தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1979
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1979 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1979 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.
வ.எண் | தலைப்பு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
---|---|---|---|---|
1 | கவிதை | 1. கவிதை மேகங்கள் (முதல் பரிசு), 2. கனவு மலர்கள் (இரண்டாம் பரிசு) |
1. மு. பி. பாலசுப்பிரமணியம் 2. இளத்ந்தேவன் |
1. பாரி நிலையம், சென்னை. 2. பொன்முத்துப் பதிப்பகம், சென்னை. |
2 | நாவல் | 1. தாயகம் (முதல் பரிசு) 2. நச்சு வளையம் (இரண்டாம் பரிசு) |
1. பொன். சௌரிராஜன் 2. இராம.பெரியகருப்பன் (தமிழண்ணல்) |
1. பாரி நிலையம், சென்னை 2.சோலை நூலகம், மதுரை. |
3 | மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் | 1.பாரதிதாசன் ஒரு புரட்சிக் கவிஞர் (முதல் பரிசு) 2. வண்ணப்பூக்கள் (மூன்று தொகுதிகள்) (இரண்டாம் பரிசு) |
1. மா. செல்வராசன் 2. ப. நீலகண்டன் |
1. பாரி நிலையம், சென்னை. 2. வானதி பதிப்பகம், சென்னை. |
4 | மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் | ----- | ----- | ----- |
5 | குழந்தை இலக்கியம் | 1. ஆனந்தனின் ஆசை (முதல் பரிசு) 2. பாதாள உலகில் பறக்கும் பாப்பா |
1. வெ. நல்லதம்பி 2. கல்வி கோபாலகிருஷ்ணன் |
1. தி லிட்டில் பிளவர் கம்பெனி, சென்னை. 2. கல்வி பதிப்பகம், சென்னை. |
6 | தத்துவம், சமயம், அளவியல், அறவியல் | ----- | ----- | ----- |
7 | நாடகம் | 1. பெரிய இன்பம் (முதல் பரிசு) 2. தேர்க்கூட்டம் (இரண்டாம் பரிசு) |
1. க. பெருமாள் 2. மனசை ப. கீரன் |
1. வான்மழை பதிப்பகம், சென்னை. 2. வேணி வெளியீடு, சென்னை. |
8 | கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் | ----- | ----- | ----- |
9 | சிறுகதை | ----- | ----- | ----- |
10 | கல்வி, உளவியல் | 1. ஆங்கிலம் பயில எளிய வழி (முதல் பரிசு) 2. பயிற்றுப் பயிற்சியும், மொழியாசிரியர்களும் (இரண்டாம் பரிசு) |
1. நெ. சி. தெவசிகாமணி 2. மு, கோவிந்தராசன் |
1. பைலட் பதிப்பகம், சென்னை 2. திருமலைக்குமரன் பதிப்பகம், கூத்தங்குடி, தஞ்சாவூர் மாவட்டம். |
11 | மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் | நீரிழிவு நோயாளிக்கு வாழ்க்கை முறைகள் | இ.எஸ்.எஸ்.இராமன் | விசாலாட்சி பதிப்பகம், சென்னை. |