திசம்பர் 19
நாள்
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
திசம்பர் 19 (December 19) கிரிகோரியன் ஆண்டின் 353 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 354 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 12 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 324 – லிசீனியசு உரோமைப் பேரரசர் பதவியைத் துறந்தார்.
- 1154 – இங்கிலாந்தின் இரண்டாம் என்றி முடிசூடினார்.
- 1187 – மூன்றாம் கிளெமெண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1606 – ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வர்ஜீனியாவின் யேம்சுடவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர்.
- 1796 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஒராசியோ நெல்சன் தலைமையில் இரண்டு பிரித்தானியப் படைப்பிரிவுகள் இன்றைய எசுப்பானியாவின் மூரிசியா நகரில் எசுப்பானியப் படைகளுடன் போரில் ஈடுபட்டன.
- 1852 – இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போர்: பிரித்தானியர் பர்மாவின் பெகு பிராந்தியத்தைக் கைப்பற்றினர்.[1]
- 1871 – யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுருப் பதவிகள் வழங்கப்பட்டன.[2]
- 1877 – யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வாந்திபேதி, மற்றும் சின்னம்மை நோய் பரவியதில் பலர் இறந்தனர்.[2]
- 1879 – நியூசிலாந்தில் ஆண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.
- 1907 – அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 239 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- 1916 – முதலாம் உலகப் போர்: பிரான்சில் வேர்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் செருமனியப் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்தன.
- 1920 – முதலாம் கான்சுடண்டைன் கிரேக்கத்தின் மன்னராக முடிசூடினார்.
- 1927 – கக்கோரி தொடருந்துக் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட ராம் பிரசாத் பிசுமில், அஷ்பகுல்லா கான், ரொசான் சிங் ஆகிய விடுதலைப் போராளிகள் பிரித்தானிய இந்திய அரசினால் தூக்கிலிடப்பட்டனர்.
- 1929 – இந்திய தேசிய காங்கிரசு இந்தியாவின் விடுதலையை அறிவித்தது.
- 1932 – பிபிசி உலக சேவை ஆரம்பமானது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: இட்லர் தன்னை செருமனியின் இராணுவத் தலைவராகத் தன்னை அறிவித்தார்.
- 1946 – முதலாவது இந்தோசீனப் போர் ஆரம்பமானது.
- 1961 – போர்த்துக்கேயக் குடியேற்ற நாடான தமன் தியூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.
- 1967 – இரு நாட்களின் முன்னர் கடலில் நீந்தும்போது காணாமல் போன ஆத்திரேலியப் பிரதமர் அரல்ட் ஓல்ட் இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
- 1972 – அப்பல்லோ திட்டம்: சந்திரனுக்கு கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 பாதுகாப்பாக பூமி திரும்பியது.
- 1983 – உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியில் வழங்கப்படும் பரிசுக்கிண்ணம் பிரேசிலில் அந்நாட்டு காற்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்டது.
- 1984 – ஆங்காங்கின் ஆட்சியை 1997 சூலை 1 இல் சீனாவிடம் மீண்டும் ஒப்படைக்கும் ஒப்பந்தம் சீனத் தலைவர் டங் சியாவுபிங், பிரித்தானியப் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோருக்கிடையில் கையெழுத்திடப்பட்டது.
- 1986 – சோவியத் எதிர்ப்பாளி ஆந்திரே சாகரவ் அவரது கோர்க்கி வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
- 1997 – சில்க் ஏர் விமானம் இந்தோனேசியாவில் பலெம்பாங் அருகே மூசி ஆற்றில் வீழ்ந்ததில் 104 பேர் உயிரிழந்தனர்.
- 1998 – அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளின்டன் மீது கீழவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- 2001 – அதியுயர் வளிமண்டல அழுத்தம் (1085.6 hPa) மங்கோலியாவில் பதிவு செய்யப்பட்டது.
- 2013 – கையா விண்கலத்தை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஏவியது.
- 2016 – துருக்கிக்கான உருசியத் தூதர் அதிரேய் கார்லொவ் அங்காராவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிறப்புகள்
- 1683 – எசுப்பானியாவின் ஐந்தாம் பிலிப்பு (இ. 1746)
- 1852 – ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன், நோபல் பரிசு பெற்ற புரூசிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1931)
- 1901 – ருடால்ப் ஹெல், செருமானியப் பொறியியலாளர் (இ. 2002)
- 1904 – பி. டி. ரணதிவே, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 1990)
- 1906 – லியோனிட் பிரெஷ்னெவ், சோவியத் ஒன்றியத்தின் 4வது அரசுத்தலைவர் (இ. 1982)
- 1915 – எடித் பியாஃப், பிரான்சியப் பாடகி, நடிகை (இ. 1963)
- 1922 – கே. அன்பழகன், தமிழக அரசியல்வாதி
- 1933 – அ. விநாயகமூர்த்தி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
- 1934 – பிரதிபா பாட்டில், 12வது இந்தியக் குடியரசுத் தலைவர்
- 1936 – சண்முகம் சிவலிங்கம், ஈழத்துக் கவிஞர் (இ. 2012)
- 1943 – அ. இராமசாமி, தமிழக வரலாற்றாசிரியர், நூலாசிரியர்
- 1951 – ஆல்வின் ரோத், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
- 1953 – இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1868)
- 1974 – ரிக்கி பாண்டிங், ஆத்திரேலியத் துடுப்பாளர்
- 1980 – ஜேக் கிலென்ஹால், அமெரிக்க நடிகர்
- 1982 – பாலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1987 – கரீம் பென்சிமா, பிரான்சியக் காற்பந்து வீரர்
- 1988 – அலெக்சிசு சான்சேசு, சிலியக் காற்பந்து வீரர்
இறப்புகள்
- 401 – முதலாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)
- 1111 – அல் கசாலி, ஈரானிய மெய்யியலாளர் (பி. 1058)
- 1370 – ஐந்தாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1310)
- 1741 – விட்டஸ் பெரிங், தென்மார்க்கு-உருசிய கடற்படை அதிகாரி, நாடுகாண் பயணி (பி. 1681)
- 1848 – எமிலி புராண்ட்டி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1818)
- 1860 – டல்ஹவுசி பிரபு, பிரித்தானிய இந்திய நிர்வாகி (பி. 1812)
- 1898 – பிரான்சிஸ் நேப்பியர், சென்னை மாகாண பிரித்தானிய ஆளுநர் (பி. 1819)
- 1915 – அலாய்ஸ் அல்சீமர், செருமானிய உளவியல் நிபுணர் (பி. 1864)
- 1927 – அஷ்பகுல்லா கான், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1900)
- 1927 – ராம் பிரசாத் பிசுமில், இந்தியக் கவிஞர் (பி. 1897)
- 1953 – இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1868)
- 1994 – கி. ஆ. பெ. விசுவநாதம், தமிழ் உணர்வாளர், தமிழறிஞர் (பி. 1899)
- 2013 – டேவிட் ராஜேந்திரன், ஈழத்து வானொலி, மேடை நாடகக் கலைஞர் (பி. 1945)
- 2014 – எஸ். பாலசுப்பிரமணியன், தமிழக பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் (பி. 1936)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ 2.0 2.1 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003)