தயால்பூர்

இந்திய பஞ்சாப் கிராமம்

தயால்பூர் (Dialpur) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மாவட்டம் மற்றும் கபூர்தலா மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களுக்குள்ளும் அடங்கியுள்ள ஒரு கிராமமாகும். காபுர்தாலாவிலிருந்து இது 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது தயால்பூரின் மாவட்ட மற்றும் துணை மாவட்ட தலைமையகமாகும். பஞ்சாபின் இரண்டு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு சில கிராமங்களில் இதுவும் ஒன்று என்பதால் இந்த கிராமம் தனித்துவமானது. இந்தியாவின் அரசியலமைப்பு மற்றும் பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின்படி கிராமத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருக்கும் ஒரு சர்பஞ்ச் இந்த கிராமத்தை நிர்வகிக்கிறார்.

மக்கள்தொகை தொகு

2011 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தயால்பூரில் மொத்தம் 918 வீடுகள் உள்ளன. 3,995 பேர் கொண்ட மக்கள் தொகையில் 2,240 ஆண்களும் 1,755 பெண்களும் உள்ளனர். தயால்பூரின் கல்வியறிவு விகிதம் 80.29 சதவீதமகும். இது மாநில சராசரியான 75.84 சதவீத்ததை விட அதிகமாகும். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மக்கள் தொகை 398 ஆகும், இது தயால்பூரின் மொத்த மக்கள்தொகையில் 9.96 சதவீதமாகும். குழந்தை பாலின விகிதம் தோராயமாக 785 ஆகும், இது மாநில சராசரி 846 ஐ விட குறைவாக உள்ளது. [1]

சதி தொகு

கிராமத்தில் அட்டவணை சாதி (எஸ்சி) கிராமத்தின் மொத்த மக்கள்தொகையில் 28.89 சதவீதாமாகும். இந்த ஊரில் எந்த அட்டவணை பழங்குடியினரும் (எஸ்.டி) இல்லை, [2]

விமான பயண இணைப்பு தொகு

கிராமத்திற்கு மிக அருகில் உள்ள விமான நிலையம் ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையம் .

வெளி இணைப்புகள் தொகு

குறிப்புகள் தொகு

  1. "Dialpur". census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 13 July 2016.
  2. https://www.census2011.co.in/data/village/29127-chuharwal-punjab.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயால்பூர்&oldid=2888965" இலிருந்து மீள்விக்கப்பட்டது