திரோய் கொமுட்டர் நிலையம்


திரோய் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Tiroi Komuter Station; மலாய்: Stesen Komuter Tiroi) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம், திரோய் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும்.

 KB13 

திரோய் கொமுட்டர் நிலையம்
Tiroi Komuter Station
பொது தகவல்கள்
அமைவிடம்திரோய், சிரம்பான் மாவட்டம், நெகிரி செம்பிலான்,
 மலேசியா
ஆள்கூறுகள்2°44′29″N 101°52′18″E / 2.74139°N 101.87167°E / 2.74139; 101.87167
உரிமம் மலாயா தொடருந்து
இயக்குபவர்மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள் (கேடிஎம் கொமுட்டர்)
 பத்துமலை-புலாவ் செபாங் 
 மலாயா மேற்கு கடற்கரை 
நடைமேடை2 பக்க நடைமேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KB13 
வரலாறு
திறக்கப்பட்டது KB13  1995
மறுநிர்மாணம்1995
மின்சாரமயம்1995
சேவைகள்
முந்தைய நிலையம்   திரோய் கொமுட்டர் நிலையம்   அடுத்த நிலையம்
லாபு நிலையம்
<<<
பத்துமலை நிலையம்
 

பத்துமலை புலாவ் செபாங் வழித்தடம்
 
சிரம்பான் நிலையம்
>>>
புலாவ் செபாங் தம்பின்
அமைவிடம்
Map
திரோய் நிலையம்

லாபு சாலையின் 7-ஆவது கிலோமீட்டரில், தாமான் திரோய் எனும் ஒரு சிறிய வீடமைப்பு பகுதிக்கு அடுத்ததாக இந்த நிலையம் அமைந்துள்ளது. முன்பு இந்த நிலையம் திரோய் தொடருந்து நிலையம் (Tiroi Railway Station) என்று அழைக்கப்பட்டது.

1948-1960 மலாயா அவசரகாலத்தின் போது மலாயா பொதுவுடைமை கட்சியின் ஆதரவாளர்களால் அழிக்கப்பட்ட பழைய நிலையத்திற்குப் பதிலாக புதிய நிலையம் கட்டப்பட்டது. அதே நிலையம் 1995-ஆம் ஆண்டில் செப்பனிடப்பட்டது.[1]

பொது

தொகு

திரோய் நகரப் பகுதியில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், திரோய் நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது. சிரம்பான் வழித்தடம் என்றும்; காஜாங் வழித்தடம் என்றும் அழைக்கப்பட்ட புலாவ் செபாங் வழித்தடத்தில் இந்த நிலையம் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளது.[2]

மிகக் குறைவான பயணிகளுக்கு சேவை செய்யும் பல கொமுட்டர் நிலையங்களில் இந்த நிலையம் ஒன்றாகும். இருப்பினும், அண்மைய காலங்களில், திரோய் நகர்ப்பகுதிக்கு அருகில் புதிய குடியிருப்புகள் உருவாகி வருவதால், இந்த நிலையத்தின் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.[2]

வழித்தடங்கள்

தொகு

இந்த நிலையத்தில் 2 பக்க நடைமேடைகள்; 2 வழித்தடங்கள் உள்ளன. பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் சேவை செய்யப்படுகிறது.

இந்த நிலையம் 1995-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையத்தில் பயணச் சீட்டு வழங்கிடம் மற்றும் இரண்டு பயணச் சீட்டு விற்பனை இயந்திரங்களும் உள்ளன.[3]

திரோய் நிலையத்திலிருந்து கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்திற்கு கேடிஎம் கொமுட்டர் மூலமாகச் செல்வதற்கு ஒரு மணி நேரம் 15 - 20 நிமிடங்கள் பிடிக்கும்.[4]

மேலும் காண்க

தொகு

திரோய் நிலையக் காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tiroi KTM Station – klia2.info".
  2. 2.0 2.1 "The Tiroi KTM Komuter Station is a KTM Komuter train halt forms part of a common KTM Komuter railway line in Seremban Route. The Station was rebuilt and opened on November 1995. It is a KTM Komuter train station located next to the small housing estate of Taman Tiroi, Negeri Sembilan, on the 7th kilometre of Jalan Labu". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 5 April 2024.
  3. "KTM Komuter – Tiroi Station Facilities". MALAYSIA CENTRAL (ID). 23 December 2010. பார்க்கப்பட்ட நாள் 5 April 2024.
  4. "The duration of the train journey by Komuter to KL Sentral station from KTM Tiroi station is approximately one hour and 15 - 20 minutes". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 5 April 2024.

வெளி இணைப்புகள்

தொகு