திருத்தந்தையின் ஆணை ஓலை
திருத்தந்தையின் ஆணை ஓலை (ஆங்கில மொழி: Papal bull) என்பது கத்தோலிக்க திருத்தந்தையால் வெளியிட்டப்படும் சட்ட ஆணையாகும். இவ்வகை ஆணைகள் 6ம் நூற்றாண்டு முதலே பழக்கத்தில் இருந்தாலும், 13ம் நூற்றாண்டிலேயே அதிகம் பயன்படுத்தப்பட்டது. 15ம் நூற்றாண்டில் திருத்தூதரக அலுவலகம் (Apostolic Chancery), ஆணை ஓலைகளின் பதிவகம் ("register of bulls"/registrum bullarum) எனப்பெயர் மாற்றப்பட்ட போது இவை அதிகாரப்பூர்வமானது.[1] இவ்வகை ஆணைஓலைகளின் தொடக்கத்தில் திருத்தந்தை தம் பெயருக்கு அடுத்து ஆயர், இறை அடியாருக்கு அடியார் என எழுதுவார் என்பது குறிக்கத்தக்கது.