தா. திருநாவுக்கரசு

தாமோதரம்பிள்ளை திருநாவுக்கரசு (Thamodarampillai Thirunavukarasu, 1 செப்டம்பர் 1933 – 1 ஆகத்து 1982) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

தா. திருநாவுக்கரசு
T. Thirunavukarasu
இலங்கை நாடாளுமன்றம்
for வட்டுக்கோட்டை
பதவியில்
1977–1982
முன்னையவர்ஆ. தியாகராஜா
பின்னவர்நீலன் திருச்செல்வம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1933-09-01)1 செப்டம்பர் 1933
இறப்பு1 ஆகத்து 1982(1982-08-01) (அகவை 48)
அரசியல் கட்சிஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழர் விடுதலைக் கூட்டணி
இனம்இலங்கைத் தமிழர்

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

திருநாவுக்கரசு இலங்கையின் வடக்கே வட்டுக்கோட்டையில் 1933 செப்டம்பர் 1 இல் பிறந்தார்.[1][2]

அரசியலில்

தொகு

ரி. திருநாவுக்கரசு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக காங்கேசன்துறை தொகுதியில் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் முதற்தடவையாகப் போட்டியிட்டார். இவர் 3,000 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவதாக வந்து தோற்றார்.[3] தமிழ்க் காங்கிரஸ் கட்சி தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அரசியல் கூட்டணியில் 1972 ஆம் ஆண்டில் இணைந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைப் பொருளாளராக திருநாவுக்கரசு பணியாற்றினார்.[2]

1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு ஆ. தியாகராஜாவை 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் திருநாவுக்கரசு வென்று நாடாளுமன்றம் சென்றார்.[4]

திருநாவுக்கரசு 1982 ஆகத்தி 1 இல் மாரடைப்பால் காலமானார்.[2][5] இவரது இடத்திற்கு நீலன் திருச்செல்வம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Thirunavukarasu, Thamodarampillai". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. 2.0 2.1 2.2 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 231.
  3. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-08-25.
  4. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2013-08-25.
  5. Rajasingham, K. T. "Chapter 28: Prelude to eruption". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2007-10-23. பார்க்கப்பட்ட நாள் 2013-08-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தா._திருநாவுக்கரசு&oldid=3557564" இலிருந்து மீள்விக்கப்பட்டது