திப்பிலி

திப்பிலி
Piper longum plant.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: Magnoliids
வரிசை: Piperales
குடும்பம்: Piperaceae
பேரினம்: Piper
இனம்: P. longum
இருசொற் பெயரீடு
Piper longum
L.
கண்டந்திப்பிலி - திப்பிலியின் வேர்
உலர்ந்த திப்பிலி

திப்பிலி (Piper Longum), எனும் பல பருவத்தாவரம், Long Pepper (அ) Indian Long Pepper என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும். Piperaceae குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் ஒரு பூக்கும் கொடி ஆகும். ஒரு மூலிகைத் தாவரமான இது அதன் பழத்திற்காகவே பயிரிடப்படுகிறது, பொதுவாக அப்பழத்தை உலர்த்தி, மசாலா மற்றும் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படும். கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை மிளகு பெறப்படும், தனது நெருங்கிய இனமான கரும்மிளகை (piper nigrum) ஒத்த சுவையோடும், அதைக் காட்டிலும் மேலும் காரமாவும் இருக்கும்.

திப்பிலி பல மிகச்சிறிய பழங்களைக் கொண்டது. அவை கூர்முனைக் கொம்பு போன்ற ஒரு பூவின் மேற்பரப்பில் நெருக்கமாக பதிக்கப்பட்டிருக்கும். கரும்மிளகை (piper nigrum) போல், பலமான காரம் கொண்ட பழங்களில், காரமூட்டும் நைட்ரோஜென் அணுக்கள் கொண்ட முலக்கூறான piperine காரப்போலியை (Alkaloid) கொண்டிருக்கும். திப்பிலியை ஒத்த இனமான piper retrofractum, ஜாவா, இந்தோனேஷியாவை தாயகமாகக் கொண்டது. அமெரிக்காவில் இருந்து தோன்றிய பேரினமான (Genus) capsicum–ம்மையும், இந்த திப்பிலிப் பழங்களையும் ஒப்பிட்டு பெரும்பாலும் குழம்பிவிடுவர்.

வரலாறுதொகு

திப்பிலியின் மருத்துவ மற்றும் உணவு பயன்கள், முதல் குறிப்பாக பண்டைய இந்திய ஆயுர்வேத புத்தகங்களில் விரிவாக விவரித்துள்ளார்கள்.

கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரட்டீஸ் இதை ஒரு மசாலாவாக அல்லாமல் மருந்தாக விவாதித்தபோதிலும், இது கி.மு. ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் கிரேக்கம் வரை சென்றடைந்தது. ஐரோப்பியர்கள் அமெரிக்க கண்டங்களை கண்டுபிடிக்கும் முன்னதாக, கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களிடையே திப்பிலி ஒரு முக்கியமான மற்றும் நன்கு அறியப்பட்ட மசாலாவாக திகழ்ந்தது. கிரேக்க பயிரியலாளர் தியோபிரசுடஸ் தனது முதல் தாவரவியல் நூலில், கருப்பு மிளகையும் திப்பிலியையும் வேறுபடுத்தி எழுதியபோதிலும்; இவ்விரு தாவரங்களின் பண்டைய வரலாறு பின்னிப்பிணைந்திருப்பதால் அடிக்கடி அவர்கள் (கிரேக்கர்கள்) குழம்பிவிடுவர்.

ரோமானியர்களுக்கு இவ்விரண்டுமே தெரிந்தன, ஆனாலும் அடிக்கடி அவ்விரண்டையுமே பிப்பே என்றே குறிப்பிட்டனர். ரோமானிய அறிஞர் மூத்த பிளினி, கருப்பு மிளகும் திப்பிலியும் ஒரே தாவாரத்திலிருந்து வந்தது என்று தவறாக நம்பினார்.

ஐரோப்பாவில், கரும்மிளகு திப்பிலியுடன் பன்னிரண்டாம் நூற்றாண்டில் போட்டியிட ஆரம்பித்து; பதிநான்காம் நூற்றாண்டில் திப்பிலியின் பயன்பாட்டை முழவதுமாக மாற்றியமைத்தது. கருப்பு மிளகின் மலிவான மற்றும் நம்பகமான ஆதாரங்களின் தேடல், கண்டுபிடிப்புக் காலத்திற்கு ஆரம்பப் புள்ளியாகியது. அமெரிக்க கண்டங்கள் மற்றும் எசுப்பானிய ‘பீமென்ட்டோ’ (Pimiento) மிளகாயின் கண்டுபிடிப்பிற்கு பின்னர், திப்பிலியின் புகழ் மங்கியது. சிலவகை மிளகாய்களை உலர்த்திய போது, அவை திப்பிலியின், வடிவம் மற்றும் சுவையை ஒத்து இருந்தன. ஐரோப்பியர்களுக்கு மிளகாயை பல்வேறு இடங்களில் வளரக்க எளிதாகவும் மேலும் வசதியாகவும் இருந்தது. இன்று, திப்பிலி ஐரோப்பிய பொதுவர்த்தகத்தில் அரிதாகிவிட்டது.

பயன்கள்தொகு

இந்தச் செடியிலிருந்து கிடைக்கும் மிளகு கொல்கத்தாவிலிருந்து ஏற்றுமதியாகிறது. திப்பிலிச் செடியில் இருந்து எடுக்கப்பட்ட வேர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 'கண்ட திப்பிலி' என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. கனிகள், முதிராத பூக்கதிர்த் தண்டை உலர்த்தி 'அரிசித் திப்பிலி' என்ற பெயருடன் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். திப்பிலி பண்டைக் காலம் தொட்டே இருமல், காசநோய், தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி முதலிய நோய்களைக் குணமாக்கப் பயன்படும் மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சேர்ந்ததே திரிகடுகம் என்னும் மருந்தாகும்.

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
திப்பிலி
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திப்பிலி&oldid=3396309" இருந்து மீள்விக்கப்பட்டது