திறந்த முறைமை இடைமுகத்தொடர்பு வலைப்பின்னல்

(திறந்த முறைமை வலைப்பின்னல் மாதிரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திறந்த முறைமை இடைமுகத்தொடர்பு வலைப்பின்னல் (Open Systems Interconnection model, OSI model) என்பது வலைப்பின்னலின் போது மென்பொருள் வன்பொருட்களின் வரையறையில் தங்கியிருக்காது ஏதாவது ஒரு வித்தியாசமான தளங்களில் இருந்து தொடர்பாடலுக்கு இடமளிக்கும் முறைமை ஆகும். இது பன்னாட்டு வணிகத்தை சிறந்த நிலைக்கு கொண்டு வரும் வடிவமைப்பாகும்.

முக்கியத்துவம்தொகு

முக்காலங்களில் தொடர்பாடல் பாரிய கணனிகளை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது. அக்கணனிகளுடன் வேறு பல உபகரணங்கள் பல இணைக்கப்பட்டன.வலைப்பியன்னலின் செயற்பாடுகள் அதிகரித்ததன் காரணமாக அச்செயற்பாடுகளை பகுதிகளாக பிரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. முக்காலத்தில் கணனி வலை முறைமைகளின் தொடர்பாடல் வன்பொருட்களின் வரையறையில் தங்கியிருந்தது போலவே அரச சார்பிலோ/ தனியார் கணனி விற்பனையாளர்களாலோ பரவலாக அளவில் வலையமைப்பு செய்யப்பட்டது. இவ்வலைகளில் தொடர்பாடலில் பிரச்சினை எழுந்ததால் பாெது வலைப்படுத்தலில் முக்கியத்துவம் ஏற்பட்டது.

இதற்கு தீர்வாக ஜெனீவாவின் சர்வதேச தர நிர்ணயத்தின் மூலம் திறந்த முறைமை இடைமுகத்தொடர்பு வடிவமைப்பு வலைப்பின்னல் உருவாக்கப்பட்டது. வலையமைப்பில் உள்ள ஒவ்வொரு கணனியு் வேறொரு வலையமைப்பில் உள்ள கணனியுடன் தொடர்புபட்டு தகவல்களை பரிமாற்றும் முறை இச் சர்வதேச தரநிர்ணய நிறுவனத்தின் வடிவமைப்பில் விபரிக்கப்பட்டுள்ளது. இது 07 அடுக்குகளினாலான ஒப்பீட்டு வடிவமைப்பு ஆகும். 'தடித்த எழுத்துக்கள்'தடித்த எழுத்துக்கள்'

அடுக்குகள்தொகு

திறந்த முறைமை இடைமுகத்தொடர்பு வடிவமைப்பு வலையமைப்பின் 07 அடுக்குகள்:

 1. பெளதிக நிலை அடுக்கு (Physical Layer)
 2. தரவு இணைப்பு அடுக்கு (Data link Layer)
 3. பணிப்பின்னல் அடுக்கு (Network Layer)
 4. போக்குவரத்து அடுக்கு (Transport Layer)
 5. தொடர் அடுக்கு (Session Layer)
 6. முன்வைத்தல் அடுக்கு (Presentation Layer)
 7. பிரயோக அடுக்கு (Application Layer)

தொடர்பாடலின் போது இரு முறைமைகளிற்கிடையில் இடைமுகத்தொடர்பு அடுக்குகள் காணப்படும். அனுப்புபவர் பெறுபவருக்கு தரவுகளை அனுப்பும் போது அனுப்பும் முனையில் இருந்து தரவுகள் ஏறுவரிசையாக செல்லும். அதாவது பிரயோக அடுக்கில் இருந்து பெளதிக நிலை அடுக்கிற்கு செல்லும். பெறுபவருக்கு தரவுகள் கிடைக்கும் போது அவை இறங்கு வரிசையில் செல்லும். அதாவது பெளதீக நிலை அடுக்கில் இருந்து பிரயோக அடுக்கிற்கு செல்லும்.

பிரயோக அடுக்குதொகு

பயன்முறை அடுக்கு (application layer 7) என்பது OSI MODEL ல் மேல்மட்டத்தில் உள்ளது. பிரயோக மென்பொருட்கள் வலையுடன் இடைத்தொடர்பை ஏற்படுத்தும் விதத்தை காட்டும். இது சேவையின் தரம் , தொடர்பாடல் சோடி என்பவற்றை அறிந்து கொண்டு பயனரின் செயற்பாட்டிற்கு ஒத்தாசை வழங்கும். பயனரின் அடையாளம் , தனித்துவம் மற்றும் தரவுகள் அமைந்திருக்கு்ம் முறை என்பவற்றை கருத்திற் கொண்டு இயங்குகின்ற இவ்வடுக்கு பிரயோகத்திற்கு விசேடமானது. கோவை பரிமாற்ற சேவைகள், மின்னஞசல் போன்ற சேவைகள் இவ்வடுக்கில் அடங்கும். இவ்வடுக்கில் சேரும் நெறிமுறைகள் :

           FTP
           DNS
           HTTP
           SMTP
           TELE NET 

முன்வைத்தல் அடுக்குதொகு

தரவுக் குறிப்பீட்டு அடுக்கு (Presentation Layer 6) தரவு சார்பான முன்வைப்புகள், பரிவர்த்தனைகள், குறியீடுகள் போன்றவற்றை செய்யும் முறையினை இவ்வடுக்கில் காட்டும். இவ்வடுக்கில் பயன்படும் நெறிமுறைகள் :

    MIME - Multipurpose Internet Mail Extension
    XDR - External Data 

தொடர் அடுக்குதொகு

பிரயோகங்களிற்கிடையே தொடர்பை ஏற்படுத்துவது தொடர்ச்சியாக கொண்டு செல்வது நிறைவு செய்வது இவ்வடுக்கிலாகும். இங்கு பயன்படும் நெறிமுறைகள் :

    SIP - Session Initiation Protocol
    RTP - Real time Transport Protocol

போக்குவரத்து அடுக்குதொகு

உபசரிப்பாளருக்கும் (host) தொடர்பாடல் முனைக்கும் இடையில் தரவுகளை பரிமாற்ற் செய்யும். இதில் பயன்படும் நெறிமுறைகள் :

    TCP - Transmission Control Protocol
    UDP - User Data gram Protocol

பணிப்பின்னல் அடுக்குதொகு

தொடர்பாடல் வலைப்பின்னல்களிற்கு இடையில் மாறுவது அதற்கான பாதையை அமைத்துக் கொடுப்பது , ஓர் தொடர்பாடல் இலக்கிலிருந்து இன்னுமொரு இலக்கிற்கு தரவுகளை ஊடுகடத்தல் என்பன இதில் விபரிக்கப்படும். பாதையமைத்தல் , தரவுகளை செலுத்துதல் போன்றவற்றிற்கான முகவரி தயாரித்தல் , தடைகளை பரிகாலித்தல் , தரவுப் பொதிகளை முறையாக தயாரித்தல் போன்றவை விபரிக்கப்படும். நெறிமுறைகள் :

   IP - Internet Protocol
   RIP - Routing Information Protocol
   ICMP - Internet Control Message Protocol

தரவு இணைப்பு அடுக்குதொகு

இதில் தரவுகள் Bit களாக குறியீடு செய்யப்படும். பாய்ச்சல் கட்டுப்பாடு இதன் மூலம் விபரிக்கப்படும். நெறிமுறைகள் :

   PPP - Point to Point Protocol
   PPTP - Point to Point Tunaling Protocol

பெளதிக நிலை அடுக்குதொகு

இவ்வடுக்கிலேயே ஊடகம் ஒன்றின் மூலம் தரவுகள் ஊடுகடத்தல் செய்யப்படும். அதாவது ஊடகம் தரவுகளின் வேகம் , ஊடுகடத்தலின் வகை, ஊடுகடத்தல் முறை என்பன விளக்கப்படும். [1]

 1. ICT advance level guide book