திருக்கழுக்குன்றம் வீரபத்திரர் கோயில்

திருக்கழுக்குன்றம்:-#அருள்மிகு #வீரபத்திரருக்கு அமைந்துள்ள கோயில்கள்.


வீரபத்திரர் பற்றி முதலில் அறிந்துகொள்வோம்;:- வீரபத்திரர் சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுளாகக் கருதப்படுகிறார்.சிவபெருமானை மருமகனாகக் கொண்ட கர்வத்தினால் தட்சண் சிவனை மதியாமலும் அவருக்கு கொடுக்க வேண்டிய அவிர்பாகத்தைக் கொடுக்காமலும் யாகத்தை நிகழ்த்தினான். நியாயம் கேட்டு நின்ற தாட்சாயணியையும் மதிக்காமல் பேசவே தாட்சாயணி யாகத்தீயில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள முனைய, ருத்திர தாண்டவடிய சிவனின் உடலெங்கும் தோன்றிய வியர்வைத் துளிகள் ஆயிரம் வீரபத்திரராகத் தோன்றி பின் அவை ஒன்றாகியதென்றும், கடுங்கோபத்துடன் யாகசாலை சென்று அங்கிருந்த தேவர், முனிவர் சகலரையும் துவம்சம் செய்தார் என்றும் ஈற்றில் தக்கனின் சிரசை தம் கைவாளினால் அறுக்க அவன் ஆட்டுக்கடா வடிவெடுத்து வீரபத்திரனிடம் மன்னிப்புக் கேட்டு நின்றான் எனவும் புராணங்கள் கூறும்.வீரபத்திரருக்கு “வீரம்” என்பதற்கு “அழகு” என்றும், “பத்திரம்” என்பதற்கு “காப்பவன்” என்றும் பொருள் கொண்டு “வீரம் காக்கும் கடவுள்” என்கின்றனர். தமிழ்நாட்டிலுள்ள பல சிவன் கோயில்களில் வீரபத்திரர் துணைத் தெய்வமாக வைக்கப்பட்டு தனிக் கோயில்களில் வழிபடப்படுகிறார்.


திருக்கழுக்குன்றத்தில் #வீரபத்திரர்:-திருக்கழுக்குன்றத்தில் மொத்தம் மூன்று வீரபத்திரர் கோயில்கள் உள்ளது. அவைகள் எங்கெங்குள்ளன என பார்க்கலாம். திருக்கழுக்குன்றம் அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர்

திருக்கழுக்குன்றம்.
கோயிலில் கொடிமரம் அருகில் அமைந்துள்ளது. இது சுமார் 10 அடி உயரம் கொண்டது. உயர்ந்த பீடத்தின் மீது நின்றபடி உள்ள வீரபத்திரர் போலவே தஞ்சையிலும் அமைந்துள்ளது.இறைவனுக்கு 10 கரங்கள் காண்பிக்கப்பட்டுள்ளது. தலையில் ஜ்வாலா மகுடம்,காதுகளில் பத்ர குண்டலம்.முகத்தில் தெளிவான புன்னகையுடன் காணப்படுகின்றது.கால்வரை நீண்ட மண்டைஓட்டுமாலை காணப்படுகின்றது.உத்ரபந்தம்.கடிபந்தம் காண்பிக்கப்பட்டுள்ளது.கையில் நீண்ட சூலமும் அதில் பாம்பும் உள்ளது.கால்களில் காப்பு,கழுத்தில் பாம்புமாலை,கைகளில் தடித்த காப்பு காண்பிக்கப்பட்டுள்ளது,இறைவன் முகத்தினை சுற்றி ஒளிவட்டம் காண்பிக்கப்பட்டுள்ளது:.கால் பாதத்தில் சரஸீம் தோளில் லகுவல்யம் வாகுபந்தம்.கையின் மேல் சரஸீம் காணப்படுகின்றது:. வலதுகாலை மேல்நோக்கி இடதுகால் போருக்கு தயாராவதுபோல் உள்ளது.இந்த #வீரபத்திரர் #அகோரவீரபத்திரர் என அழைக்கப்படுகின்றார்..சுமார் 125 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட #அகோரவீரபத்திரர் புகைப்படம் உங்கள் பார்வைக்கு....


சாந்தசொரூப #வீரபத்திரர்:-

திருக்கழுக்குன்றம்.
  1. திருக்கழுக்குன்றம் கிரிவல பாதையில் அடிவாரத்தில் நூலகம் எ;திரில் இந்த கோயில ;அமைந்துள்ளது. #சாந்தசொரூப #வீரபத்தரர் தமிழ்நாட்டில் இங்குமட்டும்தான் உள்ளது என கூறுகின்றார்கள்.மேலும் சுமார் 300 வருடங்களுக்கு மேற்பட்டது என தெரிவித்துள்ளார்கள்.சரியான விவரம் கிடைக்கவில்லை..


ஶ்ரீஅனுக்கிரகவீரபத்திரர்:-

திருக்கழுக்குன்றம் வீரபத்திரர்.

இந்த வீரபத்திரர் கோயிலினை யாவரும் அறிந்து இருக்கமாட்டார்கள். இது மலைவல பாதையில் நால்வர்கோயில் பேட்டையில் நால்வர்கோயில் எதிரில் (சமுதாய கூடம் பக்கத்தில்) அமைந்துள்ளது. சமீபத்தில் கட்டப்பட்ட ஆலயமாக இருக்கலாம்.


வீரபத்திரருக்கு மூன்று ஆலயங்கள் இருப்பது திருக்கழுக்குன்றத்துக்கு பெருமை... நமதுஊர்..#நமதுபெருமை... வாழ்கவளமுடன்