திப்பானி நடனம்

திப்பானி நடனம் (Tippani) என்பது .இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மேற்குப்பகுதியான செளராஷ்டிராவின் சோர்வாத் பகுதியில் ஆடப்படும் பாரம்பரிய நாட்டுப்புற நடனம் ஆகும். இது ‘மாட்லா நடனம்’ அல்லது ‘திப்பனி நிருத்யா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நடன வடிவம் ஹோலி, தீபாவளி போன்ற இந்து பண்டிகைகளின் போது அல்லது குஜராத்தி சமூகத்தில் திருமண விழாக்களிலும் நடைமுறையில் உள்ளது.

சொற்பிறப்பியல் தொகு

அரபிக்கடலை ஒட்டியுள்ள சோர்வாத் மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட இந்த திப்பானி நடனத்தில் 175 செ.மீ அளவுடைய இரண்டு நீளமான மரக்குச்சிகள் பயன்படுத்தப்படும், இது சதுர வடிவ அல்லது இரும்புத் தொகுதியால் கார்போ எனப்படும் கீழ் முனையில் இணைந்துள்ளது. பழைங்காலத்தில் வீடு அல்லது தளத்தின் தரைப்பகுதியில் சுண்ணாம்பு அடிப்பதற்கு இது பயன்படுத்தப்பட்டது. கற்களை உடைத்தும், தரையை சமன் செய்யும் வேலையின் போதும் ஏற்படும் சலிப்பை தவிர்ப்பதற்காக கோலி சமூகத் தொழிலாளர்கள் மத்தியில் இந்த நடனம் உருவானது . [1] [2] [3]

நடனம் தொகு

இந்த நடனத்தை பெண்கள் தனித்துவமாக ஆடுகின்றனர்.நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிக்கொண்டு இரண்டு எதிர் வரிசைகளில் நின்று தரையைத் குச்சியில் அடித்து திப்பானி நடனமாடும் பெண்கள். தூரி மற்றும் தாலி (பித்தளை தட்டு) இசையை உருவாக்கப் பயன்படுத்துகின்றனர். மேலும் ஜான்ஸ், மஞ்சிரா, தபேலா, தோல் மற்றும் ஷெஹ்னாய் ஆகியவை இந்த நடன இசைக்கு பயன்படுத்தப்படும் முக்கிய இசைக்கருவிகள் ஆகும். இது பெரும்பாலும் இந்து திருவிழாக்கள் மற்றும் திருமணங்களில் ஆடப்படுகிறது. இந்தியாவின் சமகாலத்தில் திப்பானி நடனம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள குஜராத்தி மக்கள் தங்கள் குடும்ப திருமண சடங்கின் ஒரு பகுதியாக இந்த நடன வடிவத்தை ஆடுகின்றனர்.பொதுவாக ஹோலி அல்லது தீபாவளி போன்ற பண்டிகைகளில் ஆடப்படும் இந்த நடனத்தை தற்போது அமெரிக்காவின் விர்ஜீனிய மாகான ஆசிய அமெரிக்கன் சமூகம் நடத்தியுள்ளது.

நடன முறை தொகு

ஒரே மாதிரியான தாளத்தில் தரையை குச்சியால் சீரான வேகத்தில் அடிப்பது மற்றும் பாடுவதன் மூலம் திப்பானி நடனம் தொடங்குகிறது. பின்னர் படிப்படியாக வேகத்தை அதிகரித்து, ​​நடனக் கலைஞர்கள் மாறி மாறி தரையை குச்சியால் தட்டுவா். பொதுவாக வட்டமாகச் சுற்றியும் குச்சிகளை ஒருவொருக்கொருவா் மாற்றிக் கொண்டு தலையை ஆட்டியும் உடலசைவு மூலமும் நடனத்தை ஆடுகின்றனர்.நடனத்தின் முடிவில், அனைத்து ப் பெண்களும் வரிசையாக அமர்ந்து தரையை மிக விரைவாக தட்டுகின்றனர். நடனத்தின் பிரத்யேக அம்சம், மரக் கம்புகளை அதி விரைவுத்தன்மையுடன் தட்டுவதால் உண்டாகும் இசை வெளிப்பாடு ஆகும். .[4]

நடன அலங்காரங்கள் மற்றும் உடைகள் தொகு

இந்த நாட்டுப்புற நடனத்திற்கான உடைகள் மற்றும் அலங்காரங்கள் மிகவும் வண்ணமயமாக காட்சியளித்து மக்களின் பாரம்பரியத்தையும் ,வாழ்வியலை பிரதிநிதித்துவப் படுத்துவதாக அமைந்துள்ளன. நடனத்திற்காக ஆண்கள் அணியும் உடைகள் பெரும்பாலும் இறுக்கமான கைகளைக் கொண்ட "கெடியா" என்று அழைக்கப்படும் ஒரு குறுகிய மேல் அங்கி , தொப்பிகள் அல்லது அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகைகள் ஆகும். பெண்கள், காக்ரா ஜோலி என்ற குஜலாத்தின் பாரம்பரிய ஆடையுடன் தலையை முடுவதற்கான அலங்கரிக்கப்பட்ட துணி, அலங்கார நகைகள் அணிந்து ஆடுகின்றனர். தோல், மரினாரா மற்றும் ஷெனாய் இசைக்கருவிகள் ஆட்டத்தின் வேகத்தையும் நிர்வகிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய இசை கருவிகளாகும்.. இந்த தாள மெல்லிசை செயல்முறை முழுவதும் அவர்கள் தங்கள் உழைப்பை வெளிப்படுத்துகிறார்கள். இந்த நடனம் இந்தியாவின் பழம்பெரும் கலாச்சாரத்தை பறைசாற்றுவதாக உள்ளன. [5]

மேற்கோள்கள தொகு

  1. Folk India: A Comprehensive Study of Indian Folk Music and Culture. https://books.google.com/books?id=qzLaAAAAMAAJ. 
  2. "Tippani Dance in India". India9. 1 January 2010. பார்க்கப்பட்ட நாள் 12 June 2016.
  3. "Tippani Folk Dance in Gujarat". Discovered India. பார்க்கப்பட்ட நாள் 12 June 2016.
  4. http://www.schoolchalao.com/basic-education/show-results/indian-folk-dance/tippani-dance-gujarat
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-16. பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திப்பானி_நடனம்&oldid=3557937" இலிருந்து மீள்விக்கப்பட்டது