தியோமான் தீவு வானூர்தி நிலையம்
தியோமான் வானூர்தி நிலையம் அல்லது தியோமான் தீவு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: TOD, ஐசிஏஓ: WMBT); (ஆங்கிலம்: Tioman Airport அல்லது Pulau Tioman; மலாய்: Lapangan Terbang Tioman;) என்பது மலேசியா, பகாங், ரொம்பின் மாவட்டம், தியோமான் தீவில் அமைந்து இருக்கும் வானூர்தி நிலையம் ஆகும். இது தெக்கேக் கிராமத்திற்கு (Kampung Tekek) அருகில் அமைந்துள்ளது.
வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தெற்கு முனையின் அருகில் மலைகள் இருப்பதால், ஓடுபாதையை வடக்கில் இருந்து மட்டுமே அணுக முடியும் | |||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர் | மலேசிய அரசாங்கம் (Government of Malaysia) | ||||||||||
இயக்குனர் | மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் (Malaysia Airports Berhad) | ||||||||||
சேவை புரிவது | தியோமான் தீவு | ||||||||||
அமைவிடம் | ரொம்பின் மாவட்டம், பகாங், மலேசியா | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00) | ||||||||||
உயரம் AMSL | 13 ft / 4 m | ||||||||||
ஆள்கூறுகள் | 02°49′09″N 104°09′36″E / 2.81917°N 104.16000°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2013) | |||||||||||
| |||||||||||
Sources: Aeronautical Information Publication Malaysia[2] |
சிறிய வானூர்திகள் மட்டுமே தியோமான் வானூர்தி நிலையத்தில் தரையிறங்க முடியும். அதனால் ஓர் இருக்கைக்கான செலவு, ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. இந்தத் தீவில் இயங்கும் வானூர்தி நிறுவனங்கள் லாபகரமாக இயங்குவதற்குச் சிரமப் படுகின்றன என அறியப்படுகிறது.[3]
பொது
தொகுவானூர்தி நிலையத்தின் ஓடுபாதை "ஒரு வழி" பாதை ஆகும், ஏனெனில் அருகிலுள்ள மலைப்பாங்கான நிலப்பரப்பு காரணமாக வானூர்திகள் வடக்குத் திசையில் இருந்து மட்டுமே தரையிறங்க முடியும். சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை தளமாகக் கொண்ட தனியார் விமானிகளுக்கு தியோமான் ஒரு பிரபலமான இடமாக விளங்குகிறது.
சிங்கப்பூர் செலேத்தார் வானூர்தி நிலையத்தில் (Seletar Airport) இருந்து ஒரு மணி நேரத்தில் தியோமான் தீவை அடைந்து விடலாம். வாகனப் போக்குவரத்தின் மூலமாக இந்தத் தீவை அடைவதற்கு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகப் பிடிக்கும்.
தியோமான் தீவு
தொகுபகாங் மாநிலத்தில், ரொம்பின் மாவட்டத்தில் தென்சீனக் கடலில் அமைந்து உள்ள ஒரு தீவு.
பகாங் மாநிலத்தின் கிழக்கு கடற்கரையில் இருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இந்தத் தீவு 39 கி.மீ. நீளமும் 12 கி.மீ. அகலமும் கொண்டது. 1970-களில், உலகின் மிக அழகான தீவுகளில் ஒன்றாகத் தியோமான் தீவை டைம் (பத்திரிகை) (Time Magazine) தேர்ந்தெடுத்தது.
கேளிக்கை நடவடிக்கைகள்
தொகுஇந்தத் தீவில் ஏழு கிராமங்கள் உள்ளன. கம்போங் தெக்கேக் (Kampung Tekek) மிகப்பெரிய தீவு. அதிக மக்கள்தொகை கொண்டது. அடர்ந்த காடுகள் நிறைந்த இந்தத் தீவில் மக்கள் தொகை குறைவாகவே உள்ளது. மேலும் இந்தத் தீவு ஏராளமான பவளப் பாறைகளால் சூழப்பட்டுள்ளது.
பிரபலமான நீரடி நீந்தல் (Scuba Diving; Snorkelling) போன்ற கேளிக்கை நடவடிக்கைகளுக்கு சிறந்த இடமாக உள்ளது. தீவைச் சுற்றி சுற்றுலா பயணிகளுக்காகப் பல ஓய்வு விடுதிகள் உள்ளன. இருப்பினும் தியோமான் தீவில் மூன்று மாடிகளுக்கு மேல் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை.
வானூர்திச் சேவைகள்
தொகுவிமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
---|---|
பெர்சாயா ஏர் | முன்பதிவு: சுபாங் வானூர்தி நிலையம் |
எசுகேசு வானூர்தி நிறுவனம் | சுபாங் வானூர்தி நிலையம்[4] |
விமானப் பயணங்கள்
தொகுதரவரிசை | இலக்குகள் | நிகழ்வுகள் (வாரம்) |
---|---|---|
1 | சிலாங்கூர், சுபாங் (SZB) | 5 |
புள்ளிவிவரங்கள்
தொகுவருகை |
% மாற்றம் |
(டன்கள்) |
% மாற்றம் |
நகர்வுகள் |
% மாற்றம் | |
---|---|---|---|---|---|---|
2003 | 56,900 | 2,633 | 0 | |||
2004 | 57,957 | 1.8 | 2,447 | ▼ 7.1 | 0 | |
2005 | 54,054 | ▼ 6.7 | 2,146 | ▼ 12.3 | 0 | |
2006 | 57,559 | 6.5 | 2,256 | 5.1 | 0 | |
2007 | 46,260 | ▼ 19.6 | 1,989 | ▼ 11.8 | 0 | |
2008 | 48,767 | 5.4 | 2,141 | 7.6 | 0 | |
2009 | 49,057 | 0.6 | 2,180 | 1.8 | 0 | |
2010 | 54,056 | 10.2 | 0 | ▼ | 0 | |
2011 | 62,010 | 14.7 | 0 | 2,222 | ||
2012 | 60,141 | ▼ 3.0 | 73 | 2,205 | ▼0.8 | |
2013 | 56,054 | ▼ 6.8 | 30 | ▼ 59.8 | 2,089 | ▼5.3 |
2014 | 9,217 | ▼ 83.6 | 15 | ▼ 50.0 | 1,019 | ▼51.2 |
2015 | 0 | ▼ | 0 | ▼ | 993 | ▼2.6 |
2016 | 0 | 0 | 733 | ▼26.2 | ||
2017 | 0 | 0 | 636 | ▼13.2 | ||
2018 | 0 | 0 | 470 | ▼26.1 | ||
2019 | 0 | 0 | 339 | ▼27.9 | ||
2020 | 0 | 0 | 132 | ▼61.1 | ||
Source: Malaysia Airports Holdings Berhad[5] |
சான்றுகள்
தொகு- ↑ "CAAM AIP Tioman" (PDF). caam.gov.my. CAAM.
- ↑ AIP Malaysia: WMBT - Pulau Tioman at Department of Civil Aviation Malaysia
- ↑ "Call to upgrade airport, build roads".
- ↑ "New Malaysian carrier SKS Airways takes to the skies". www.apnews.com.
- ↑ "Malaysia Airports: Airports Statistics 2020" (PDF). Malaysia Airports. Archived from the original (PDF) on 28 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 5 October 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)