முதன்மை பட்டியைத் திறக்கவும்

தாராபுரம் வட்டம்

தாராபுரம் வட்டம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். [1] இந்த வட்டத்தின் தலைமையகமாக தாராபுரம் நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் 7 உள்வட்டங்களும், 71 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2]

இவ்வட்டத்தில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மூலனூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 282,752 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 140,576 ஆண்களும், 142,176 பெண்களும் உள்ளனர். 86,520 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் 60.5% வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 71.34% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,011 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 21502 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 937 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 73,742 மற்றும் 78 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 92.6%, இசுலாமியர்கள் 4.9%, கிறித்தவர்கள் 2.14% மற்றும் பிறர் 0.35% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராபுரம்_வட்டம்&oldid=2726412" இருந்து மீள்விக்கப்பட்டது