திருவண்ணாமலை மாநகராட்சி
(திருவண்ணாமலை பெருநகராட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருவண்ணாமலை மாநகராட்சி இந்தியாவின் தமிழக மாநிலத்தில் 2024 உருவான புதிய மாநகராட்சியாகும். இது மிகப் பழமையான நகராட்சிகளுள் ஒன்றாக சனவரி 12 , 1866 அன்று இது உருவாக்கப்பட்டது. இதன் பட்டயம் (தனிபுரிமை சாசனம்) டிசம்பர் 2, 1865ல் கிழக்கு இந்திய கம்பனியரால் எற்படுத்தப்பட்ட , திருவண்ணாமலை நகராட்சி மற்றும் ஏனையப் பிரதேசங்கள் என்ற அரசியலமைப்பின் பெயரால் கோட்டையின் 21 மைல்கள் தொலைவு எல்லையை வரையறையாகக் கொண்டு செயற்பட்டது. இது திருவண்ணாமலை நகராண்மைக் கழகம் என்னும் பெயரில் இந்தியா விடுதலை அடையும் வரை செயற்பட்டது.[1][2][3]
- திருவண்ணாமலை 1866 இல் "மூன்றாம் நிலை நகராட்சி"யாக உருவாக்கபெற்றது .
- 1946 இல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டு ,
- 1971 இல் முதல் நிலை நகரட்சியாக உருவானது .
- 1998 இல் தேர்வு நிலை நகராட்சியாக ,
- 2003 இல் "சிறப்பு நிலை நகராட்சி"(பெருநகராட்சி) யாகவும் தரம் உயர்த்தப்பட்டது .
- 2024 மார்ச் 15 இல் 18 ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக உயர்த்தப்பட்டது. [4][5]
திருவண்ணாமலை பெருநகராட்சி அன்றிருந்தநிலை மற்றும் தற்பொழுது
தொகுஆண்டு | முந்தய நகராட்சியின் நிலை |
தற்பொழுதய நகராட்சியின் நிலை | |
---|---|---|---|
கோட்டம் | 1941 | 17 | 39 |
மக்கள் தொகை | 1941 | 36 ஆயிரம் | 1.75 இலட்சம் |
பரப்பளவு | 1941 | 2.3 ச.மைல் | 14 ச.கி.மீ |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kancheepuram upgraded Special Grade Municipality - TAMIL NADU - The Hindu". தி இந்து.
- ↑ "Unknown" (PDF).[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ gazzetter if india [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Corporation updates". https://www.hindutamil.in/news/tamilnadu/1295352-which-local-bodies-will-be-merged-into-the-four-new-corporations-gazetted-by-tn-govt.html.
- ↑ "New updates from Government of Tamil Naud". https://www.dinakaran.com/tamilnadu-25municipalcorporations-15municipalcorporations-formed-dmkregime-chiefminister/.