தியத்தீராவின் லீதியா

தியத்தீராவின் லீதியாள் (Lydia of Thyatira, கிரேக்க மொழி: Λυδία) என்பவர் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பெண். ஐரோப்பாவில் கிறித்தவத்திற்கு மாற்றப்பட்ட முதல் பெண் என்று ஆவணப்படுத்தப்பட்டவர். பல கிறித்தவப் பிரிவுகள் இவருக்கு புனிதர் பட்டம் கொடுத்துள்ளன.

லீதியாள் ஞானஸ்நானம் பெற்ற இடமாகக் கூறப்படுகிற இக்கால கிரேக்க வைதீகமான திறந்த வெளியில் நடக்கிற தேவாலயம்.

புதிய  ஏற்பாட்டின் கூறுரைதொகு

14 அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள். பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.

 15 அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி; நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டில் வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள். 
—அப்போஸ்தலர் 16 :14-15

வெய்ன் க்ரூடம், லீதியாவின் கதையை ஒரு பயனுள்ள அழைப்பிற்கு உதாரணமாக காண்கிறார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. Grudem, Wayne (1994). Systematic Theology. InterVarsity Press. பக். 693.