திருவேகம்பமுடையார் திருவந்தாதி

திருவேகம்பமுடையார் திருவந்தாதி [1] என்னும் சைவ நூல் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. அந்தாதி என்பது ஒரு சிற்றிலக்கியம் இதன் ஆசிரியர் பட்டணத்துப் பிள்ளையார்(திருவெண்காடர் என்ற அழைக்கப்பட்ட பட்டினத்தார்). காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தவர். காலம் பத்தாம் நூற்றாண்டு. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலிலுள்ள சிவபெருமானை இந்த நூல் போற்றிப் பாடுகிறது.

நூல் அமைதி

தொகு

இந்த நூலில் கட்டளைக்கலித்துறைப் பாடல்கள் 100 அந்தாதியாகத் தொடுக்கப்பட்டுள்ளன.

நூல் ‘மெய்த்தொண்டர்’ என்று தொடங்கி ‘மெய்த்தொண்டரே’ என முடிகிறது. அந்தாதி நூல் அமையும் முறை இது.

பாடல் 98
இன்றுசெய் வோமித னிற்றிரு வேகம்பர்க்(கு) எத்தனையும்
நன்றுசெய் வோம்பணி நாளையென் றுள்ளிநெஞ் சேயுடலில்
சென்றுசெ யாரை விடும்துணை நாளும்வி டாதடிமை
நின்றுசெய் வாரவர் தங்களின் நீள்நெறி காட்டுவரே.[2]

காலம் கணித்த கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. திருவேகம்பமுடையார் திருவந்தாதி பாடல் மூலம்
  2. ஏகம்பநாதருக்கு அடிமை இன்று இதனால் செய்வோம். நன்று செய்வோம். நாளை என எண்ணாமல் நாளும் செய்வோம். விடாது செய்வோம். செய்தால் அவர் நெடிது வாழ நெறி காட்டுவார்.