திருகோணமலை விசுவநாத சுவாமி கோயில்

(திருகோணமலை விஸ்வநாத சுவாமி கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருகோணமலை விஸ்வநாத சுவாமி கோவில் சுமார் 350 வருடம் பழமை வாய்ந்தது. இவ்வாலயம் திருகோனமலைப் பட்டினத்தில் சிவபுரி என்னுமிடத்தில் திருஞானசம்பந்தர் வீதிக்கருகாமையில் அமைந்துள்ளது. இந்த ஆலய்த்தில் காசியில் இருந்து திருகோணமலை வந்த சந்நியாசி ஒருவர் காசியில் இருந்து கொண்டுவந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த்தால் காசி விஸ்வநாதர் (சிவன்) என்ற பெயரைப் பெற்றது. இவ்வாலயத்தின் திருக்குடமுழுக்கு வைபவங்கள் 1890, 1898, 1957 ஆண்டுகளில் நடைபெற்றது. 1939 இல் நடைபெற்ற இரண்டாம் உலகமகாயுத்ததில் ஜப்பானியரின் குண்டுவீச்சினை அடுத்து இந்த ஆலயம் கவனிப்பாரற்றுப் பூட்டிக்கிடந்தது. பின்னர் மீண்டும் இந்த 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திருப்பணிக்கு சிவன் கோயில் ஸ்ரீ நடராஜர் சபையினர் வீடு வீடாகச் சென்று நிதி சேகரித்துச் செவ்வனே நிறைவேற்றினார்கள். இப்புராதன கோயிலானது 1983 இல் நடைபெற்ற இனக்கலவரத்தின் போது தாக்கி அழிக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்யப்பட்டபோதும் புனருத்தாரணம் 1985 1990 களில் மீளவும் ஏற்பட்ட இனக்கலவரங்களினால் காலதமாகியது. இக்கோயில் முழுமையாக மீள் புனருத்தாரணம் செய்யப்பட்டு 6 ஜூன், 1999 இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆலயத்தை கட்டிக் காத்தவர்கள் நித்திய நைமித்திய கருமங்கள் எதுவித குறைபாடுகளும் இன்றி நடைபெறுவதற்காகக் காணிகளை மானியமாக வழங்கியுள்ளனர்.

திருகோணமலை விசுவநாத சுவாமி கோயில்
திருகோணமலை விசுவநாத சுவாமி கோயில் is located in இலங்கை
திருகோணமலை விசுவநாத சுவாமி கோயில்
திருகோணமலை விசுவநாத சுவாமி கோயில்
தேசப்படத்தில் சிவன் கோவில்
ஆள்கூறுகள்:8°34′41.98″N 81°13′47.29″E / 8.5783278°N 81.2298028°E / 8.5783278; 81.2298028ஆள்கூறுகள்: 8°34′41.98″N 81°13′47.29″E / 8.5783278°N 81.2298028°E / 8.5783278; 81.2298028
பெயர்
பெயர்:சிவன் கோவில்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:கிழக்கு மாகாணம்
மாவட்டம்:திருக்கோணமலை
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

இவ்வாலயம் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்நபனமண்டபம், ஸ்தம்பமண்டபம் ஆகிய மண்டபங்களை உடையதாக அமைந்திருக்கின்றது. மகாமண்டபத்தில் பிள்ளையார், முருகன், சண்டேஸ்வரர், பிரதோஷமூர்த்தி போன்ற உற்சவத் திருவுருவங்கள் காணப்படுகின்றன.

இவ்வாலய்த்தில் ஆறுகால நித்திய பூசையும், ஆனி மாதத்தில் உத்தரத் திதியைத் தீர்த்ததினமாகக் கொண்டு பத்து நாட்கள் மகோற்சவம் நடைபெற்றுவருகின்றது. நவராத்திரி, சிவராத்திரி, கௌரிநோன்பு, சோமவாரத் திருவிழா, திருவெம்பாவை, பிரதோஷத் திருவிழாக்கள், நடேசரபிஷேகங்கள், வருடப்பிறப்பு முதலிய நித்திய பூசைவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. திருவெம்பாவை காலத்தில் திருவாதவூரடிகள் புராணம் படித்து பயன்சொல்லும் வழமையானது.

உசாத்துணைதொகு

  1. திருகோணமலை விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி (சிவன்) கோவில் - மகா கும்பாபிஷேக மலர்