தாவரவியல் பெயர்

தாவரவியல் பெயர் (botanical name) என்பது முறைசார் இருசொற் பெயரீடு ஆகும். தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை (ICN) இப்பெயரை உறுதிபடுத்தி, பன்னாட்டு தரப்படுத்துகிறது. இப்பெயரிடலில் வளர்பயிர், பயிரிடும்வகை, பயிரிடும்வகைப் பிரிவு, பயிரின் அடைமொழி (epithet) ஆகியவைகளும், பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீடு (ICNCP) முறைமையின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு தாவரத்தினையும், பல்வேறு இடங்களில், பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர். ஒரு தாவரத்தினைக் குறித்த புரிதல், ஆய்வு, கருத்துப் பரிமாற்ற தெளிவுக்காக தாவரவியல் பெயர்கள் மிக உறுதுணையாக இருப்பதால், பன்னாட்டினரும் இப்பெயர்களுக்கு முன்னுரிமை தந்து பயன்படுத்துவர்.

Bellis perennis என்பது தாவரவியல் பெயர். இதனை பல்வேறு இடங்களில், பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர். (perennial daisy, lawn daisy, common daisy, and English daisy)

கூறுகள் தொகு

இப்பெயரிடல் முறைமை, “அனைத்து உயிர்களையும் குறிப்பாக அல்காகள் (பாக்டீரியா வகையின் கீழ் வரும் நீலப்பச்சைப்பாசி உட்பட), பூஞ்சைகள், தாவரங்கள் ஆகியவைகளின் தொல்லுயிர் எச்சம், அத்தொல்லுயிர் எச்சம் அல்லாதவை, சைட்ரிடியோமைகோட்டா (Chytridiomycota), ஓமைசிட்டுகள் (oomycete), பசை சணம் (slime mould), ஒளித்தொகுப்பு திறனுள்ள அதிநுண்ணுயிரிகள் போன்றவைகளின் வகைப்பாட்டியல் தரவுகள், ஒளிச்சேர்க்கை செய்யா உயிரிகளுடன் உள்ள தொடர்பு (நுண்ஒட்டுண்ணிகள் (Microsporidia) நீங்கலாக) குறித்தவைகளையும் உட்கூறுகளாக எடுத்துக்கொள்கிறது."[1]

இவற்றையும் காணவும் தொகு

மேற்கோள்கள் தொகு

துணைநூல்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவரவியல்_பெயர்&oldid=3902894" இலிருந்து மீள்விக்கப்பட்டது