திபெத் தன்னாட்சிப் பகுதி

சீனாவின் தன்னாட்சி பகுதி

திபெத் தன்னாட்சி பகுதி (Tibet Autonomous Region) அல்லது சுருக்கமாக திபெத் (சீனம்: 西藏自治区) என்பது சீன மக்கள் குடியரசால் 1958-ல் திபெத்திய ஆன்மிகம் மற்றும் அரசியல் தலைவரான 14வது தலாய் லாமாவை விரட்டிவிட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட திபெத் நாடாகும். 1965-ல் திபெத் ஒரு மாகாண அளவிலான தன்னாட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. இது சிசங் தன்னாட்சி பகுதி என்றும் அழைக்கப்படுகிறது.[1] திபெத் தன்னாட்சிப் பகுதியின் நிர்வாகத் தலைநகரம் லாசா ஆகும். திபெத் தன்னாட்சிப் பகுதி 6 மாவட்டங்களாகவும், 68 கவுண்டிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. [2][3]

சீனாவில் திபெத் தன்னாட்சிப் பகுதி

சீன மக்கள் குடியரசின் கட்டமைப்புள் திபெத், திபெத் தன்னாட்சி பகுதியின் அங்கமாகவே அங்கீகரிக்கப்படுகிறது. திபெத் தன்னாட்சிப் பகுதியுள் திபெத்திய பகுதிகளைத் தவிர யு-சாங் மற்றும் காம் மாகாணப் பகுதிகளும் அடங்கும். இத்தானாட்சிப் பகுதியே சீனாவின் மாகாணங்களுள் இரண்டாவது பெரிய நிலப்பரப்பைக் கொண்டுள்ளது (1,200,000 சதுர கிலோமீட்டர்).

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Tibet (Xi'zang)
  2. Tibet AUTONOMOUS REGION, CHINA
  3. Tibet profile

வெளி இணைப்புகள் தொகு