தாத்ரா மற்றும் நகர் அவேலி

இந்தியாவின் ஒன்றியப் பகுதி
(தாத்ரா மற்றும் நாகர் அவேலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)


தாத்ரா & நகர் அவேலி (Dadra and Nagar Haveli, போர்த்துக்கேய மொழி: Nagar-Aveli), குசராத்தி: દાદરા અને નગર હવેલી, மராத்தி: दादरा आणि नगर हवेली) இது தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ எனும் ஒன்றிய பகுதியில் இந்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள மாவட்டம் ஆகும். இது, குஜராத்திற்கும் மகாராஷ்டிராவிற்கும் இடையே அமைந்துள்ளது[1]. இதன் தலைநகரம் சில்வாசா ஆகும். சில்வஸ்சாவில் நிறைந்துள்ள தொழிற்கூடங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம் அரசுக்கு கூடுதல் வரிவாய் கிடைக்கிறது. இதை 26 சன்வரி 2020 அன்று தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.

தாத்ரா மற்றும் நகர் அவேலி மாவட்டம்
—  ஒன்றியப் பகுதி  —
தாத்ரா மற்றும் நகர் அவேலி மாவட்டம்
இருப்பிடம்: தாத்ரா மற்றும் நகர் அவேலி மாவட்டம்

,

அமைவிடம் 20°16′N 73°01′E / 20.27°N 73.02°E / 20.27; 73.02
நாடு  இந்தியா
மக்களவைத் தொகுதி தாத்ரா மற்றும் நகர் அவேலி மாவட்டம்
மக்கள் தொகை

அடர்த்தி

3,43,709 (2011)

700/km2 (1,813/sq mi)

மொழிகள் மராத்தி மற்றும் குஜராத்தி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 491 சதுர கிலோமீட்டர்கள் (190 sq mi)
இணையதளம் dnh.nic.in

சில்வஸ்சா நகர மக்கள் குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகள் கலந்த வர்லி (Warli]) எனும் மொழி பேசுகின்றனர். சில்வஸ்சா நகர் அழகிய தோட்டங்களுக்கு பெயர் பெற்றது.

நகர் அவேலியில் உள்ள இதர நகரங்கள்: அம்லி (Amli), சிலி (Sili), , சைலி (Saili), அமல் (Amal), கனடி (Kanadi), வாசொன (Vasona), வெலுகம் (Velugam), டொலரா (Dolara) மற்றும் சிந்தாவனி.

நில அமைப்பு தொகு

ஒன்றியப் பகுதியானது மேற்குத் தொடர்ச்சிமலையின் மேற்கு அடிவாரத்தில் அமைந்துள்ளது. நகர் அவேலி குசராத் மகாராஷ்டிரா எல்லையிலும் தாத்ரா நகர் குசராத்தின் எல்லைக்குள்ளும் அமைந்திள்ளன.


பொது தொகு

தமன் கங்கா ஆறு இங்கு பாயும் ஒரே ஆறாகும். தாத்ரா & நகர் அவேலி நாற்பது விழுக்காடு காடுகள் கொண்டது.

முக்கிய நகரங்கள் தாத்ரா, ஆம்லி ஆகும்.

இவ்வொன்றியத்தில் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மக்களவைத் தொகுதி உள்ளது.

வரலாறு தொகு

ஆங்கிலேய ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும், முகலாயர்களின் எதிர்ப்பை நிலைநாட்டவும், மராத்தியர் போர்துகேயருடன் நட்பை வளர்க்க 1779-இல் ஒர் ஒப்பந்தம் செய்தனர். இதன் விளைவாக போர்துகேயரின் ஆட்சிக்குட்பட்ட பகுதியானது.

மக்கள் தொகையியல் தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தாத்ரா மற்றும் நகர் அவேலியின் மொத்த மக்கள் தொகை 3,43,709 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 46.72% மக்களும், நகரப்புறங்களில் 53.20% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 55.88% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 193,760 ஆண்களும் மற்றும் 149,949 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 774 பெண்கள் வீதம் உள்ளனர். 491 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 700 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 76.24 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 85.17 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 64.32 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 50,895 ஆக உள்ளது. [2]

சமயம் தொகு

தாத்ரா மற்றும் நகர் அவேலி ஒன்றியப் பகுதியில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 322,857 (93.93 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 12,922 (3.76 %) ஆகவும், ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 5,113 (1.49 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 217 (0.06 %) ஆகவும் , சமண சமய மக்கள் தொகை 1,186 (0.35 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 634 (0.18 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 293 (0.09 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 487 (0.14 %) ஆகவும் உள்ளது.

மொழிகள் தொகு

தாத்ரா நாகர் அவேலி ஒன்றியப் பகுதியில் மராத்தி, குஜராத்தி, மொழிகளுடன் வட்டார மொழியான வர்லி யும் பேசப்படுகிறது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு