திருமணம் பற்றிய புத்த மத கருத்துகள்

பௌத்த மதம், திருமணம் (Buddhist view of marriage) என்பதை ஒரு மதச்சார்பற்ற விடயமாகக் கருதுகிறது.[1] தங்கள் அரசுகளால் நிர்ணயிக்கப்பட்ட திருமணம் தொடர்பான குடியியல் சட்டங்களை பௌத்தர்கள் பின்பற்ற வேண்டுமென பௌத்த மதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.[2] பொதுவாகத் திருமணம் முடிந்தபிறகு பௌத்தர்கள், பௌத்தத் துறவிகளிடம் ஆசிர்வாதம் பெறுகின்றனர்.[2]

வரலாறு தொகு

கௌதம புத்தர், திருமணத்திற்கு எதிராக எதுவும் கூறவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக திருமணத்தின் சில சிரமங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதை தனது பராபவா சுத்தாவில் கூறியுள்ளார். ஒருவனுடைய வீழ்ச்சிக்குக் காரணம், அவன் மனைவியோடு இருப்பதல்ல; அவன் வேசியோடும் பல மனைவிகளோடும் இருப்பதும் இன்னொருவரின் மனைவியைத் தவறான எண்ணத்தோடு பார்த்தலும் தான் என்கிறார்.

பார்வை தொகு

புத்தர் மற்றும் அவரது சீடர்களின் சொற்பொழிவுகள் மற்றும் போதனைகளில் ஓரினச்சேர்க்கை கண்டனம் செய்யப்படவில்லை. திபெத் தலாய் லாமாவின் திபெத்திய பௌத்தம் உட்பட்ட அனைத்துப் பௌத்த பிரிவுகளிலும் கருணையும் அன்பும் வலியுறுத்தப்படுகிறது.

தலாய்லாமா திருமணம் பற்றிக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

மேற்குலகில் பலர் திருமணம் செய்து கொள்வதை விட்டுவிட்டனர்; அதனை இன்னொரு மனிதனைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக் கருதுவதில்லை. திருமணத்தை எளிதில் பெறக்கூடிய, எளிதில் கைவிடக்கூடிய நவீன திருமணங்களை, சுதந்திரமான ஆனால் குறைவான மனநிறைவு கொண்டதாகக் கொள்ளலாம்.[3]

பவுத்த மதம் திருமணத்தை ஊக்கப்படுத்தவோ, தடுக்கவோ இல்லை; ஆனால் சில வழிகாட்டுதல்களை அளிக்கிறது. பவுத்த அடிப்படைச் சட்டமான பன்காசிலா பாலியல் தவறான நடத்தையைக் கண்டிக்கிறது.[4][5] மேலும் திக்கா நிகாயா நூலில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை ஆதரிக்கிறது.[6]

விவாகரத்து தொகு

புத்த மதத்தில் திருமணம் மதம் சார்ந்தது அல்ல. எனவே விவாகரத்தும் தடை செய்யப்படவில்லை. தம்மானந்தர் என்பவர், உண்மையாகவே கணவன் மனைவி சேர்ந்து வாழ முடியாது; அவ்வாறு வாழ்வது பொறாமைக்கும் வெறுப்புக்கும் வழிவகுக்குமெனில் அவர்கள் தனியாகப் பிரிந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்கிறார்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "Personal Ceremonies: Marriage / Funeral Rites". Buddhanet.net. பார்க்கப்பட்ட நாள் 2012-06-06.
  2. 2.0 2.1 "A Basic Buddhism Guide: Buddhist Ethics". Buddhanet.net. பார்க்கப்பட்ட நாள் 2012-06-06.
  3. "HH Dalai Lama". Khandro.net. பார்க்கப்பட்ட நாள் 2012-06-06.
  4. "Buddhist view on marriage". Purifymind.com. பார்க்கப்பட்ட நாள் 2012-06-06.
  5. "Buddhist practices". Londonbuddhistvihara.org. Archived from the original on 2019-10-27. பார்க்கப்பட்ட நாள் 2012-06-06.
  6. "Sigalovada Sutta". Accesstoinsight.org. 2012-03-24. பார்க்கப்பட்ட நாள் 2012-06-06.
  7. "A Happy Married Life: A Buddhist Perspective". Accesstoinsight.org. பார்க்கப்பட்ட நாள் 2012-06-06.

வெளி இணைப்புகள் தொகு