தாக்கூர் ராம் சிங் (புரட்சியாளர்)
தாக்கூர் ராம் சிங் (Thakur Ram Singh (revolutionary) ) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1911 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இவர் வாழ்ந்தார். இந்திய பொதுவுடமைக் கட்சியின் புரட்சியாளரான இவர் பகத்சிங்கின் நண்பராவார். தனது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் செயல்பாட்டாளராகத் தொடங்கினார். ஆனால் பகத் சிங் மற்றும் அவரது இந்துசுதான் சோசலிச குடியரசு இராணுவத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். அச்மீர் தோக்ரா துப்பாக்கிச் சூடு வழக்கில் தாக்கூர் ராம் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் நிக்கோபார் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குள் இவர் ஒரு 'பொதுவுடமை பிரிவை உருவாக்கினார், பின்னர் அந்தமானில் இருந்து விடுதலையான பிறகு இவர் இந்திய பொதுவுடமை கட்சியில் சேர்ந்தார். சீன-இந்தியப் போரின் நாட்களில் இவர் பொதுவுடமை இயக்கத்தில் பிளவை ஆதரித்தார் மற்றும் இந்திய பொதுவுடமை கட்சி (மார்க்சியம்) உத்தரபிரதேச குழுவின் நிறுவன உறுப்பினராக இருந்தார். [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Article by IANS over death of Thakur Ram Singh". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2023-11-11.