தாமரை விருது

சங்ககால அரசர்கள் சிறந்த யாழிசைப் பாணனைப் போற்றிப் பொன்னால் செய்யப்பட்ட தாமரையை விருதாக வழங்கினர். சங்ககாலத்துக் காஞ்சி அரசன் தொண்டைமான் இளந்திரையன் தன்முன் பின்னணி இசைக்கருவிகளுடன் யாழிசை மீட்டித் தன் திறமையை வெளிப்படுத்திய பாணன் பித்தையில் தீயில் மலர்ந்த தாமரையைத் தன் கையால் சூட்டிப் பெருமைப்படுத்தினான். பித்தை என்பது ஆண்களின் தலைமுடி.

  • அந்தத் தாமரை பாணன் தலையில் மேக வெளிக்கு இடையே தோன்றும் நிலாப் போல இருந்ததாம்.
  • வண்டு மொய்க்காத தாமரையாம்.
  • நெருப்பில் பூத்த்தாம். (நெருப்பில் புடமிட்டுச் செய்யப்பட்டதாம்)[1]

அடிக்குறிப்புதொகு

  1. மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும்
    ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை
    நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி (பெரும்பாணாற்றுப்படை அடிகள் 480-482)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரை_விருது&oldid=1263107" இருந்து மீள்விக்கப்பட்டது