திருப்பூண்டி அகத்தீசுவரர் கோயில்

திருப்பூண்டி அகத்தீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம் தொகு

இக்கோயில் நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி சாலையில் 17 கிமீ தொலைவில் உள்ளது.[1]

இறைவன் தொகு

இங்குள்ள மூலவர் அகத்தீசுவரர் ஆவார்.[1]

சிறப்பு தொகு

கயிலாயத்தில் சிவபெருமானின் திருமணக்காட்சியைக் காண அனைவரும் வடப்புறம் சென்றபோது, தென் பகுதி உயரத் துவங்கியதால் அகத்தியரை இறைவன் அழைத்து நிலத்தைச் சமநிலைக்கு ஆக்குமாறு பணித்தார். தனக்கு இறைவனின் திருமணக்காட்சி கிடைக்காதே என்று அகத்தியர் வருந்தியதை உணர்ந்த சிவபெருமான் திருமறைக்காட்டில் திருமணக்கோலத்துடன் காட்சி தருவதாக கூறினார். வேதாரண்யத்தை அடையும் முன்பாக இங்கு இறைவனின் மேனியை அமைத்து வழிபட்ட சிறப்பு பெற்ற இடமாகும். இக்கோயிலில் கோளிலிநாதர் தீர்த்தவாரி அருளும் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளியிணைப்புகள் தொகு