திருவிதாங்கூர் மகாராஜாக்கள்

இந்தியாவின் திருவிதாங்கூர் இராச்சியத்தின் ஆட்சியாளரின் முதன்மைப் பட்டம்

திருவிதாங்கூர் மகாராஜாக்கள் (Maharajas of Travancore) என்பது இந்தியாவின் கேரளாவின் தெற்குப் பகுதியில் இருந்த திருவிதாங்கூர் இராச்சியத்தின் ஆட்சியாளர்களின் முதன்மைப் பட்டமாகும். திருவிதாங்கூர் மகாராஜா 1949 வரை திருவிதாங்கூர் இந்தியாவுடன் இணைக்கப்படும் வரை திருவிதாங்கூரின் தலைசிறந்த ஆட்சியாளராக இருந்தார். அப்போதிருந்து, திருவிதாங்கூர் மகாராஜா ஒரு பெயரிடப்பட்ட பதவியாக இருக்கிறது.

திருவிதாங்கூர் இராச்சியத்தின் மகாராஜாக்கள்

தொகு
Image Name Reign
முதலாம் ராமவர்மா 1663-1672
முதலாம் ஆதித்ய வர்மா 1672-1677
உமையம்மா ராணி[1] 1677-1684
இரவி வர்மா 1684-1718
இரண்டாம் ஆதித்ய வர்மா 1718-1719
உன்னி கேரள வர்மா 1719-1724
இரண்டாம் ராம வர்மா 1724-1729
  முதலாம் ஆயில்யம் திருநாள் மார்த்தாண்ட வர்மர் 1729–1758
  முதலாம் கார்த்திகைத் திருநாள் இராமவர்மன் 1758–1798
  அவிட்டம் திருநாள் (முதலாம் பலராம வர்மா) 1798–1810
  ஆயில்யம் திருநாள் கௌரி லட்சுமி பாய் 1810–1813 (இராணி)
1813–1815 (ஆட்சிப் பிரதிநிதி)
 

உத்திரட்டாதி திருநாள் கௌரி பார்வதி பாயி

1815–1829 (ஆட்சிப் பிரதிநிதி)
  இரண்டாம் சுவாதித் திருநாள் ராம வர்மா 1829–1846
  இரண்டாம் உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா 1846–1860
  மூன்றாம் ஆயில்யம் திருநாள் இராமவர்மன் 1860–1880
  நான்காம் விசாகம் திருநாள் இராம வர்மன் 1880–1885
  ஐந்தாம் ராம வர்மா மூலம் திருநாள் 1885–1924
  பூராடம் திருநாள் சேது லட்சுமி பாயி 1924–1931 (ஆட்சிப் பிரதிநிதி)
  இரண்டாம் சித்திரைத் திருநாள் பலராம வர்மன் 1931–1971

மகாராஜா பட்டம்

தொகு

1947-இல் இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, மகாராஜா சித்திரை திருநாள் தனது மாநிலத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைக்க ஒப்புக்கொண்டார். திருவிதாங்கூர் அண்டை நாடான கொச்சி மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. சித்தரை திருநாள் திருவிதாங்கூர்-கொச்சி ஒன்றியத்தின் "இராஜ்பிரமுகராக" 1 ஜூலை 1949 முதல் 31 அக்டோபர் 1956 வரை பணியாற்றினார். நவம்பர் 1, 1956 அன்று, திருவிதாங்கூர்-கொச்சியின் மலையாள மொழி பேசும் பகுதிகளை அண்டை மாநிலமான சென்னை மாகாணத்துடன் இணைத்து கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது. அத்துடன் சித்திரை திருநாளின் "ராஜ்பிரமுக்" அலுவலகம் முடிவுக்கு வந்தது. 28 டிசம்பர் 1971 அன்று, இந்திய அரசாங்கம் பழைய சமஸ்தானங்களின் ஆட்சியாளர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ததால், சித்திரை திருநாள் தனது தனிப்பட்ட பணபலன்கள் மற்றும் பிற சலுகைகளை இழந்தார். அன்றிலிருந்து திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் தலைவரே ஒழிக்கப்பட்ட பட்டத்தைத் தாங்கி நிற்கிறார். திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் தொடர்பான சடங்குகளில் திருவிதாங்கூர் மகாராஜாவாக தனது கடமைகளை நிறைவேற்றுகிறார். 2012 ஆம் ஆண்டு, கேரள உயர் நீதிமன்றம் "முஜீபா ரஹ்மான் எதிர் கேரள மாநிலம்" என்ற வழக்கு மீதான தீர்ப்பில், அரசியலமைப்புச் சட்டத்தின் 26-வது திருத்தத்தின் மூலம் இந்திய மாநிலங்களின் ஆட்சியாளர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகள் பறிக்கப்பட்ட 363-வது பிரிவு நீக்கப்பட்டது. இன்னும் ஆட்சியாளர்களின் பெயரும் பட்டமும் அப்படியே உள்ளது. பெயர்கள் மற்றும் பட்டங்கள் அரசியலமைப்பின் 291 மற்றும் 362 வது பிரிவுகளின் கீழ் உரிமைகள் அல்லது சலுகைகள் என்று கருதப்படாததால் அது பாதிக்கப்படவில்லை. எனவே பட்டங்கள் அரசால் ஒழிக்கப்படவில்லை; அவர்களின் அரசியல் அதிகாரங்களும் பணப்பலன்கள் பெறும் உரிமை மட்டுமே ரத்து செய்யப்பட்டது.[2] [3]

Image Name Period
  இரண்டாம் சித்திரைத் திருநாள் பலராம வர்மன் 1971–1991
  மூன்றாம் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மன் 1991–2013
  ஆறாம் மூலம் திருநாள் இராம வர்மன் 2013 – தற்போது வரை

மேலும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Kingdom of Travancore and the Travancore Royal Family genealogy project".
  2. hanif, mahir. "'His Highness' isn't unconstitutional: Kerala high court". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (The Times Group) (Kochi) இம் மூலத்தில் இருந்து 18 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131218055254/http://timesofindia.indiatimes.com/city/kochi/His-Highness-isnt-unconstitutional-Kerala-high-court/articleshow/27492597.cms. பார்த்த நாள்: 24 November 2014. 
  3. . Text

வெளி இணைப்புகள்

தொகு