திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் | |
மாவட்டம் | |
ஏலகிரி மலை | |
திருப்பத்தூர் மாவட்டம்: அமைந்துள்ள இடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
தலைநகரம் | திருப்பத்தூர் |
பகுதி | வட மாவட்டம் |
ஆட்சியர் |
திரு.தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப. |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப. |
நகராட்சிகள் | 4 |
வருவாய் கோட்டங்கள் | 2 |
வட்டங்கள் | 4 |
பேரூராட்சிகள் | 3 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 6 |
ஊராட்சிகள் | 208 |
வருவாய் கிராமங்கள் | 195 |
சட்டமன்றத் தொகுதிகள் | 4 |
மக்களவைத் தொகுதிகள் | 2 |
பரப்பளவு | 1831.99 ச.கி.மீ. |
மக்கள் தொகை |
12,79,953 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
635 xxx |
தொலைபேசிக் குறியீடு |
04179 |
வாகனப் பதிவு |
TN-83 |
இணையதளம் | tirupathur |
திருப்பத்தூர் மாவட்டம் (Tirupathur District) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். தமிழகத்தின் 35-ஆவது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் அறிவிக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருப்பத்தூர் ஆகும்.[1] இம்மாவட்டத்தை வேலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, 15 ஆகத்து 2019 அன்று திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.[2] திருப்பத்தூர் மாவட்டம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பிறகு திருப்பத்தூர் பகுதியை சேலம் மாவட்டத்திலிருந்து பிரித்து வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
வரலாறு
தொகு19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியாகவே இது இருந்தது. வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம், 1996 இல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது. பின்னர் வேலூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 15 ஆகஸ்டு 2019 அன்று, திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் நிறுவப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.[3] புதிய திருப்பத்தூர் மாவட்டத்தை 28 நவம்பர் 2019 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி. கே. பழனிச்சாமி முறைப்படி துவக்கி வைத்தார்.[4]
மாவட்ட எல்லைகள்
தொகுதிருப்பத்தூர் மாவட்டத்திற்கு மேற்கே கிருஷ்ணகிரி மாவட்டம், தெற்கு மற்றும் கிழக்கே திருவண்ணாமலை மாவட்டம், கிழக்கே வேலூர் மாவட்டம் மற்றும் வடக்கே ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களுக்கு இடையில் 1831.99 ச.கிமீ பரப்பளவு கொண்டதாக இதன் எல்லைகளாக அமைந்துள்ளது
மக்கள் தொகை
தொகுபுதியதாக பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்கள்தொகை 12,79,953 பேர் உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம்
தொகுதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி என 2 வருவாய் கோட்டங்களும், 4 வருவாய் வட்டங்களும், 15 குறுவட்டங்களும், 195 வருவாய் கிராமங்களும் கொண்டது.[5] [6]
வருவாய் கோட்டங்கள்
தொகு- திருப்பத்தூர் கோட்டம்
- வாணியம்பாடி கோட்டம்
வருவாய் வட்டங்கள்
தொகுஉள்ளாட்சி அமைப்புகள்
தொகுஇம்மாவட்டம் 4 நகராட்சிகளும், 3 பேரூராட்சிகளும் கொண்டது.[7]
ஊராட்சி ஒன்றியங்கள்
தொகுஇம்மாவட்டம் 6 ஊராட்சி ஒன்றியங்களும், 208 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[8]
அரசியல்
தொகுஇம்மாவட்டத்தின் பகுதிகள் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதியில் உள்ளன. மேலும் இம்மாவட்டம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி என 4 சட்டமன்றத் தொகுதிகள் கொண்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள் | |||
---|---|---|---|
16வது சட்டமன்றத் தொகுதி(2021-2026) | |||
47 | வாணியம்பாடி | திரு.கோ.செந்தில்குமார் | (அதிமுக) |
48 | ஆம்பூர் | திரு.ஆ.செ.விஸ்வநாதன் | (திமுக) |
49 | ஜோலார்பேட்டை | திரு.க.தேவராசு | (திமுக) |
50 | திருப்பத்தூர் | திரு.அ.நல்லதம்பி | (திமுக) |
தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளையும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, கலசப்பாக்கம், செங்கம், கீழ்பெண்ணாத்தூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளையும் இணைத்து, இந்த திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய 2 தொகுதிகளையும், வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மத்தியம், வேலூர் தெற்கு, வேலூர் மேற்கு, குடியாத்தம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளையும் இணைத்து, வேலூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
தொழில்கள்
தொகுதிருப்பத்தூர் தென்னிந்தியாவின் ஒரு தொழில்துறை மையமாகும். தோல் மற்றும் தோல் பொருட்கள் காலணிகள், ஆடைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்யப்படுகிறது பல பெரிய மற்றும் நடுத்தர தோல் தொழில்கள் உள்ளன. கனிம வளம் நிறைந்த மாவட்டம், செம்மண், செங்கல் களிமண் போன்ற கனிமங்களும் இந்த மாவட்டத்தில் காணப்படுகின்றன.
காவல்துறை அமைப்புகள்
தொகுதிருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்கான காவல்துறையில் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் ஒன்றும், இதன் கீழ் திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஆகிய 3 இடங்களில் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களும், இதன் கீழ் சட்டம்- ஒழுங்கிற்கான 20 காவல் நிலையங்களும், 4 மகளிர் காவல் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன
மேற்கோள்கள்
தொகு- ↑ RANIPET DISTRICT
- ↑ தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள்; அரசாணை வெளியீடு
- ↑ [1],[2][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 2 புதிய மாவட்டங்கள் இன்று உதயம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
- ↑ திருப்பத்தூர் மாவட்டம்-வருவாய் நிர்வாகம்
- ↑ புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
- ↑ திருப்பத்தூர் மாவட்டம்-உள்ளாட்சி நிர்வாகம்
- ↑ திருப்பத்தூர் மாவட்டம்- வளர்ச்சித்துறை