தமிழ் ராக்கர்ஸ்

வலைத்தளம்


தமிழ் ராக்கர்ஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பாக இணையத்தில் பகிரும், ஒரு இணையத்தளம் ஆகும். இது பிட்டொரென்ட் வகையை சேர்ந்ததாகும். இது தனக்கென ஒரு வழங்கி ஒன்றை வைத்துகொள்ளாமல், பயனர்களின் கணணிகளை வழங்கி (Peer to Peer) ஆக மாற்றி பயன்படுத்தும். இதில் உள்ள தரவுகளை பதிவறக்கம் செய்ய சில மென்பொருட்கள் தேவைபடுகின்றன உதாரணமாக "யூடொரென்ட்" ஐ கூறலாம். இந்த மென்பொருள் தமிழ் ராக்கர்ஸ் இணையத்திலிருந்து தரவுகளை பதிவறக்கம் செய்ய உதவுவோதோடு உங்கள் கணனியில் பதிவறக்கம் ஆகிய அந்த தரவு மீண்டும் பயனரை போன்ற இன்னொரு பயனருக்கு பதிவேற்றம் செய்யவும் உதவுகிறது. பதிப்புரிமை பெற்ற தரவு/ தகவல்களை பரிமாறுவதன் மூலம் தமிழ் ராக்கர்ஸ் இணைய உரிமையாளர் பெறும் அதே சட்டச்சிக்கலை பயனரும் பெற வேண்டிய நிலை உருவாகிறது.

TamilRockers
வலைத்தள வகைபிட்டொரென்ட்
கிடைக்கும் மொழி(கள்)தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி
வருவாய்தெரியவில்லை
வணிக நோக்கம்ஆம்
பதிவு செய்தல்கட்டாயமில்லை
அலெக்சா நிலை1,337 (2018.08.28)
தற்போதைய நிலைசெயல்பாட்டில்

புதிய திரைப்படங்களை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சவாலாக திரையிடப்பட்ட அன்றே இணையத்தில் பரப்பி வருகின்றனர்.[1][2] இந்த இணையத்தளத்தின் உரிமையாளரெனக் கருதி, கவுரிசங்கர் என்பவரை கைது செய்தனர், ஆனால் அவருக்கும் இந்த இணையத்தளத்திற்கும் தொடர்பில்லை என விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமின்றி அவர் கைதான அன்று வெளியான துப்பறிவாளன் திரைப்படமும் முதல் தரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியானது.[3][4]

வரலாறு

2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ் ராக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. தமிழ் ராக்கர்ஸ் அட்மின்களாக[தெளிவுபடுத்துக] பலர் உள்ளனர். இவர்கள் கனடா, பிரான்சு, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து செயல்படலாம் என்று கருதப்படுகிறது. செல்பேசிகளில்கூட திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் தொழில்நுட்பம் வந்த பிறகு தமிழ் ராக்கர்ஸ் வளர்ச்சி அடைந்தது. இந்த இணையதளத்தில் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்வதற்கு எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை என்றாலும், பதிவிறக்கம் செய்யும்போது அதனுடன் ஒரு பாப்அப்[தெளிவுபடுத்துக] விளம்பரமும் பதிவிறக்கம் ஆகும். அந்த விளம்பரம் மூலம்தான் இவர்கள் மாதம் பல லட்சங்கள் ஈட்டுகின்றனர்.[5]

மேற்கோள்கள்

  1. "Kollywood targets people behind Tamilrockers, Tamilgun: Brings out ad identifying them". தி நியூஸ் மினிட். பார்க்கப்பட்ட நாள் 22 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Shocking! Thalapathy Vijay's 'Mersal' openly challenged by Tamilrockers". இந்தியாகிளிட்சு. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Vishal turns real life hero? Admin of a piracy website arrested". பார்க்கப்பட்ட நாள் 22 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Vishal's Thupparivaalan hit by piracy, already out online". பார்க்கப்பட்ட நாள் 22 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. ஆர்.சிவா (12 நவம்பர் 2018). "உரிமையாளர்களை கண்டுபிடிப்பது சிரமம்; ரகசிய இணையதளத்தை பயன்படுத்தும் 'தமிழ் ராக்கர்ஸ்': சைபர் கிரைம் போலீஸார் தகவல்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_ராக்கர்ஸ்&oldid=3930656" இலிருந்து மீள்விக்கப்பட்டது