தமிழ் வண் என்பது 'தமிழ் ஒன் இன்க்.' என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கனடா நாட்டில் இருக்கும் கனேடியத் தமிழர்களுக்கான 24 மணி நேரம் ஒளிபரப்பப்படும் பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை 6 செப்டம்பர் 2001 ஆம் ஆண்டு முதல் தொராண்டோ இடத்தை மையமாக வைத்து தனது ஒளிபரப்பை செய்து வருகிறது.

தமிழ் வண்
ஒளிபரப்பு தொடக்கம் 6 செப்டம்பர் 2001
உரிமையாளர் தமிழ் ஒன் இன்க். (சுபனேசேரி)
நாடு கனடா
ஒளிபரப்பாகும் நாடுகள் கனடா
தலைமையகம் தொராண்டோ
முன்பாக இருந்தப்பெயர் தமிழ் தொலைக்காட்சி

வரலாறு தொகு

தமிழ் வண் தொலைக்காட்சி முதலில் நெட்வொர்க் தெலிவிசன் இன்றர்நேசனல் நிறுவனத்திற்குச் சொந்தமானது, அவர்கள் கனேடிய வானொலி தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு ஆணையத்தால் 'தமிழ் சேவை' என்ற சிறப்பு சேனலைத் தொடங்க உரிமம் பெற்றனர். இது தமிழ் பேசும் கனேடியத் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டது. பின்னர் இந்த அலைவரிசை செப்டம்பர் 6, 2001 அன்று ரோஜர்ஸ் கேபிளில் தமிழ் தொலைக்காட்சி என்ற பெயரில் தொடங்கப்பட்டது.[1]

பிப்ரவரி 9, 2001 அன்று பீதாம்பரன் கோணேஸ்வரன் என்பவரால் நெட்வொர்க் தெலிவிசன் இன்றர்நேசனலை மீடியாநெட் கனடா லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. பின்னர் பிலிப் கோணேசுவரன் என்பவரின் தலைமை நிருவாகத்தின் கீழ் இயக்கப்பட்டது. திசம்பர் 5, 2002 அன்று இந்த அலைவரிசையை கட்டண தொலைக்காட்சி சேவையிலிருந்து வழக்கமான சிறப்பு சேவையாக மாற்றப்பட்டது.[2]

இந்த அலைவரிசை செப்டம்பர் 2006 இல் 'தமிழ் வண்' என மறுபெயரிடப்பட்டது. பின்னர் பிப்ரவரி 1, 2008 அன்று தமிழ் ஒன் இன்க் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த அலைவரிசையை சுபனசிறி வைத்திலிங்கம் என்பவர் வாங்கினார். ஆகத்து 30, 2013 அன்று தமிழ் வண் உரிமம் பெற்ற வகை பி சிறப்பு சேவையிலிருந்து விலக்கு பெற்று மூன்றாம் மொழி சேவையாக மாற்றப்பட்டது. சூன் 2016 இல், தமிழ் ஒன் உயர் வரையறு தொலைக்காட்சி சேவைக்கு மாறியது.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_வண்&oldid=3591061" இலிருந்து மீள்விக்கப்பட்டது