தலைஞாயிறு கைலாசநாதசுவாமி மற்றும் கோதண்டராமசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

தலைஞாயிறு கைலாசநாதசுவாமி மற்றும் கோதண்டராமசுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு கைலாசநாதசுவாமி மற்றும் கோதண்டராமசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:அக்ரகாரம் தெரு, தலைஞாயிறு, வேதாரண்யம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வேதாரண்யம்
மக்களவைத் தொகுதி:நாகப்பட்டினம்
கோயில் தகவல்
மூலவர்:கைலாசநாதசுவாமி மற்றும் கோதண்டராமசுவாமி (ரெங்கநாதர்)
தாயார்:கற்பகவள்ளி ஸ்ரீதேவி, பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:திருவாதிரை, தைப்பூசம், ஸ்ரீராமநவமி
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் கைலாசநாதசுவாமி, கோதண்டராமசுவாமி (ரெங்கநாதர்), கற்பகவள்ளி ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகள் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் மொத்தம் 11 கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காரணாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. [[தை மாதம்]] திருவாதிரை, தைப்பூசம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் ஸ்ரீராமநவமி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)