திப்தெந்து பிரமானிக்

வங்காளத் திரைப்பட ஆளுமை

திப்தெந்து பிரமானிக் (Diptendu Pramanick) (சூலை 1910 - திசம்பர் 1989) இவர் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பெங்காலி திரைப்பட ஆளுமையாவார். இவர் கொல்கத்தாவில் கிழக்கு இந்தியா மோஷன் பிக்சர்ஸ் சங்கத்தின் நிறுவனர், செயலாளராக இருந்தார். [1] இவரது பன்முக வாழ்க்கையின் போது, இவர் பிரபலங்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். மேலும் இந்த அமைப்பின் ஆரம்ப நாட்களிலிருந்து ஒரு பிராந்திய அளவிலான நிறுவனமாக பரிணாமம் கண்டார்.

திப்தெந்து பிரமானிக்
பிறப்பு18 சூலை 1910
கொல்கத்தா
இறப்புதிசம்பர் 15, 1989(1989-12-15) (அகவை 79)
கொல்கத்தா
இருப்பிடம்புது அலிப்பூர், கொல்கத்தா
தேசியம்இந்தியன்
செயற்பாட்டுக்
காலம்
1931-1976
சொந்த ஊர்சாந்திப்பூர்
பெற்றோர்சுவர்ணபாலா & சுதமோய் பிரமானிக்
பிள்ளைகள்சுப்ரத பிரமானிக் & இவா குந்து

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

இவர் 1910 சூலை 18 அன்று கொல்கத்தாவில் பிறந்தார். இவர் மேற்கு வங்காளத்தின் சாந்திப்பூரைச் சேர்ந்த சுதாமோய் பிரமானிக்கின் மூத்த மகனாவார். இவர் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை கொல்கத்தாவிலும் பின்னர் ராய்காஞ்ச் பள்ளியிலும் முடித்தார். அங்கு இவரது தந்தை வழக்கறிஞராக இருந்தார்கன் .

1926 ஆம் ஆண்டில் இவர் கொல்கத்தாவுக்குத் திரும்பி தனது மெட்ரிகுலேஷனை முடித்தார். பின்னர் 1928 இல் அறிவியலில் இடைநிலை தேர்வுகளையும் முடித்தார். பின்னர் கொல்கத்தாவின் இசுகாட்டிச் தேவாலயக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் அசுதோஷ் கல்லூரியில் பட்டம் பெற்றார். மேலும் 1931இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தொழில்

தொகு
 
1934 திசம்பரில் கொல்கத்தாவின் 12 வது பிரபாசி பங்கா சாகித்ய சம்மேளனத்தின் வரவேற்புக் குழுவில் திப்தெந்து பிரமானிக் (இடமிருந்து ஐந்தாவது இடத்தில் நிற்கிறார்)

கல்லூரியை விட்டு வெளியேறிய பின்னர், அப்போதைய கொல்கத்தா நகரத் தந்தை சிறீ சந்தோசுகுமார் பாசுவின் செயலாளராக பணியாற்றினார். [2] இவரது இலக்கிய விருப்பங்களிலிருந்து, இவர் இலக்கிய மாநாடுகள் மற்றும் பெங்காலி இலக்கிய அரங்குகளுடன் தொடர்புடையவர். [3] 12வது பிரபாசி பங்கா-சாகித்ய சம்மேளனத்தை திசம்பர் 1934 இல் கொல்கத்தாவில் இரவீந்திரநாத் தாகூர் திறந்து வைத்தார்.

பாசுவின் செயலாளராக பணியிலிருந்த காலம் முடிந்ததும், இவர் குடிமைப் பாதுகாப்பு மற்றும் வணிக அருங்காட்சியகத்தின் விளம்பரப் பிரிவில் தொடர்பு அலுவலரானார். 1942ஆம் ஆண்டில், அப்போதைய வங்க அரசாங்கத்தின் உள்துறை துறைக்கு குடிமைப் பாதுகாப்பு தொடர்பு அலுவலராக சென்றார்.

இரண்டாம் உலகப் போரின் நேரத்தில், ஜப்பான் பர்மாவைக் கைப்பற்றியது. மேலும் கொகல்கத்தாவில் குண்டுவெடிப்பு அச்சுறுத்தல் பெருமளவில் இருந்தது. இறுதியில் ஜப்பானிய விமானம் பட்ஜ் பட்ஜில் (கல்கத்தாவுக்கு தெற்கே) குண்டு வீசியது. [4]

குண்டுவெடிப்பு பரவலான பீதிக்கு வழிவகுத்தது - ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நகரத்திலிருந்து அஞ்சி ஓடினர். நிலைமையைக் கட்டுப்படுத்த குடிமை அதிகாரிகள் மீது பெரும் அழுத்தம் இருந்தது. இந்த அச்சுறுத்தல்கள் மற்றும் திட்டமிடப்பட்ட மிதமான கட்டுப்பாடுகள், மருத்துவ படைப்பிரிவுகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவுகளை எதிர்கொள்ள இந்திய குடிமைப் பாதுகாப்புத் துறை விரைவாக விரிவடைந்தது. [5] போரின் முடிவில், 1947 தொடங்கி திணைக்களம் படிப்படியாக மூடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இவர் ஒரு துணிகர நடவடிக்கை (சினி ஃபர்னிஷர்ஸ் லிமிடெட்) மூலம் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து தனது திறனை சோதித்தார். இங்குதான் இவர் கொல்கத்தாவின் பெங்காலித் திரையுலகத் துறையினருடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.

இந்த தொடர்புகளில் ஆர்வம் கொண்ட இவர், 1948 ஆம் ஆண்டில் வங்காளத்தின் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் கண்காட்சியாளர்களின் (வங்காள இயங்கு படச் சங்கம்) செயலாளராக [6][7] சேர்ந்தார். அதே நேரத்தில் பி.என். சிர்கார் அதன் தலைவராக இருந்தார். அடுத்த ஆண்டு இவர் வங்காள இயங்கு படச் சங்கத்திற்கான பத்திரிக்கையைத் [8][9] தொடங்கினார். மேலும் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அதன் ஆசிரியராக இருந்தார். [10][11] [12][13][14]

ஆளுமை

தொகு

வர்தமான் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான தாஹுகாவின் பல வறிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், ஒவ்வொரு ஆண்டும் சரசுவதி பூஜையின் போது நடைபெறும் ஒரு விழாவின் போது, திப்தெந்து பிரமானிக் புத்தக நிதியிலிருந்து பள்ளி புத்தகங்களைப் பெறுகிறார்கள். [15]

குறிப்புகள்

தொகு
  1. "EIMPA official website". Archived from the original on 8 January 2015. பார்க்கப்பட்ட நாள் 8 January 2015.
  2. "Kolkata Mayors : KMC". Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 21 March 2015.
  3. Ramananda Chatterjee:The Modern Review (Calcutta), vol 57 ; The Modern Review Office, Calcutta (1935), page 141.
  4. "Bengali folk rhyme". Archived from the original on 20 April 2014. பார்க்கப்பட்ட நாள் 13 August 2014.
  5. Drucquer, Seth (June 1942). Civil Defence in India. Calcutta: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781406758962.
  6. Screen Year Book & Who's who 1956, Express Newspapers Ltd., Mumbai, page 374
  7. V. Doraiswamy, V.N. Sharma (ed.). Asian Film Directory & Who's who. p. 255. Archived from the original on 2 May 2019. பார்க்கப்பட்ட நாள் 21 September 2016.
  8. "British Film Institute guide" (PDF). Archived from the original (PDF) on 2 June 2010. பார்க்கப்பட்ட நாள் 17 June 2010.
  9. Erik Barnouw : Indian Film, Columbia University Press, New York (1963), pages 143, 206, 284.
  10. Centennial Issue : Newspaper Press Directory, volume 100, Benn Brothers Ltd, London (1951), page 502
  11. Ayyar, K.P.V. (1956). The Indian Press Year Book. Indian Press Publications. p. 343. Archived from the original on 2 May 2019. பார்க்கப்பட்ட நாள் 17 January 2017.
  12. The Indian Press Year Book. Indian Press Publication. 1954. p. 304. Archived from the original on 2 May 2019. பார்க்கப்பட்ட நாள் 1 September 2015.
  13. Newspaper Press Directory, vol 102. Benn Brothers Ltd, London. 1951. p. 625. Archived from the original on 2 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 January 2017.
  14. Sur, Ansu (1999). Bengali film directory. Kolkata: Nandan, West Bengal Film Centre. p. vi,280. Archived from the original on 14 February 2017. பார்க்கப்பட்ட நாள் 7 August 2014.
  15. 2010 Annual report of the Dr S. S. De Education Foundation (Regn# S-196221 1999-2000 : W.B.Societies Act 1961), page 5.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திப்தெந்து_பிரமானிக்&oldid=3710899" இலிருந்து மீள்விக்கப்பட்டது