திருப்பதி ஏழுமலை வெங்கடேசா

ராம நாராயணன் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா (Thirupathi Ezhumalai Venkatesa) 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்திய தமிழ் மொழித் திரைப்படம் ஆகும். இந்த நகைச்சுவை திரைப்படத்தை ராம நாராயணன் இயக்கியிருந்தார். . இத்திரைப்படத்தில் பிரபு, எஸ்.வி சேகர், வடிவேலு, ரோஜா, ஊர்வசி, கோவை சரளா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். திரைப்படத்தை என் ராதா தயாரித்தார். எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார். 1999 ஆம் ஆண்டு படம் வெளியானது. இந்த படம் ராம நாராயணனின் 100 ஆவது திரைப்படமாகும். திருப்பதி ஏழுமலை வெங்கடேசா இவருக்கு ஒரு வெற்றிப்படமாகவும் அமைந்தது[1][2][3].

திருப்பதி ( வடிவேலு ), ஏழுமலை ( எஸ். வி. சேகர் ) மற்றும் வெங்கடேசா ( பிரபு ) மூவரும் ஏழை நண்பர்கள் ஆவர். அவர்கள் எப்படியாவது பணக்காரர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள். பங்களா காவலாளியான நாச்சியப்பன் ( வெண்ணிற ஆடை மூர்த்தி ) என்பவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவர்கள் லலிதா ( கோவை சரளா ), பத்மினி ( ஊர்வசி ) மற்றும் ராகினி ( ரோஜா ). ஆகியோராவர். உரிமையாளர் விடுமுறையில் பங்களாவை விட்டு வெளியேறும்போது, நாச்சியப்பனின் மகள்கள் பங்களாவுக்குள் நுழைகின்றனர். பின்னர், நாச்சியப்பன் தனது உரிமையாளரின் பங்களா மேல் பகுதியை திருப்பதி, ஏழுமலை மற்றும் வெங்கடேசன் ஆகியோருக்கு வாடகைக்கு விடுகிறார். மூன்று ஆண்களும் இறுதியில் மூன்று பெண்களை மணக்கிறார்கள். அம்மூன்று ஆண்களும் தங்கள் மனைவிகளை எவ்வாறு நிர்வகிப்பார்கள் என்பதுதான் மீதமுள்ள கதை. நகைச்சுவையோடு இக்கதை சொல்லப்பட்டுள்ளது.

நடிகர்கள்

தொகு

திரைப்படத்திற்கான பின்னணி இசையையும் ஒலிப்பதிவையும் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்தார். 1999 இல் இத்திரைப்படம் வெளியானது. வைரமுத்து, பழ்னி பாரதி, கலைகுமார் மற்றும் ராம நாராயணன் ஆகிய பாடல் ஆசிரியர்கள் பாடல்கள் எழுதியிருந்தனர். [4][5][6]

தடம் பாடல் பாடகர்கள் கவிஞர் நேரம்
1 'ஆசை ஆசை பி. உன்னி கிருட்டிணன் ராம நாராயணன் 3:50
2 காதலுக்கு தூது சொல்லு' சுஜாதா மோகன், சுப்ரஜா, பி.எம். அம்ருதா வைரமுத்து 4:13
3 'நிலவோட தங்கச்சி மனோ, அனுராதா சிறீராம் கலைக்குமார் 4:36
4 திருப்பதி ஏழுமலை வெங்கடேசா மனோ [[எசு.என். சுரேந்தர், வடிவேலு பழனி பாரதி 4:20

விமர்சனங்கள்

தொகு

இந்த படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது [7]. பிரபு மற்றும் ரோஜா ஆகியோர் படத்தின் முதல் பாத்திரப்படைப்பாக இருந்தாலும் அதிகபட்ச திரை நேரத்தை வடிவேலும் கோவை சரளாவும் ஆக்கிரமிக்கின்றனர். இதன் விளைவாக படத்தில் வேடிக்கையான காட்சிகள் அதிகம் இடம்பெறுகின்றன என்று ஓர் இணையப் பத்திரிக்கையில் பாலாஜி பாலசுப்பிரமணி எழுதினார். வெண்ணிற ஆடை மூர்த்தியின் நகைச்சுவைகள் ரசிக்கும்படி இருக்கின்றன என்றும் அவர் கூறுகிறார். திரைப்படங்களில் அரிதாகவே காணப்படும் எஸ்.வி.சேகர் அவரது உரையாடல் வழங்கல் காரணமாக நம்மை முற்றிலும் சிரிக்க வைக்கிறார். நகைச்சுவை மற்றும் அவரைத் திருத்துவதற்கான திட்டம் ஆகிய இரண்டிலும் பிரபு மற்றும் ரோஜா படத்தின் பலவீனமான பகுதிகளைக் கொண்டுள்ளனர் [8].பாடல்கள் ஆர்வத்தை தூண்டும் பாடல்களாக இல்லை. பாடல்கள் படமாக்கிய விதமும் கற்பனைக்கு எட்டாத விதத்தில் உள்ளன. நகைச்சுவை படத்திற்கு ரோஜாவும் பிரபுவும் சரியாகப் பொருந்தவில்லை.

பிற மொழிகளில்

தொகு

தெலுங்கு மொழியில் திருமலா திருப்பதி வெங்கடேசா என்ற பெயரில் திரைப்படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இ.சட்டிபாபு இப்படத்தை இயக்கியிருந்தார். மேகா சிறீகாந், ரவி தேஜா, பிரமானந்தம், மகேசுவரி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். ரோஜாவும் கோவை சரளாவும் தங்கள் பாத்திரங்களை மறு பிரதி செய்தனர். மேலும் இந்த படம் கன்னடத்தில் சிவராம், அபிஜித் மற்றும் டென்னிஸ் கிருஷ்ணா ஆகியோர் நடிக்க யாரிகே பேடா துடு என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

ஆதாரம்

தொகு
  1. "Filmography of thiruppadhi ezhumalai venkatesa". cinesouth.com. Archived from the original on 2006-10-29. பார்க்கப்பட்ட நாள் 2012-12-01.
  2. "Thirupathi Ezhumalai Venkatesa". entertainment.oneindia.in. Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2012-12-01.
  3. A. Swamy. "Prabhu: The comeback story". cinematoday2.itgo.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-01.
  4. "Tirupathi Elumalai Venkatesa Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-01.
  5. "Tirupathi Elimalai Venkatesa". hummaa.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-01.
  6. "Download Tirupathi Elumalai Venkatesa by S.A. Rajkumar on Nokia Music". music.ovi.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-01.
  7. "Fine social comedy". New Straits Times: pp. 44. January 15, 2000. https://news.google.com/newspapers?nid=x8G803Bi31IC&dat=20000115&printsec=frontpage&hl=en. 
  8. Balaji Balasubramaniam. "Thirupathi Ezhumalai Venkatesa - Movie Review". bbthots.com. Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-06-10.

வெளி இணைப்புகள்

தொகு