திருமுருகாற்றுப்படை பரிதியார் உரை

திருமுருகாற்றுப்படை பரிதியார் உரை 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். [1] திருமுருகாற்றுப்படைக்கு நச்சினார்க்கினியர், பரிமேலழகர், உரையாசிரியர்[2], கவிப்பெருமாள் [3], பரிதியார் முதலான பலர். ஒரு நூல் 'திருமுருகாற்றுப்படை உரைக்கொத்து' என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. வேலம்பாளையம் வித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டருக்குக் கிடைத்த ஏட்டின் துணை கொண்டு காசிமடத்தார் இதனை வெளியிட்டுள்ளனர்.

இதில் காணப்படும் பரிதியார் உரையின் நடையையும், தன்மையையும் நோக்கும்போது இந்த உரை திருக்குறளுக்கு உரை எழுதிய பரிதியார் எழுதிய உரையே எனக் கொள்வதற்குத் தடை ஏதும் இல்லை. பரிதியாரின் திருமுருகாற்றுப்படை உரை நூலில் உள்ள சிறப்புப் பாயிரம்

நக்கீரர் செய்த நன் முருகாற்றுப்படைக்குத்
தக்க உரை சொன்ன தகுதியான் - மிக்கு உலகில்
பன்னூல் அறிந்த பரிதி மறைப் புலவன்
தொன்னூல் அறிவால் துணிந்து.

அடிக்குறிப்பு

தொகு
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 84. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. இளம்பூரணர்
  3. பரிதியார் என்பவரே போலும் என்னும் குறிப்பினை மு. அருணாசலம் தந்துள்ளார்