தர்மம் எங்கே
தர்மம் எங்கே (Dharmam Engey) 1972 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ஏ. சி. திருலோகச்சந்தர் எழுதி இயக்கியுள்ளார். சாந்தி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பெரியண்ணா தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். சிவாஜி கணேசன், ஜெயலலிதா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தர்மம் எங்கே | |
---|---|
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | பெரியண்ணா |
கதை | ஏ. சி. திருலோகச்சந்தர் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெயலலிதா |
ஒளிப்பதிவு | தம்பு |
படத்தொகுப்பு | பி.கந்தசாமி |
கலையகம் | சாந்தி பிலிம்ஸ் |
வெளியீடு | சூலை 15, 1972 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
தயாரிப்பு தொகு
தர்மம் எங்கே, திரைப்படமானது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இதற்கு முன் நடித்த தெய்வ மகன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவரது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான சாந்தி பிலிம்சில் தயாரிக்கப்பட்டது. மேலும் இத்திரைப்படம் இதற்கு முன்பு சிவாஜி கணேசன் நடித்த சிவந்த மண் திரைப்படத்தின் சாயலில் கதை அம்சத்தோடு படமாக்கப்பட்ட போதிலும் ரசிகர்களிடையே சிவந்த மண் திரைப்படத்தின் வெற்றியை முறியடிக்க முடியவில்லை பெரும் தோல்வி படமாக அமைந்தது. ஆனால் இப்படத்தின் பாடல்கள் கண்ணதாசன்[1] வரிகளில் இன்று வரை மிகவும் ரசித்து கேட்கும் பாடலாக காலம் கடந்தும் நிற்கிறது.
தர்மம் எங்கே திரைப்படம் தமிழ்நாட்டில் கடலூர்[2] மற்றும் ஏ.வி.எம். படப்பிடிப்புக் கூடம் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.[3]
வெளியீடு தொகு
1972ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவேண்டிய தர்மம் எங்கே திரைப்படம்,[4] சூலை மாதம் 15ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.[5]
மேற்கோள்கள் தொகு
- ↑ "Dharmam Engay Tamil Film EP Vinyl Record by MS Viswanathan". https://mossymart.com/product/dharmam-engay-tamil-film-ep-vinyl-record-by-ms-viswanathan/.
- ↑ Ragunathan, A. V. (26 January 2012). "'Thane' did not spare even sand dunes". The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/%E2%80%98Thane-did-not-spare-even-sand-dunes/article13380769.ece.
- ↑ Randor Guy (14 June 2017). "Dharmam Engey (1972)". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/tamil-classic-films/article19047160.ece.
- ↑ "தர்மம் எங்கே" (in ta). Dina Thanthi. 15 March 1972.
- ↑ "151-160". http://nadigarthilagam.com/filmographyp16.htm.