தாழ்வெப்பநிலை பொறியியல்

தாழ்வெப்பநிலை பொறியியல் இயந்திரவியல் பொறியில் துறையின் ஒருஅங்கமாக தாழ்நிலை வெப்பநிலையை கையாளுகிறது. மிக தாழ்வான/குறைந்த வெப்பநிலை செயல்முறையோடு தொடர்புடையது. எடுத்துக்காட்டாக காற்றை திரவமாக்கல், தாழ்வெப்பநிலை இயந்திரம் (ஏவூர்தியை முன்தள்ள), உறைநிலை அறுவை சிகிச்சை. பொதுவாக நைட்ரஜனின் கொதிநிலைக்கு (77K) குறைவான வெப்பநிலையே தாழ்நிலை வெப்பநிலைப் பொறியியலின் நோக்க எல்லையின் கீழ் வருகிறது. குளிர்பதனப்படுத்தும் துறையின் அண்மையில் நிகழ்ந்த வளர்ச்சியாக தாழ்வெப்பநிலை கருதப்படுகிறது. குளிர்பதனப் படுத்துதலின் முடிவு என்பதற்கான குறிப்பிட்ட எல்லை வரையறுக்கப்படவில்லை. தாழ்நிலை வெப்பநிலையின் பொதுவான மேற்கோள் வெப்பநிலையே - 1500 ஊ (120k) வெப்பநிலைக்கு குறைவானதாகவும் இதனையே தாழ்நிலை வெப்பலையாக கருதப்படுகிறது. தாழ்நிலை வெப்பநிலை பயன்பாட்டில் நான்கு வாயுக்கல் குறிப்பாக பங்களிக்கின்றன. (ஆக்சிஜன் - கொதிநிலை 90k) (நைட்ரஜன் - கொதிநிலை 77k) (உறீலியம் - கொதிநிலை 4.2k) மற்றும் (ஹைட்ரஜன் - கொதிநிலை 20k). தாழ்வெப்பநிலை என்ற வார்த்தை இலத்தீன் மொழியின் இரு வார்த்தைகளிலிருந்து உருவாக்கப்பட்டது. Cryo என்பதற்கான பொருள் தாழ்ந்த வெப்பநிலை, Genics என்பதற்கான பொருள் அறிவியல். Cryogenics என்பது தாழ்வெப்பநிலை அறிவியல்.