திருமயிலாடி சுந்தரேசுவரர் கோயில்
திருமயிலாடி சுந்தரேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுகொள்ளிடம் ஆற்றின் தென்கரையில், சீர்காழிக்கு வடக்கே 5 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள மூலவர் சுந்தரேசுவரர் என்றழைக்கப்படுகிறர். இறைவன் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். இங்குள்ள இறைவி பெரியநாயகி என்றும் பிரகதாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார். கண்வ முனிவர் வழிபட்டு பேறு பெற்ற தலமாகும்.[1]
வரலாறு
தொகுஉமையம்மை மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டதாகக் கூறுவர். 60 அடி உயர ராஜகோபுரமும், ஒரு திருச்சற்றும் கொண்டு கோயில் அமைந்துள்ளது.[1]