தவல் பதியா (Dhaval Bathiya, பிறப்பு: 26 சூன் 1983) இந்தியப் படைப்பாளி மற்றும் பயிற்சியாளர். "மகிழ்வோடு படித்து, தேர்வில் முதலிடம் பெறுவதெப்படி?" என்ற நூலை எழுதி வெளியிடும்போது, இவருக்கு வயது 19.

தவல் பதியா
பிறப்பு26 சூன் 1983 (1983-06-26) (அகவை 40)
தேசியம்இந்தியன்
பணிஎழுத்தாளர், பயிற்றுவிப்பாளர்

இளமைக் காலம் தொகு

மும்பையில் ஓர் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த இவர், மாணாக்கராக இருந்தபோது கல்வி கற்பதிலும் சிறந்து விளங்கினார். நர்சீ மோன்ஜீ கல்லூரியில் பட்டதாரியானதுடன், ஏஸிஎஸ் ( ACS ), எல்.எல்.பி.( LLP ) படிப்புக்களையும் நிறைவு செய்தார். பண்டைய இந்திய ஆன்மிகக் குருக்கள் வடிவமைத்த கணிதச் சமன்பாடுகளில், கல்லூரி வாழ்க்கையின் துவக்க காலங்களிலேயே மிகவும் ஈடுபாடு கொண்டு தேர்ச்சி பெற்று விளங்கினார்.இந்தத் திறமையின் காரணமாக, மிகக் கடினமான கணிதங்களுக்கும், கணிதச் சமன்பாடுகளுக்கும் மிகமிக எளிதாக விடை காணும் திறமை உடையவராகத் திகழ்ந்தார். சக மாணாக்கர்களிடத்தும், ஆசிரியர்களிடத்தும் இத்திறமையை வெளிப்படுத்தியபோது, எதிர்ப்புக்களே மிஞ்சியது. இவற்றிலிருந்தெல்லாம் விடுபட்டு பயிற்சிப் பட்டறைகளையும், விவாத அரங்குகளையும் தயக்கமின்றி நடத்தி, தாம் கையாண்ட வழிமுறைகளை மக்களிடம் பிரபலமடையச் செய்தார்

டைம்ஸ் ஆப் இந்தியாவால் ஈட்டிய புகழ் தொகு

இத்தகைய பயிற்சியின்போது, கலந்துகொண்ட டைம்ஸ் ஆப் இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளர், 100 ஆண்டுக் காலண்டரை, ஐந்து நிமிடங்களில் எப்படி நினவு வைத்துக் கொள்ள முடிகிறது ? பயிற்சி அரங்கில் கூடியிருந்த 300 நபர்களின் பெயர்களையும், அவர்களது தொலைபேசி எண்களையும் பிழையின்றிச் சொல்ல முடிகின்றது என்று "WHIZ KID" என்னும் தலைப்பில் மறுநாள் தினசரியில் வெளியிட்டார்.[1] ஊடகங்களும், தொழில்துறையினரும் வியப்பெய்தினர். பின்னர், தவல் பதியா கணித மேதை, எண்களின் சூட்சுமங்களை நன்கறிந்த அறிவாளி என்றும் அழைக்கப்பட்டார்.

இன்றைய நிலையில் இவர் தொகு

இன்றைய கால கட்டத்தில், தவல் பதியாவின் திறன்மிகுக் கோட்பாடுகள் 4,00,00 இந்திய மாணாக்கர்களுக்கும், குவைத், யுனைடட் அரேபிக் எமிரேட்ஸ், அமெரிக்கா, மொரிஷியஸ், நேபாளம், ஓமன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் பல நாடுகளுக்கும் சென்றடைந்துள்ளது. தற்பொழுது, ”எளிய வேதவழி கணிதம்” தமிழில் 280 பக்கங்களில் வெளிவந்துள்ளது.

இவர் எழுதியுள்ள நூல்கள் தொகு

  • How to Top Exams and Enjoy Studies
  • Vedic Mathematics Made Easy
  • The Best of Sudoku
  • He Swam with Sharks for an Ice-cream

மேற்கோள்கள் தொகு

  1. "Article Show". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 10 October 2011.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவல்_பதியா&oldid=3585160" இலிருந்து மீள்விக்கப்பட்டது