தியூசல்டோர்ஃபு


தியூசல்டோர்ஃபு (Düsseldorf ˈdʏsəldɔɐf) செருமனியின் வடக்கு ரைன்-வெஸ்பாலியா மாநிலத்தின் தலைநகரமும் ரைன்-ரூர் பெருநகரப்பகுதியின் மையமும் ஆகும்.

தியூசல்டோர்ஃபு
மேலே: தியூசல்டோர்ஃபு-ஹாஃபன், கீழ்வரிசை இடமிருந்து: குன்ஸ்டாம்லங் நோர்ட்ஹைய்ன்-வெஸ்ட்பாலென் ஸ்டாண்டௌஸ், கோனிக்சால்லி மற்றும் ஸ்டாடிட்டார்
மேலே: தியூசல்டோர்ஃபு-ஹாஃபன்,
கீழ்வரிசை இடமிருந்து: குன்ஸ்டாம்லங் நோர்ட்ஹைய்ன்-வெஸ்ட்பாலென் ஸ்டாண்டௌஸ், கோனிக்சால்லி மற்றும் ஸ்டாடிட்டார்
மேலே: தியூசல்டோர்ஃபு-ஹாஃபன்,
கீழ்வரிசை இடமிருந்து: குன்ஸ்டாம்லங் நோர்ட்ஹைய்ன்-வெஸ்ட்பாலென் ஸ்டாண்டௌஸ், கோனிக்சால்லி மற்றும் ஸ்டாடிட்டார்
சின்னம் அமைவிடம்
தியூசல்டோர்ஃபு இன் சின்னம்
தியூசல்டோர்ஃபு இன் சின்னம்
Coordinates missing!
செயலாட்சி (நிருவாகம்)
நாடு இடாய்ச்சுலாந்து
மாநிலம் Invalid state: "வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா"
நிரு. பிரிவு டுசல்டோர்ஃப்
மாவட்டம் Urban district
நகரம் subdivisions 10 மாவட்டங்கள், 49 பரோக்கள்
நகர முதல்வர் டிர்க் எல்பர்ஸ் (CDU)
Governing parties CDUFDP
அடிப்படைத் தரவுகள்
பரப்பளவு 217 ச.கி.மீ (83.8 ச.மை)
ஏற்றம் 38 m  (125 ft)
மக்கட்தொகை  5,84,361  (30 சூன் 2009)[1]
 - அடர்த்தி 2,693 /km² (6,975 /sq mi)
 - Urban 12,20,000
 - Metro 72,95,000 (ரைன்-ரூர்
வேறு தகவல்கள்
நேர வலயம் ஒஅநே+1/ஒஅநே+2
வாகன அனுமதி இலக்கம் D
அஞ்சல் குறியீடுs 40001-40629
Area code 0211
இணையத்தளம் www.Duesseldorf.de
Location of the நகரம் of தியூசல்டோர்ஃபு within வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா
Map
Map

பன்னாட்டு வணிகம் மற்றும் நிதி மையமாக விளங்கும் தியூசல்டோர்ஃபு ஆடை வடிவமைப்பு/புதுப் பாங்கு மற்றும் வணிகச் சந்தைகளுக்குப் பெயர் பெற்றது.[2][3][4] ஐரோப்பிய பெருநகரத் தொகுப்பின் மையத்தில் அமைந்துள்ள இந்த நகரம் ஐந்து ஃபார்ட்ச்சூன் குளோபல் 500 நிறுவனங்களுக்கும் பல செருமானிய பங்குச்சந்தைக் குறியீட்டெண்ணில் (டாக்ஸ்) உள்ள நிறுவனங்களுக்கும் தலைமையகமாக விளங்குகிறது. இங்குள்ள மெஸ் தியூசல்டோர்ஃபு என்ற சந்தைப்படுத்தல் நிறுவனம் உலகின் வணிகச் சந்தைகளில் ஐந்தில் ஒன்றுக்கு அண்மித்த அளவில் ஒழுங்குபடுத்துகிறது.[5]

பண்பாட்டில், தியூசல்டோர்ஃபின் நுண்கலை சங்கமான குன்ஸ்டாக் அகாதெமி டுசல்டோர்ஃப் பெயர்பெற்றது. துவக்ககால இலத்திரனியல் இசை மீதான தாக்கத்திற்கும் (கிராஃப்ட்வொர்க்) மிகப்பெரும் சப்பானிய குடியேற்றத்திற்கும் அறியப்பட்டது. ரைன் ஆற்றங்கரையில் ஒவ்வொரு ஆண்டும் சூலையில் நடத்தப்படும் ரைன் மீதான பெரும் சந்தை விழாவிற்கு 4.5 மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர்.[6]

நகர எல்லைக்குள் உள்ள மக்கள்தொகை கொண்டு செருமனியின் ஏழாவது மிகப்பெரும் நகரமாக விளங்குகிறது. பெருநகரப் பகுதியில் 1.5 மில்லியன் மக்கள்தொகை கொண்டு [7] நாட்டின் ஐந்து உலக நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2009ஆம் ஆண்டுக்கான மெர்சரின் உலக வாழ்க்கைத்தர கணக்கெடுப்பில் தியூசல்டோர்ஃபு உலகளவில் ஆறாவதாகவும் செருமனியில் முதலாவதாகவும் வந்துள்ளது.[8][9]

மேற்கோள்கள்

தொகு
  1. IT.NRW. "Bevölkerung im Regierungsbezirk Düsseldorf" (in German). Archived from the original on 2010-01-21. பார்க்கப்பட்ட நாள் 2009-06-30.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Communla Administration of Düsseldorf, 28 of July 2008" (PDF). Archived from the original (PDF) on 2011-08-25. பார்க்கப்பட்ட நாள் 2010-04-16.
  3. "Immobilien Zeitung: ''Mehr Räume für die große Modenschau'' vom 28. August 2008, 1st of March 2009" (PDF). Archived from the original (PDF) on 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் 2010-04-16.
  4. "'Cushman & Wakefield - European Cities Monitor'" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2011-06-04.
  5. "'Messe Düsseldorf Annual Report'" (PDF). Archived from the original (PDF) on 2011-07-13. பார்க்கப்பட்ட நாள் 2011-06-04.
  6. 2010 survey by Jones Lang LaSalle (செருமன் மொழி)
  7. 1,525,029 inhabitants for the Düsseldorf Larger Urban Zone
  8. "Mercer's 2009 Quality of Living survey highlights - Global". Mercer. 2009-04-28. பார்க்கப்பட்ட நாள் 2009-07-07.
  9. Woolsey, Matt (2009-04-28). "World's 20 Best Places To Live". Forbes.com. http://www.forbes.com/2009/04/27/cities-best-live-lifestyle-real-estate-best-places-to-live.html. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியூசல்டோர்ஃபு&oldid=3712439" இலிருந்து மீள்விக்கப்பட்டது