரேமச்சந்திரன் கட்சியின் தலைவர் ஆகவும், சிவசக்தி ஆனந்தன் செயலாளராகவும் உள்ளனர்.[6][7] விக்னேசுவரன் தலைமையில் இக்கூட்டணியின் செயற்குழுவில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆறு பேரும், ஈபிஆர்எல்எஃப் இருவர், தமிழ்த் தேசியக் கட்சியின் இருவர், ஈழத் தமிழர் சுயாட்சிக் கட்சியின் ஒருவர் உட்பட 11 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.[6]

தேர்தல் வரலாறு தொகு

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 2020 நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களில் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இவற்றில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் ஒரு உறுப்பினரைப் பெற்றுக் கொண்டது. கட்சியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன் 21,554 விருப்பு வாக்குகள் பெற்று முதல் தடவையாக நாடாளுமன்றம் செல்கின்றார்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள்
ஆண்டு வாக்குகள் வாக்கு % வென்ற இடங்கள் +/–
2020 51,301 0.44%
1 / 225
  1

2020 நாடாளுமன்றத் தேர்தல் தொகு

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி முதற் தடவையாக 5 ஆகத்து 2020 தேர்தலில் போட்டியிட்டது. க. வி. விக்னேஸ்வரன் தலைமையில் 0.44% வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 225 இடங்களில் 1 இடத்தைக் கைப்பற்றியது.

தேர்தல் மாவட்டங்கள் வாரியாக த.ம.தே.கூ வென்ற வாக்குகளும், இடங்களும்:

தேர்தல்
மாவட்டம்
வாக்குகள் % இடங்கள் தமதேகூ உறுப்பினர்கள்
யாழ்ப்பாணம் 35,927 10.00% 1 க. வி. விக்னேஸ்வரன் (தமிழ் மக்கள் கூட்டணி)
வன்னி 8,789 4.23% 0 -
திருகோணமலை 1,625 0.76% 0 -
மட்டக்களப்பு 4,960 0.76% 0 -
தேசியப் பட்டியல் 0 -
மொத்தம் 51,301 0.44% 1
மூலம்:"Parliamentary General Election 2020, Final District Results". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.

மேற்கோள்கள் தொகு

  1. "Recognized Political Parties". Rajagiriya, Sri Lanka: Election Commission of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 2 August 2020.
  2. 2.0 2.1 2.2 "New alliance for North". Daily FT (Colombo, Sri Lanka). 10 February 2020. http://www.ft.lk/news/New-alliance-for-North/56-695397. பார்த்த நாள்: 2 August 2020. 
  3. 3.0 3.1 Rajasingham, K. T, (10 February 2020). "Disgruntled Tamil elements form a new alliance to divides Tamils further". ஏசியன் டிரிபியூன் (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 21 பிப்ரவரி 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200221021933/http://www.asiantribune.com/node/93393. பார்த்த நாள்: 2 August 2020. 
  4. "Two Factions in Tamil Politics: History Repeats Itself!". Ceylon Today (Colombo, Sri Lanka). 14 March 2020. https://ceylontoday.lk/print-more/54297. பார்த்த நாள்: 2 August 2020. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உருவாகியது..." 9 February 2020.
  6. 6.0 6.1 D. B. S. Jeyaraj (24 March 2020). "How Will the TNA fare at Parliamentary Election?". The Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/How-Will-the-TNAfare-at-Parliamentary-Election/172-185559. பார்த்த நாள்: 2 August 2020. 
  7. "Polls at last; lacklustre election campaign ends tonight". The Sunday Times (Colombo, Sri Lanka). 2 August 2020. http://www.sundaytimes.lk/200802/columns/polls-at-last-lacklustre-election-campaign-ends-tonight-411316.html. பார்த்த நாள்: 2 August 2020. 

வெளி இணைப்புகள் தொகு

முகநூலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி