திபேந்து அதிகாரி

இந்திய அரசியல்வாதி

திபேந்து அதிகாரி (Dibyendu Adhikari) (பிறப்பு: 24 டிசம்பர் 1976) மேற்கு வங்காளத்தின் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியும், கந்தி தட்சின் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக 2009 முதல் 2016 முடியவும், மற்றும் 2016-இல் தம்லக் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் வென்று, இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1].[2]

திபேந்து அதிகாரி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 நவம்பர் 2016
முன்னவர் சுவேந்து அதிகாரி
தொகுதி தம்லக் மக்களவைத் தொகுதி T
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2016
முன்னவர் சுவேந்து அதிகாரி
பின்வந்தவர் சந்திரிமா பட்டாசார்யா
தொகுதி கந்தி தட்சின் சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 24 திசம்பர் 1976 ( 1976-12-24) (அகவை 46)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
இருப்பிடம் கொந்தாய், கிழக்கு மிட்னாபூர் மாவட்டம், மேற்கு வங்காளம்
தொழில் அரசியல்வாதி

இவரது மூத்த சகோதரர் சுவேந்து அதிகாரி 2016-இல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் சார்பாக நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியுடன் கொண்ட கருந்து வேறுபாடு காரணமாக, சுவேந்து அதிகாரி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பிறகு, திபேந்து அதிகாரியும், அவர்களின் தந்தையும், முன்னாள நாடாளுமன்ற மக்கள்வை உறுப்பினருமான சிசிர் அதிகாரியும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். [4]

.[5]

மேற்கோள்கள்தொகு

  1. Dibyendu Adhikari
  2. "Bypoll Election Results 2016 Live Update: BJP wins big in MP, Assam & Arunachal; TMC sweeps Bengal, AIADMK holds Tamil Nadu". The Financial Express. 22 November 2016. http://www.financialexpress.com/india-news/bypoll-elections-result-2016-live-update/451970/. பார்த்த நாள்: 26 April 2017. 
  3. "West Bengal by-election: TMC retains two Lok Sabha, one assembly seats." Livemint. 22 November 2016. 26 April 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. Dibyendu Adhikari to meet BJP top brass in Delhi, decide on leaving TMC
  5. "Bypoll Election Results 2016 Live Update: BJP wins big in MP, Assam & Arunachal; TMC sweeps Bengal, AIADMK holds Tamil Nadu". The Financial Express. 22 November 2016. http://www.financialexpress.com/india-news/bypoll-elections-result-2016-live-update/451970/. பார்த்த நாள்: 26 April 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திபேந்து_அதிகாரி&oldid=3496518" இருந்து மீள்விக்கப்பட்டது