திண்டிவனம் வட்டம்

திண்டிவனம் வட்டம் , தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக திண்டிவனம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 174 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

இவ்வட்டத்தில் மயிலம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 4,46,682 ஆகும். அதில் 2,23,525 ஆண்களும், 2,23,157 பெண்களும் உள்ளனர். 1,05,834 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 78.8% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 74.83% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 998 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 48,842 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,47,460 மற்றும் 6,165 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.84%, இசுலாமியர்கள் 3.67%, கிறித்தவர்கள் 1.95%%, சமணர்கள் 0.41% மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்டிவனம்_வட்டம்&oldid=3608550" இருந்து மீள்விக்கப்பட்டது