தள்ளாடு நடனம்

தள்ளாடு நடனம் (Tremble dance) அல்லது நடுங்கு நடனம் என்பது தேனீக்களில் தொழிலாளர்களிடமிருந்து மகரந்தங்களைப் பெறுவதற்காக ஏபிசு மெலிபெரா சிற்றினத்தைச் சேர்ந்த தேனீக்கள் ஆடும் ஒரு வகை நடனம் ஆகும்.[1]

வரலாறு

தொகு

தள்ளாடு நடனம் முதன்முதலில் 1920களில் கார்ல் வான் பிரிச் என்பவரால் விவரிக்கப்பட்டது. இவர் வாலாட்டு நடனத்தை முதன்முதலில் விவரித்தார் ஆவார். ஆனால் இந்த நடனம் குறித்த செய்திகள் 1993 வரை அதிகமாக அறியப்படவில்லை. வொல்ப்காங் கிர்ஷ்னர் நிகழ்த்திய ஆய்வின் போது, இந்நடனம் அருகிலுள்ள வேலக்காரத் தேனீக்கள் பறந்து சென்று தேன் சேகரிப்பதை தவிர்த்தபோது அறியப்பட்டது.[2]

செயல்பாடு

தொகு

தேனீயின் நடுக்கம் நடனம் வேலைக்காரத் தேனீக்கள் மகரந்தங்களைச் சேகரித்து தேனடைக்குத் திரும்பியதும் சேகரித்த மகரங்களைக் கூடுகளில் உள்ள தேனீக்கள் பெற்று தேனடைகளில் சேகரிக்க நீண்ட தாமதம் அல்லது பெறுநர் தேனீக்களின் பற்றாக்குறையை உணரும்போது ஒரு தேனைச் சேகரிக்கும் வேலைக்காரத் தேனீக்களால் நிகழ்த்தப்படுகிறது. இது தேனைச் சேகரிக்கும் வேலைக்காரத் தேனீக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மகரந்தங்களைப் பெறத் தேனடையில் உள்ள தேனீக்களின் பணி ஒதுக்கீட்டை மாற்ற வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கிறது.[3] இது இடைதேடும் வேலைக்காரத் தேனீக்களின் வாலாட்டு நடனத்தின் போது வெளியிடப்படும் வாசனையையும் பரப்பக்கூடும்.[4] தேனீ கூட்டமைப்பில் குழு நடத்தையைக் கட்டுப்படுத்துவதற்கான இரண்டு "முதன்மை ஒழுங்குமுறை வழிமுறைகள்" வாலாட்டு நடனம் மற்றும் தள்ளாடு நடனம் வேலைக்காரத் தேனீக்கள் மத்தியில் பணி ஒதுக்கீட்டை மாற்றத் தேனீக்கள் பயன்படுத்தப்படும் நான்கு அல்லது ஐந்து கவனிக்கப்பட்ட வழிமுறைகளில் ஒன்று.[5]

எத்தனால் நுகர்வுடன் தொடர்பு

தொகு

தேனீக்களை எத்தனால் உட்கொள்வது நடுக்கம் நடனத்தை அதிகரிப்பதாகவும், அதே நேரத்தில் வாலாட்டு நடனத்தின் போது குறைப்பதாகவும் அறியப்படுகிறது.[6]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ratnieks, F. L. W. (2001) Are you being served? Supermarkets and bee hives. The Beekeepers Quarterly. Vol. 67, pp. 26-27.
  2. Kirchner, Wolfgang H. (September 1993) Vibrational signals in the tremble dance of the honeybee, Apis mellifera. Behavioral Ecology and Sociobiology. Vol. 33, Number 3. pp. 169-172.
  3. Thom, Corinna. (March 2003) The tremble dance of honey bees can be caused by hive-external foraging experience. The Journal of Experimental Biology. Vol. 206, pp. 2111-2116
  4. Thom C., Gilley D.C., Hooper J., Esch H.E. (September 2007) The scent of the waggle dance. PLoS Biology. Vol. 5, Issue 9. e228. pp. 1862-1867.
  5. Anderson, Carl; Ratnieks, Francis L. W. (July 1999) Worker allocation in insect societies: coordination of nectar foragers and nectar receivers in honey bee (Apis mellifera) colonies. Behavioral Ecology and Sociobiology. Vol. 6, Number 2. pp. 73-81
  6. Bozic J., C. Abramson, M. Bedencic. (April 2006) Reduced ability of ethanol drinkers for social communication in honeybees (Apis mellifera carnica Poll.). Alcohol. Volume 38 , Issue 3. pp. 179-183.

ஆதாரங்கள்

தொகு

Sources and further reading

தொகு
  • Arnold et al. (September 2002) Intra-Colonial Variability in the Dance Communication in Honeybees (Apis mellifera). Ethology Vol. 108, Issue 9. pp. 751–761.
  • Biesmeijer, J. C. (May 2003) The occurrence and context of tremble dancing in free-foraging honey bees (Apis mellifera). Behavioral Ecology and Sociobiology. Volume 53, Number 6. pp. 411–416.
  • Dyer, Fred C. (January 2002) The biology of the dance language. Annual Review of Entomology. Vol. 47. pp. 917–949.
  • Schneider, Stanley S.; Lee A. Lewis. (2003) Honey bee communication: the "tremble dance", the vibration signal and the "migration dance", in: Webster T. (Ed.) Monographs in honey bee biology. Northern Bee Books, West Yorks, Great Britain. Vol. 1, pp. 1–26.
  • Schneider, Stanley S.; Lee A. Lewis. (March 2004) The vibration signal, modulatory communication and the organization of labor in honey bees, Apis mellifera. Apidologie. Vol. 35, Issue 2. pp. 117–131. பரணிடப்பட்டது 2007-07-12 at the வந்தவழி இயந்திரம்
  • Seeley, Thomas D. (July 1997) Honey Bee Colonies are Group-Level Adaptive Units. The American Naturalist. Vol. 150, Supplement: Multilevel Selection. pp. S22-S41.
  • Seeley, Thomas D. (June 1999) Born to Dance. Natural History. Vol. 108, Number 6. pp. 54–57.
  • Takeshi, Otani. (2001) Dance performance at very near distance from the honeybee hive. Honeybee Science. Vol. 22, Number 3. pp. 127–138.
  • Thom, Corinna. (2002) Dynamics and Communication Structures of Nectar Foraging in Honey bees (Apis mellifera). Dissertation zur Erlangung des naturwissenschaftlichen Doktorgrades der Bayerischen Julius-Maximilians -Universität Würzburg.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தள்ளாடு_நடனம்&oldid=4052520" இலிருந்து மீள்விக்கப்பட்டது