தளி (கிருட்டிணகிரி)
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்
தளி (ஆங்கிலம்:Thally அல்லது Thalli, கன்னடம்:ತಳಿ) என்பது கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஊராகும். இது தளி ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமாக விளங்குகிறது. [1]
தளி
குட்டி இங்கிலாந்து | |
---|---|
சிற்றூர் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி மாவட்டம் |
மொழிகள்: தமிழ், தெலுங்கு, கன்னடம் | |
• ஆட்சி மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635118 |
தொலைபேசி குறியீட்டு எண் | 04347 |
வாகனப் பதிவு | TN-70 |
அமைவிடம்
தொகுதளி நகரம், தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஓசூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தொலைவிலும், கிருஷ்ணகிரியிலிருந்து 78 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
புவியியல்
தொகுதளியைச் சுற்றிலும் குன்றுகளாலும், மலைகளாலும் சூழப்பட்டு ஆண்டு முழுவதும் குளிர்ச்சியாக இருப்பதால் குட்டி இங்கிலாந்து என பெயர்ப்பெற்றது.
இதன் பெயரால் தளி சட்டமன்றத் தொகுதி உள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-12-23.