தாண்டலம்(III) குளோரைடு

வேதிச் சேர்மம்

தாண்டலம்(III) குளோரைடு (Tantalum(III) chloride) என்பது TaCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். தாண்டலம் குளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. விகிதவியலுக்கு ஒவ்வா விகிதங்களில் குளோரின் இச்சேர்மத்தில் TaCl2.9 முதல் TaCl3.1 சேர்ந்துள்ளது.[2] [Ta6Cl18]4− மற்றும் [Ta6Cl14](H2O)4 ஆகியவை Ta(III) குளோரைடு கொண்ட எதி மின்னயனி மற்றும் நடுநிலை கொத்து சேர்மங்களாகும்.[3]

தாண்டலம்(III) குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தாண்டலம் டிரைகுளோரைடு
இனங்காட்டிகள்
13569-67-0
ChemSpider 75412
EC number 236-988-7
InChI
  • InChI=1S/3ClH.Ta/h3*1H;/q;;;+3/p-3
    Key: UDKRLEXYBPHRQF-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83582
  • Cl[Ta](Cl)Cl
பண்புகள்
Cl3Ta
வாய்ப்பாட்டு எடை 287.30 g·mol−1
தோற்றம் கரும் பச்சை
உருகுநிலை 440 °C (824 °F; 713 K) சிதைவடையும்[1]
ஆம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் தாண்டலம்(III) புரோமைடு
தாண்டலம்(III) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் நையோபியம்(III) குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Ta6Cl182− போன்ற விளிம்பு மூடிய எண்முகக் கொத்துச் சேர்மங்களின் கட்டமைப்பு.[4]

தயாரிப்பு

தொகு

தாண்டலம்(V) குளோரைடை தாண்டலம் உலோகத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் குறைத்தல் வினை நிகழ்ந்து தாண்டலம்(III) குளோரைடு உருவாகிறது. தாண்டலம்(III) குளோரைடை 305 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கி, ஆவியை 600° செல்சியசு வெப்பநிலையிலுள்ள தாண்டலம் தகட்டின் மீது செலுத்தி 365 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஒடுக்கவினைக்கு உட்படுத்தினால் தாண்டலம்(III) குளோரைடு உருவாகும். ஒடுக்கப் பகுதி மிக அதிக வெப்பநிலையில் வைக்கப்பட்டால், அதற்குப் பதிலாக TaCl2.5 படிகமாகும்.[5]

TaCl4 சேர்மத்தை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்துவதன் மூலமும், ஆவியாகும் TaCl5 சேர்மத்தை அகற்றுவதன் மூலமும் தாண்டலம்(III) குளோரைடு சேர்மத்தைத் தயாரிக்கலாம். TaCl3 ஐ விட்டுவிட்டு TaCl5 சேற்மத்தை ஆவியாக்கினால் TaCl3 சேர்மம் கிடைக்கும்.[6]

எத்திலீன் முன்னிலையில் 1,4-இருசிலில்-வளையயெக்சாடையீனுடன் TaCl5 சேர்மத்தின் தொலுயீன் கரைசலைச் சேர்த்து "உப்பு இல்லாத குறைப்பு" வினைக்கு உட்படுத்தினால் TaCl3 சேர்மத்தின் அணைவுச் சேர்மம் உருவாகிறது:[7]

TaCl5 + C6H6(SiMe3)2 -> TaCl3 + C6H6 + 2 Me3SiCl

பண்புகள்

தொகு

500 °செல்சியசு வெப்பநிலைக்கு TaCl3 விகிதச்சமமற்றை விகிதத்தில் சிதைந்து TaCl5 சேற்மத்தைக் கொடுக்கிறது.[6] தாண்டலம்(III) குளோரைடு அறை வெப்பநிலை நீரில் கரையாது. நீர்த்த அமிலத்திலும் கரையாது. ஆனால் கொதிக்கும் நீரில் கரையும். நீல-பச்சை நிறக் கரைசல் உருவாகும்.[6]

ஒருங்கிணைவுச் சேர்மங்கள்

தொகு

ஓர் ஒருமம் அல்லது இருமமாக சில ஈந்தணைவிகளுடன் சேர்ந்து தாண்டலம்(III) குளோரைடு ஒருங்கிணைவுச் சேர்மங்களை உருவாக்கும்.

Ta(=C-CMe3)(PMe3)2Cl3, [TaCl3(P(CH2C6H5)3THF]2μ-N2 மற்றும் [TaCl3THF2]2μ-N2 (இருநைட்ரசன் ஒருங்கிணைவுச் சேர்மங்கள்) ஆகியவை சில ஒருங்கிணைவுச் சேர்மங்களாகும். [8]

ஓர் இருமமாக ஒருங்கிணைவுச் சேர்மங்களில் Ta2Cl6(SC4H8)3 (SC4H8=டெட்ரா ஐதரோ தையோபீன்) ஆகும். Ta2Cl6(SMe2)3, Ta2Cl6(தயேன்)3 மற்றும் Ta2Cl6(தயோலேன்)3 ஆகியவை இரண்டு தாண்டலம் அணுக்களுக்கும், பாலம் அமைத்துள்ள இரண்டு குளோரைடுகள் மற்றும் பாலம் அமைத்துள்ள ஈந்தணைவி ஆகியவற்றிற்கும் இடையே இரட்டைப் பிணைப்பைக் கொண்டுள்ளன.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Haynes, William M. (2016). CRC Handbook of Chemistry and Physics (in ஆங்கிலம்) (97 ed.). CRC Press. pp. 4–97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4987-5429-3.
  2. Cotton, F Albert; Wilkinson, Geoffrey (1966). Advanced Inorganic Chemistry A Comprehensive Text. John Wiley. p. 927.
  3. Duraisamy, Thirumalai; Hay, Daniel N. T.; Messerle, Louis (2014). "Octahedral Hexatantalum Halide Clusters". Inorganic Syntheses: Volume 36. Vol. 36. pp. 1–8. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9781118744994.ch1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118744994.
  4. Thaxton, C. B.; Jacobson, R. A. (1971). "The Crystal Structure of H2(Ta6Cl18)(H2O)6". Inorganic Chemistry 10 (7): 1460–1463. doi:10.1021/ic50101a029. 
  5. Gutmann, Viktor (2012). Halogen Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-14847-4.
  6. 6.0 6.1 6.2 Remy, Heinrich (1963). Treatise on Inorganic Chemistry: Sub-groups of the periodic table and general topics (in ஆங்கிலம்). Elsevier Publishing Company. p. 115.
  7. 7.0 7.1 Tsurugi, Hayato; Mashima, Kazushi (2019). "Salt-Free Reduction of Transition Metal Complexes by Bis(trimethylsilyl)cyclohexadiene, -dihydropyrazine, and -4,4′-bipyridinylidene Derivatives". Accounts of Chemical Research 52 (3): 769–779. doi:10.1021/acs.accounts.8b00638. பப்மெட்:30794373. 
  8. Churchill, Melvyn Rowen.; Wasserman, Harvey J. (1982). "The Ta(μ-N2)Ta System. 2. Crystal Structure of [TaCl3(P(bz)3)(THF)]2(μ-N2).≈0.7CH2Cl2. A Binuclear Di-imido Complex of Octahedral Tantalum(V)". Inorganic Chemistry 21 (1): 218–222. doi:10.1021/ic00131a040. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாண்டலம்(III)_குளோரைடு&oldid=4149135" இலிருந்து மீள்விக்கப்பட்டது