திபெத்திய பீடபூமி

திபெத்திய பீடபூமி (Tibetan Plateau) மேற்கு சீனாவின் கிங்ஹாய் மாகாணம், திபெத் தன்னாட்சிப் பகுதி, மற்றும் இந்தியாவின் லடாக் பகுதிகளை உள்ளடக்கியதாகும்.[1][2][3][4][5][6][7][8][9][10]

திபெத்திய பீடபூமி
青藏高原, Qīngzàng Gāoyuán
தெற்கில் இமயமலையும், வடக்கில் தக்கிலமாக்கான் பாலைவனத்திற்கு இடையே அமைந்த திபெத்திய பீடபூமி.
பரிமாணங்கள்
நீளம்2,500 km (1,600 mi)
அகலம்1,000 km (620 mi)
பரப்பளவு2,500,000 km2 (970,000 sq mi)
புவியியல்
கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் திபெத்திய பீடபூமி
அமைவிடம் சீனா (திபெத் தன்னாட்சிப் பகுதி, கிங்ஹாய் மாகாணம், சீனா)
 இந்தியா (லடாக்)
 நேபாளம் வடக்கு
தொடர் ஆள்கூறு33°N 88°E / 33°N 88°E / 33; 88
திபெத்திய பீடபூமி
திபெத்திய பௌத்த தூபி
தென்கிழக்கி திபெத்திய பீடபூமியின் நாசாவின் செய்மதி படம்
யாம்துரோக் ஏரி
கால்நடைகளின் மேய்ச்சல் நிலம்
தென் திபெத்திய பீடபூமியின் இமயமலையின் வான் காட்சி

25,00,000 இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட திபெத்திய பீடபூமி, கிழக்கிலிருந்து மேற்காக 2,500 கிலோ மீட்டர் நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 1,000 கிலோ மீட்டர் அகலமும், 4,500 மீட்டர் உயரமும் கொண்டது.

இப்பீடபூமி 36,000 பனிபடர்ந்த கொடுமுடிகள் கொண்டது. தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவில் பாயும் ஆறுகளின் ஊற்றுக்கண்னாக திபெத்திய பீடபூமி விளங்குகிறது. சிந்து ஆறு, பிரம்மபுத்திரா ஆறு போன்ற எண்ணற்ற ஆறுகள் இப்பீடபூமியில் உற்பத்தியாகிறது.

உலகின் அதிக அளவில் பனிப்பாறைகள் கொண்ட பகுதிகளிலான தென் துருவம், வட துருவத்திற்கு அடுத்து மூன்றாம் இடத்தில் திபெத்திய பீடபூமி, உள்ளது.[11]}}

திபெத்திய பீடபூமியை உலகின் கூரை என்றும், உலகின் மூன்றாம் துருவம் என்றும் அழைப்பர். திபெத்திய பனி படர்ந்த கொடுமுடிகளிலிருந்து வற்றாத ஆறுகள் தோன்றி சீனா, நேபாளம், பாகிஸ்தான், இந்தியா மற்றும் வங்காள தேசங்களில் பாய்கிறது.

புவி வெப்பம் அதிகரித்ததன் காரணத்தினால், திபெத்திய பீடபூமியில் ஏற்பட்ட புவியியல் மாறுதல்களினால், இப்பீடபூமி அறிவியல் ஆய்வலர்களின் ஆய்வில் உள்ளது.[12][13][14][15]

புவியியல்

தொகு

திபெத்திய பீடபூமி பெரும் மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ளது.[16] திபெத்திய பீடபூமியின் தெற்கில் உள்இமயமலைத் தொடர்களும், வடக்கில் குன்லூன் மலைகள் மற்றும் தக்கிலமாக்கான் பாலைவனமும், வடகிழக்கில் குலியன் மலைகளும், கோபி பாலைவனமும், கிழக்கிலும், தென்கிழக்கிலும் சிசுவான் மாகாணாத்தின் ஹ்ங்குடான் மலைகளும் சூழ்ந்துள்ளது.

திபெத்திய பீடபூமியின் மேற்குப் பகுதிகள் காரகோரம் மலைகளையும், வடக்கு காஷ்மீர் பீடபூமியையும் தொட்டுச் செல்கிறது. மேலும் சிந்து ஆறு, பிரம்மபுத்திரா ஆறுகள் இங்கு உற்பத்தி ஆகிறது. புகழ் பெற்ற இந்துப் புனிதத் தலங்களான கயிலை மலை, மானசரவர் ஏரி மற்றும் யம்துரோக் ஏரி திபெத்திய பீடபூமியில் அமைந்துள்ளது.

தென் துருவம், வட துருவம் போன்று திபெத்திய பீடபூமி அதிக குளிரைக் கொண்டுள்ளது. திபெத்திய பீடபூமியின் மக்களான திபெத்தியர்கள் திபெத்திய பௌத்தத்தை பின்பற்றுகின்றனர்.

இப்பீடபூமி குட்டைப் புல்வெளிகளும், புதர்க்காடுகளும் அதிகம் கொண்டதால், இங்கு வாழும் நாடோடி மக்களின் கவரிமா எனப்படும் மாடுகள் போன்ற கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக உள்ளது.[17]

[18]

பருவ மழையின் பங்கு

தொகு

தெற்காசியா, மற்றும் தென்கிழக்காசியாவின் பருவ மழைக்கு திபெத்திய பீடபூமி பெரும் பங்கு வகிக்கிறது.[19] தென் துருவம், வட துருவம் போன்று திபெத்திய பீடபூமி அதிக குளிரைக் கொண்டுள்ளது.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Wang, Zhaoyin; Li, Zhiwei; Xu, Mengzhen; Yu, Guoan (Mar 30, 2016). River Morphodynamics and Stream Ecology of the Qinghai-Tibet Plateau. CRC Press.
  2. Jones, J.A.; Liu, Changming; Woo, Ming-Ko; Kung, Hsiang-Te (Dec 6, 2012). Regional Hydrological Response to Climate Change. Springer Science & Business Media. p. 360.
  3. Illustrated Atlas of the World (1986) Rand McNally & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-528-83190-9 pp. 164–65
  4. Atlas of World History (1998 ) HarperCollins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7230-1025-0 p. 39
  5. "The Tibetan Empire in Central Asia (Christopher Beckwith)". பார்க்கப்பட்ட நாள் 2009-02-19.
  6. Hopkirk 1983, p. 1
  7. Peregrine, Peter Neal; Melvin Ember, etc. (2001). Encyclopedia of Prehistory: East Asia and Oceania, Volume 3. Springer. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-306-46257-3. {{cite book}}: Unknown parameter |lastauthoramp= ignored (help)
  8. Morris, Neil (2007). North and East Asia. Heinemann-Raintree Library. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4034-9898-4.
  9. Webb, Andrew Alexander Gordon (2007). Contractional and Extensional Tectonics During the India-Asia Collision. ProQuest. p. 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-549-50627-0.
  10. Marston, Sallie A. and Paul L. Knox, Diana M. Liverman (2002). World regions in global context: peoples, places, and environments. Prentice Hall. p. 430. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-022484-2.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  11. "Global warming benefits to Tibet: Chinese official". AFP. 2009-08-18. https://www.google.com/hostednews/afp/article/ALeqM5g1eE4Xw3njaW1MKpJRYOch4hOdLQ. 
  12. Leslie Hook (August 30, 2013). "Tibet: life on the climate front line". The Financial Times. http://www.ft.com/intl/cms/s/2/ee1f3f80-1029-11e3-a258-00144feabdc0.html. பார்த்த நாள்: September 1, 2013. 
  13. Liu, Xiaodong; Chen (2000). "Climatic warming in the Tibetan Plateau during recent decades". International Journal of Climatology 20 (14). 
  14. Ni, Jian (2000). "A Simulation of Biomes on the Tibetan Plateau and Their Responses to Global Climate Change". Mountain Research and Development 20 (1): 80–89. doi:10.1659/0276-4741(2000)020[0080:ASOBOT]2.0.CO;2. http://www.bioone.org/doi/abs/10.1659/0276-4741(2000)020%5B0080:ASOBOT%5D2.0.CO%3B2. பார்த்த நாள்: 26 August 2016. 
  15. Cheng, Guodong; Wu (8 June 2007). "Responses of permafrost to climate change and their environmental significance, Qinghai-Tibet Plateau". Journal of Geophysical Research 112 (F2). doi:10.1029/2006JF000631. Bibcode: 2007JGRF..112.2S03C. http://onlinelibrary.wiley.com/doi/10.1029/2006JF000631/full. பார்த்த நாள்: 26 August 2016. 
  16. Yang, Qinye; Zheng, Du (2004). A Unique Geographical Unit. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9787508506654. பார்க்கப்பட்ட நாள் 2007-08-05.
  17. In pictures: Tibetan nomads BBC News
  18. David Miller. "Nomads of Tibet and Bhutan". asinart.com. பார்க்கப்பட்ட நாள் 2008-02-10.
  19. Oracle Thinkquest Education Foundation. monsoons: causes of monsoons. பரணிடப்பட்டது 2009-04-16 at the வந்தவழி இயந்திரம் Retrieved on 22 May 2008.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tibetan Plateau
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திபெத்திய_பீடபூமி&oldid=4059919" இலிருந்து மீள்விக்கப்பட்டது