திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை [1] என்னும் சைவ நூல் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. மும்மணிக்கோவை என்பது ஒரு சிற்றிலக்கியம் இதன் ஆசிரியர் பட்டணத்துப் பிள்ளையார். சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதியில் வாழ்ந்தவர். காலம் பத்தாம் நூற்றாண்டு.

திருவிடைமருதூர்க் கோயிலிலுள்ள சிவபெருமானை இந்த நூல் போற்றிப் பாடுகிறது.

நூல் அமைதி

தொகு

இந்த ஆசிரியர் இயற்றிய திருக்கழுமல மும்மணிக்கோவையிலுள்ள ஆசிரியப்பாக்கள் இணைகுறள் ஆசியப்பாக்களாக உள்ளன. இந்த நூல் நேரிசை ஆசிரியப்பாக்களைக் கொண்டுள்ளது.

வெண்பா (5)
கண்ணென்றும் நந்தமர்க்கோர் காப்பென்றும் கற்றிருக்கும்
எண்ணென்றும் மூல எழுத்தென்றும் – ஒண்ணை
மருதவப்பா என்றுமுனை வாழ்த்தாரேல் மற்றும்
கருதவப்பால் உண்டோ கதி.[2]
கட்டளைக்கலித்துறை (9)
வந்திக்கண் டாய்அடி யாரைக்கண் டான்மற வாதுநெஞ்சே
சிந்திக்கண் டாய்அரன் செம்பொன் கழல்திரு மாமருந்தைச்
சந்திக்கண் டாயில்லை யாயின் நமன்தமர் தாம்கொடுபோய்
உந்திக்கண் டாய்நிர யத்துன்னை வீழ்த்தி உழக்குவரே.
புதுமையான சொல்-தொடர்கள்
வந்திக்கண்டாய், சிந்திக்கண்டாய், சந்திக்கண்டாய், உந்திக்கண்டாய் என்னும் புதுமையான தொடர்கள் இவரது நூலில் காணப்படுகின்றன. அவை முறையே வந்திப்பாயாக (வாழ்த்துவாயாக), சிந்திப்பாயாக, சந்திப்பாயாக, உந்திப்பாயாக (துள்ளிக் குதித்துச் செல்வாயாக) என்னும் பொருள் தருபவை.

காலம் கணித்த கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (பாடல் மூலம்)
  2. கண் அவன். காப்பு அவன். எண்ணம் அவன். மூல எழுத்து அவன். அவன் மருத மரத்தடி அப்பன். அவனே கதி என வாழ்த்துவோம்.