தாவர கனிம ஊட்டங்கள் சில

தாவர கனிம ஊட்டங்கள் சில

விளக்கம்தொகு

தாவர கனிம ஊட்டம் பற்றிய படிப்பின் பிாிவு வேதிப் பொருட்களின் பயன்பாடு மற்றும் தாவர வளர்ச்சிக்கு தேவைப்படும் ஒரு வளர்ச்சி பொருள், இது தாவர வளர்சிதை மாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் மிக அவசியமானது.

1972-ல் இமானுசேல் எப்ஸ்டயின் இந்த கனிம ஊட்டத்தினை பற்றிய இரண்டு கருத்துகளை வெளியிட்டார்.

  • இந்த கனிமங்கள் இல்லையெனில் தாவரங்கள் இயல்பான வாழ்க்கை சுழற்சி முடிவடையாது.
  • இந்த கனிமங்கள் வளர்சிதை மாற்றத்திற்கு சிறிதளவு தேவைப்படும் ஒன்றாகும்.

தாவரங்களுக்கு கட்டாயம் தேவைப்படும் கனிமங்கள்.தொகு

  1. பெரு.மூலங்கள் - நைட்ரஜன் (N) பாஸ்பரஸ்(P) பொட்டாசியம் (K) கால்சியம்(Ca) சல்பர்(S) மெக்னீசியம்(Mg)
  1. நுண் மூலங்கள் - போரான்(B) குளோாின்(Cl) மாங்கனீஸ்(mn) இரும்பு(Fe) துத்தநாகம்(Zn) காப்பர்(Cu) மாலிப்டினம்(Mu) நிக்கல்(Ni) கோபால்ட்(Co)

பெரும மூலங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுவது ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், கார்பன் இவைகள் 95% மொத்த அளவுகளில் உலர்ந்த மரத்தால் உருவான சாம்பலில் காணப்படுவது.

நுண்மூலகங்கள் தாவர திசுக்களில் PPM அளவுகளில் 0.1 முதல் 200 ppm அல்லது 0.02% குறைவுக்கு காய்ந்த எடைகளில் காணப்படுகிறது.

பெரும மூலங்கள் - காற்று மற்றும் நீர் மூலம் உருவாவது.

சில தனிமங்களின் விளக்கம்தொகு

கார்பன்தொகு

கார்பன் என்பது அனைத்து உயிர்மூலக் கூறுகளுக்கும் அதாவது புரதம், ஸ்டார்ச், மாவுப்பொருள்(செல்லுலோஸ்) இவற்றிற்கு முதுகெலும்பாக காணப்படுகிறது. கார்பன் ஒளிச்சேர்க்கையை மேற்கொள்கிறது. இது கார்பன் - டை - ஆக்ஸைன் காற்றின் உதவியோடு கார்போஹைட்ரேட்டாக மாற்றி தாவரங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது.

இதன் பற்றாக்குறையால் தாவரங்களின் சாதாரண வளர்ச்சி மற்றும் உருவாக்கம் பாதிக்கப்படுகிறது.

ஹைட்ரஜன்தொகு

ஹைட்ரஜன் சர்க்கரை மற்றும் தாவரத்தில் கட்டுமானப் பொருளாக காணப்படுகிறது. இது அதிகமாக நீாின் மூலம் உருவாக்கப்படுகிறது. இதில் காணப்படும் ஹைட்ரஜன் அயனி ஒளிச்சேர்க்கையின் போதும் சுவாசித்தலின் போதும் எலக்ட்ரான்கனை கடத்துகிறது.

ஆக்ஸிஜன்தொகு

ஆக்ஸிஜன் கூட்டுப்பொருளாக கனிம மற்றும் கனிம பொருட்களில் இணைந்து காணப்படுகிறது. தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது இந்த O2 வாயு உருவாக்கப்படுகிறது.


மேற்கோள்கள் References

http://lawr.ucdavis.edu/people/emeriti/epstein-emanuel Emanuel Epstein. Mineral Nutrition of Plants: Principles and Perspectives. Allen V. Barker; D. J. Pilbeam (2007). Handbook of plant nutrition. CRC Press. ISBN 978-0-8247-5904-9. Retrieved 17 August 2010. Marschner, Petra, ed. (2012). Marschner's mineral nutrition of higher plants (3rd ed.). Amsterdam: Elsevier/Academic Press. ISBN 9780123849052. http://aesl.ces.uga.edu/publications/plant/Nutrient.htm Retrieved Jan. 2010 Norman P. A. Huner; William Hopkins. "3 & 4". Introduction to Plant Physiology 4th Edition. John Wiley & Sons, Inc. ISBN 978-0-470-24766-2. Pages 68 and 69 Taiz and Zeiger Plant Physiology 3rd Edition 2002 ISBN 0-87893-823-0 Swan, H.S.D. 1971a. Relationships between nutrient supply, growth and nutrient concentrations in the foliage of white and red spruce. Pulp Pap. Res. Inst. Can., Woodlands Pap. WR/34. 27 p.